1) உலகிலேயே அதிக அளவில் விற்பனையாகும் புத்தகம் எது ? விவிலியம் 2) விவிலியம் என்றால் என்ன ? கிறீஸ்தவர்களின் புனிதப் புத்தகம் 3) விவிலியம் என்பதன் பொருள் என்ன? விவிலியம் " பிப்லியா" என்னும் கிறேக்க வார்த்தையிலிருது வருகிறது. இதற்கு புத்தகங்கள் என்று பொருள். 4) விவிலியம் எப்படிப் பிரிக்கப்பட்டுள்ளது ? பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது 5) விவிலியத்தில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன? 73 6) பழையஏற்பாட்டில் மொத்தம் எத்தனை புத்தகங்கள் உள்ளன? 46 7) புதியஏற்பாட்டில் மொத்தம் எத்தனை நூல்கள் உள்ளன? 27 8) காகிதமே இல்லாத பழங்காலத்தில் விவிலியம் எந்தப் பொருளில் எழுதப்பட்டுள்ளது ? பாப்பிரஸ் 9) " செப்துவாஐன்" என்பதன் பொருள் என்ன? எபிரேய மொழி தெரியாத யுத மக்களுக்காக கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடுதான் " செப்துவாஐன்" என்று அழைக்கப்படுகிறது. 10) " வல்கேட்" என்பதன் பொருள் என்ன? விவிலியத்தின் இலத்தீன் மொழி பெயர்ப்பு இது? கி.பி. 400ல் புனித ஜெரோம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது. 11) " டவ்வே வெர்உன்" என்றால் என்ன? கி.பி.1582ல் விவிலியம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரானஸ் நாட்டில் உள்ள டவ்வே வெர்உன் என்னும் இடத்தில் வெளியிடப்பட்டது. இதுதான் " டவ்வே வெர்உன்" 12) " கிங் யேம்ஸ் பைபிள்" என்றால் என்ன? 1611 ம் ஆண்டு இங்கிலாந்து அரசர் கிங் யேம்ஸ் என்பவர் பிரிந்த சகோதரர்களுக்காக (protestants ) விவிலியம் ஒன்றை ஆங்கிலத்தில் வெளியிட்டார். இது தான் (king james Bible) என அழைக்கப்படுகிறது. 13) விவிலிய கேனோனிசிட்டி என்றால் என்ன? விவிலிய கேனோனிசிட்டி என்பது விவிலிய நூல்கள். பரிசுத்த ஆவியின் ஏவு தலால் எழுதப்பட்டு தாய்த் திருச்சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும். 14) விவிலியத்தை எழுத பயன்படுத்தப்பட்ட மொழிகள் யாவை? அராபிக் எபிரேயம் கிரேக்கம் 15) விவிலியப் புத்தகங்களை அதிகாரங்களாகப் பிரித்தவர் யார்? 1204 ல் ஸ்டீபன் லாங்ட்டன் என்பவர் 16) விவிலிய வசனங்களை எண்ணிக்கையிட்டவர் யார்? 1548 ல் இராபர்ட் ரூ ஸ்டீபன் என்பவர்கள் 17) விவிலியம் எப்போது எழுதப்பட்டது ? கி.மு 1500க்கும் கி.பி. 100க்கும் இடையில் 18) விவிலியத்தின் கடைசிப் புத்தகம் எது ? திருவெளிப்பாடு 19) விவிலியத்தின் முதல் வசனம் என்ன? " தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்தார்" (தொ.நூ.1:1) 20) விவிலியத்தின் கடைசி வசனம் என்ன? " ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக" ! (தி.வெ.22:21) 21) பிரிந்த சகோதரர்கள் விவிலியத்தில் உள்ள மொத்த நூல்கள் எத்தனை? 66 நூல்கள் இவை பாலஸ்தீனத் தொகுப்பை அடிப்படையாகக் கொண்டவை. 22) பிரிந்த சகோதரர்கள் ஏற்றுக் கொள்ளாத மொத்த நூல்கள் யாவை? 1) தோபித்து 2) யூடித்து 3) சலமோனின் ஞானம் 4) சீராக்கின் ஞானம்: 5) பாரூக் 6) 1 மக்கபேயர் 7) 2 மக்கபேயர் ஆக மொத்தம் 7 நூல்கள் |