1) யோவான் என்பவர் யார்? கடவுளால் அனுப்பப்பட்டவரும் சீடரும் ஆவார். (1:6) 2) யோவான் இந்நற்செய்தியைத் தவிர, வேறு புதிய ஏற்பாட்டு நூல்கள் ஏதேனும் எழுதினாரா? ஆம், மூன்று திருமுகங்களும், திருவெளிப்பாடும் எழுதியவர் இவரே. 3) யோவான் தன்னுடைய நற்செய்தியை எவ்வாறு ஆரம்பிக்கின்றார்? "தொடக்கத்தில் வாக்கு இருந்தது: அவ்வாக்கு கடவுளோடு இருந்தது: அவ்வாக்கு கடவுளாயுமிருந்தது". (1:1) 4)"வாக்கு" என்பதன் பொருள் என்ன? தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன். 5) "வாக்கு மனுவுருவானார்" என்றால் என்ன? தமதிருத்துவத்தின் இரண்டாம் ஆளாகிய சுதன் மனிதரானார் என்பது பொருள். 6) திருமுழுக்கு யோவானைப்பற்றி உரைத்தது யார்? எசாயா இறைவாக்கினர். (1:23) 7) எசாயா இறைவாக்கினர் திருமுழுக்கு சேயாவானைப்பற்றி உரைத்தது என்ன? ஆண்டவருக்காக வழியை செம்மையாக்குங்கள் என பாலை நிலத்தில் குரல் ஒன்று கேட்கின்றது. (1:23) 8) யோவான் இயேசுவைப்பற்றி கூறியது என்ன? " இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். (1:29) 9) " கேபா" என்றால் என்ன? " பாறை" என்பது பொருள். (1:42) 10) பிலிப்பு எந்த ஊரைச் சேர்ந்தவர்? பெத்சாயிதா. (1:44) 11) பிலிப்பு இயேசுவிடம் யாரை அழைத்து வந்தார்? நத்தனியேல். (1:45) 12) நத்தனியேல் தம்மிடம் வருவதைக் கண்ட இயேசு, அவரை குறித்து கூறியது என்ன? " இவர் உண்மையான இஸ்ராயேலர், கபடற்றவர்" (1:47) 13) இயேசு செய்த முதல் புதுமை என்ன? கானாவூரில் தண்ணீரை திராட்சை இரமாக மாற்றியது. (2:11) 14) இயேசு எத்தனை தண்ணீர் நிறைந்த கல்தொட்டிகளை, திராட்சை இரசமாக மாற்றினார்? ஆறு. (2:6) 15) ஜெருசலேம் ஆலயத்தை கட்டி முடிக்க எத்தனை ஆண்டுகள் எடுத்தன? 46 ஆண்டுகள். (2:20) 16) இரவில் இயேசுவைக் காண வந்தவர் யார்? நிக்கொதேமு. (3:1) 17) யோவான் எங்கே திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார்? சலீம் என்னும் இடத்திற்கு அருகில் உள்ள அயினோன் என்னும் இடத்தில். (3:23) 18) இயேசு சமாரியப் பெண் ஒருவரை, மனமாற்றிய ஊர் எது? சிக்கார் (4:5) 19) இயேசு சமாரியப் பெண்ணிடமிருந்து கேட்டது என்ன? தண்ணீர் கேட்டார். (4:7) 20) இயேசு அப் பெண்ணிற்கு என்ன கொடுப்பதாக வாக்களித்தார்? வாழ்வு தரும் தண்ணீர். (4:7) 21) சிக்கார் என்னும் ஊரில் இயேசு எத்தனை நாட்கள் தங்கியிருந்தார்? இரண்டு நாட்கள். (4:43) 22) ஐந்து மண்டபங்கள் கொண்ட பெற்சதா என்னும் குளம் எங்கே இருந்தது? எருசலேமில், ஆட்டு வாயிலுக்கு அருகில். (5:42) 23) சிறுவன் ஒருவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன என இயேசுவிடம் கூறியது யார்? ஆந்திரேயா. (6:8) 24) இயேசு ஐந்து வாற்கோதுமை அப்பங்களை கொண்டு எத்தனை பேருக்கு உணவளித்தார்? ஏறக்குறைய ஐயாயிரம். (6:10) 25) இயேசு மக்களுக்கு எவ்வகையான உணவு அளிப்பதாக வாக்களித்தார்? தனது சதையை உணவாகக் கொடுக்க வாக்களித்தார் (6:51) 26) இதைக் கேட்ட மக்கள் இயேசுவை நம்பினார்களா? இல்லை. பலர் அவரை விட்டு விலகினர். (6:66) 27) யூதாசைப்பற்றி இயேசு கூறியது என்ன? உங்களுள் ஒருவன் அலகையாய் இருக்கிறான். (6:70) 28) விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கூட்டிக் கொண்டு வந்த மக்களிடம், அவர் கூறியது என்ன? " உங்களுள் பாவம் இல்லாதவர், முதலில் கல் எறியட்டும்.(8:7) 29) உம் தந்தை எங்கே இருக்கிறார்? என்று கேட்ட யூதர்களுக்கு, இயேசு அளித்த மறுமொழி என்ன? "என்னை உங்களுக்கு தெரிந்திருந்தால், ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்" என்றார். (8:19) 30) " உனக்கு இன்னும் 50 வயது கூட ஆகவில்லை, நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா"? என்று கேட்ட யூதர்களுக்கு இயேசு அளித்த பதில் என்ன? " அபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார். (8:58) 31) ஏழை பிறவியிலேயே பார்வையற்றவராகப் பிறந்தது ஏன்? கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும் பொருட்டே, இப்படிப் பிறந்தார். (9:3) 32) மார்த்தா, மரியா என்னும் இவர்களின் சகோதரர்கள் யார்? லாசர். (11:2) 33) இயேசு பெத்தானியாவுக்கு செல்வதாகக் கூறிய பொழுது, தோமா மறுமொழியாகக் கூறியது என்ன? " நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார். (11:16) 34) பெத்தானியாவுக்கு ஜெருசலேமிலிருந்து எவ்வளவு தொலைவு? ஏறக்குறைய மூன்று கிலோ மீற்றர் (11:18) 35) லாசர் கல்லறையில் எத்தனை நாள் வைக்கப்பட்டிருந்தார்? நான்கு நாட்கள். (11:17) 36) இயேசு லாசரிடம் கூறியது என்ன? " லாசரே, வெளியே வா" என்றார். (11:43) 37) மரியாள் எப்பொழுது இயேசுவின் காலடிகளை நறுமணத்தைலம் கொண்டு பூசினார்? பாஸ்கா விழாவுக்கு 6 நாட்களுககு முன்பு. (12:1) 38) மரியாள் கொண்டு வந்த நறுமணத்தைலத்தின் அளவு என்ன? ஏறக்குறைய 320 கிராம். (12:3) 39) இத்தைலத்தை எவ்வளவுக்கு விற்றிருக்கலாம் என யூதாஸ் கூறினார்? 300 தெனாரியத்திற்கு. (12:5) 40) குருத்து ஞாயிறு அன்று இயேசு எவ்வாறு ஜெருசலேமுக்குள் நுழைந்தார்? ஒரு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி அங்கு சென்றார். (12:4) 41) மக்கள் இயேசுவை எவ்வாறு வாழ்த்தினார்கள்? " ஓசான்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக! இஸ்ராயேலின் அரசர் போற்றப் பெறுக" என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். (12:13) 42) " ஓசான்னா!" என்னும் எபிரேய சொல்லுக்கு பொருள் என்ன? " விடுவித்தருளும்" என்பது பொருள் (12:13) 43) இயேசு கழுதைக் குட்டியின்மேல் அமர்ந்தபடி ஜெருசலேமுக்குள் நுழைவார் என முன்னறிவித்தது யார்? சக்கரியா (12:15) 44) இயேசு தன் சீடர்களின் பாதங்களைக் கழுவியபின், அவர்களுக்கு கூறியது என்ன? "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவர்களுடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்(13:14) 45) இயேசு தன் சீடர்களுக்கு அளித்த புதிய கட்டளை என்ன? " நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல, நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" (13:34) 46) " ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்று பிலிப்பு கேட்ட பொழுது, மறுமொழியாக இயேசு கூறியது என்ன? " என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். (14:9) 47) இயேசுவின் பார்வையில் அவரை உண்மையிலே அன்பு செய்பவர் யார்? அவரது கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள். (14:15) 48) தன்னுடைய சீடர்களோடு என்றும் இருக்க யாரை அனுப்புவதாக இயேசு வாக்களித்தார்? தூய ஆவியை அனுப்புவதாக வாக்களித்தார். (47:16) 49) இயேசு தம் சீடர்களுக்காக தந்தையிடம் வேண்டுவதை, எந்த அதிகாரத்தில் காணலாம்? 17ம் அதிகாரம். 50) சீமோன் பேதுறு வலக்காதை வெட்டிய தலைமைக்குருவின் பணியாளர் பெயர் என்ன? மால்கு (18:10) 51) இயேசு கைது செய்யப்பட்ட பிறகு அவரை யாரிம் கொண்டு சென்றனர்? அன்னாவிடம். (18:13) 52) இயேசுவைக் கன்னத்தில் அறைந்தது யார்? காவலருள் ஒருவர். (18:22) 53) பேதுறு இயேசுவை எத்தனை முறை மறுதலித்தார்? 3 முறை. (18:13-18) 54) யாரை விடுதலை செய்யுமாறு மக்கள் கேட்டனர்? பரபாசை. (18:40) 55) இயேசு குற்றமற்றவர் என பிலாத்து அறிந்திருந்தாரா? ஆம். (19:6) 56) இயேசுவின் சிலுவையடியில் நின்றுகொண்டிருந்தவர்கள் யாவர்? 1) இயேசுவின் தாய் 2) கிளையேபாவின் மனைவி மரியா 3) மக்தலா மரியா 4) இயேசுவின் அன்புச் சீடர் யோவான் (19:25-26) 57) இயேசு தன் தாயிடமும், அன்புச் சீடர் யோவானிடமும் கூறியது என்ன? தம் தாயிடம் " அம்மா இவரே உன் மகன்" என்றார். தம் சீடரிடம் " உன் தாய்" என்றார். (19:26-27) 58) இயேசு சிலுவையில் இருந்து கூறிய கடைசி வார்த்தை என்ன? " எல்லாம் நிறைவேறிற்று" (19:30) 59) இயேசுவின் அடக்கத்திற்கு நிக்கொதெம் கொண்டு வந்தது என்ன? வெள்ளைப்போளமும் சந்தணத் தூளும் கலந்த ஏறக்குறைய 30கிலோ கிராம் கொண்டு வந்தார். (19:39) 60) கல்லறைக்குள்ளே மக்தலதமரியா கண்டது என்ன? வெண்ணாடை அணிந்த இரு வானதூதரைக் கண்டார். (20:2) 61) மக்தலா மரியா இயேசுவைக் கண்டாரா? ஆம், தன்னை பெயர் சொல்லி அழைத்த இயேசுவைக் கண்டார். (20:16) 62) " ரபூனி" என்ற எபிரேயச் சொல்லுக்கு பொருள் என்ன? " போதகரே" என்பது பொருள். (20:16) 63) இயேசு உயிர்த்தெழுந்த நாள் அன்று தம் சீடர்களுக்கு தோன்றியபொழுது, ஒருவர் மட்டும் அங்கு இல்லை, அவர் யார்? திதீம் என்னும் தோமா. 20:24) 64) எட்டு நாளுக்குப் பிறகு, இயேசு மீண்டும் தம் சீடர்கள் தோன்றியபொழுது, அவர் தோமாவிடம் கூறியது என்ன? " இதோ என் கைகள் இங்கே உன் விரலை இடு" என்றார். (20:27) 65) தோமா மறுமொழியாகக் கூறியது என்ன? " நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (20:28) 66) பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் எத்தனை மீன்கள் பிடித்தனர்? 153 (21:11) 67) இயேசு உணவருந்திய பின் சீமோன் பேதுறுவைப் பார்த்துக் கூறியது என்ன? என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர், என் ஆடுகளைப் பேணிவளர்" என்றார். (21:15-17) 68) " ஆட்டுக்குட்டிகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்? கிறிஸ்தவர்களை. 69) " ஆடுகள்" என இயேசு யாரைக் குறிப்படுகிறார்? ஆயர்களை. 70) " நசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்னும் வசனம் எந்தெந்த மொழிகளில் எழுதப்பட்டது? எபிரேயம், லத்தீன், கிரேக்கம். (19:20) |