1) உரோமையருக்கு எழுதிய
திருமுகத்தின் மையக் கருத்து என்ன?
இயேசுக் கிறிஸ்துவின் நற்செய்தி.
2) இத்திருமுகம் எப்பொழுது
எழுதப்பட்டது?
கி.பி. 57-58ம் கால கட்டத்தில் எழுதியிருக்கலாம்.
3) பவுல் உரோமையருக்கு தன்னை
எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்?
இயேசுக்கிறிஸ்துவின் பணியாளன். (1:1)
4) பவுல் அழைக்கப்பட்டதன்
நோக்கம் என்ன?
திருத்தூதராக இருக்க. (1:1)
5) சீடத்துவத்திற்கு முக்கிய
அடிப்படை என பவுல் கூறுவது என்ன?
இயேசுக்கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிதல்.
6) பிறஇனத்தவர் செய்த பாவம்
என்ன?
படைத்தவரை மறந்து, படைக்கப்பட்டவற்றை வணங்கினார்கள்.
7) நேர்மையுடையோர் எவ்வாறு
வாழ்வு அடைவர்?
தம் நம்பிக்கையால் வாழ்வு அடைவர். (1:17)
8) பிறர் குற்றவாளியெனத்
தீர்ப்பு அளிப்போரைப் பற்றி பவுல் கூறுவது என்ன?
பிறருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கும்போது, அவர்கள் அவர்களுக்கே
தண்டனைத்
தீர்ப்பை அளித்துக் கொள்கிறார்கள். (2:1)
9) பிறஇனத்தார் திருச்சட்டத்தை,
எவ்வாறு அறிந்து கொள்கின்றனர்?
திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ளது. (2:5)
10) நம்பிக்கை தேவையென
வலியுறுத்துவதன் மூலம், திருச்சட்டத்தை
செல்லாததாக்குகிறோமா?
இல்லை: இவ்வாறு செய்வதன் மூலம், திருச்சட்டத்தை நிலை
நாட்டுகிறோம்.
(3;:31)
11) கடவுள் ஆபிரகாமை நிதியாளராக
கருதக் காரணம் என்ன?
அவர் கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால்தான். (4:3)
12) கிறிஸ்து நம்மைக்
கடவுளுக்கு ஏற்புடையவர்களாக மாற்றியது எப்படி?
தம் உயிரைக் கொடுத்து நம்மைக் கடவுளுக்கு
ஏற்புடையவர்களாக்கினார். (5:8)
13) கிறிஸ்தவர்கள் தங்களைப் பொறுத்தமட்டில் எவ்வாறு எண்ண வேண்டும்?
பாவவாழ்க்கையைப் பொறுத்த மட்டில் இறந்தவர்களாகவும்,
கிறீஸ்து
இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாகவும் எண்ணிக்
கொள்ள வேண்டும். (6:11)
14) பாவத்திற்கு கிடைக்கும்
கூலி என்ன?
சாவு. (6:23)
15) அந்தோ! இரங்கத்தக்க மனிதன்
நான்! என பவுல் கூறியது ஏன்?
ஏனெனில் அவர் தம் ஊனியல்பால் பாவத்தின்
சட்டத்திற்கு கட்டுப்பட்டிருந்தார்.
(7:24)
16) நாம் இறைவனுக்குரியோர்
என்பதற்கு அடையாளம் என்ன?
கடவுளின் ஆவி நம்முள் குடிகொண்டிருப்பது. (8:9)
17) இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் பற்றி பவுல் கூறுவது என்ன?
இக்காலத்தில் நாம் படம் துன்பங்கள் எதிர்காலத்தில்
நமக்காக வெளிப்படப்
போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (8:18)
18) பெயிபா என்னும் சகோதரி யார்?
இவர் கெங்கிரேயாவில் இருக்கும் சபையில் திருத்
தொண்டராக இருந்தவர்.
(16:1)
19) நான் பிறஇனத்தாராகிய
உங்களுக்கு திருத்தூதன் என்று பவுல் கூறும்
இவ்வார்த்தைகள் காணப்படும் அதிகாரத்தையும்
வசனத்தையும் குறிப்பிடு:
அதிகாரம் 11 வசனம் 13.
20) தீமையை வெல்வது எப்படி?
நன்மையால் தீமையை வெல்லலாம். (12:21)
21) நம் எதிரிகளை எவ்வாறு
நடத்தவேண்டும் என்று பவுல் கூறுகிறார்?
அவர்களுக்கு ஆசி கூறவேண்டும். (12:14)
22) ஆளும் அதிகாரம் உள்ளவர்க்கு
பணிந்திருக்குமாறு பவுல் கூறுவது ஏன்?
ஏனெனில் அதிகாரம் கடவுளிடமிருந்தே வருகின்றன.
(13:1)
23) கடவுளின் கட்டளைகள்
அனைத்தும், எந்தவொரு கட்டளையில் அடங்கும்?
உன் மீது அன்பு கூருவதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்
மீதும் அன்பு
கூருவாயாக. (13:9)
|
|