Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(14)  தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம்  திருமுகம்

   
1. பவுல் இத்திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
     கி.பி 52ம் ஆண்டிற்கும் 100ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இது 
    எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2. பவுல் இத்திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
    கொரிந்து நகரில் இருந்து

3. இயேசுவைப்பற்;றிய நற்செய்தியை ஏற்காதவர்களுக்கு கிடைக்கும் தண்டனை
     என்ன?

     இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது, அவருடைய      
     திருமுன்னிருந்து அகற்றப்பட்டுஇ முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் 
     பெறுவர். (1:9)

4. நெறி கெட்ட மனிதனைப் பற்றி பவுல் கூறுவது என்ன?
   அவன் அழிவுக்குரியவன். தெய்வம் என வழங்கப்படுவதையும் வழிபாட்டுக்குரிய 
    அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக் 
    கொள்வான். அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு, தன்னைக்
    கடவுளாகவும் காட்டிக் கொள்வான். (2:4)

5. நெறி கெட்ட மனிதனை கடவுள் எவ்வாறு தண்டிப்பார்?
    ஆண்டவர் தம்வாயினால் ஊதி அவனை ஒழித்துவிடுவார். (2:8)

6. பவுல் உழைப்பைப் பற்றி கூறுவது என்ன?
    உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது. (3:10)
 
 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்