Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(3)  புனித லூக்கா நற்செய்தி

 
1) லூக்கா என்பவர் யார்?
     புனித சின்னப்பரின் சீடர்.

2) இந்நற்செய்தியை லூக்கா எம் மொழியில் எழுதினார்?
     கிரேக்க மொழியில்.

3) இந்நூலை லூக்கா யாருக்கு எழுதுகிறார்?
     தியோபில் என்பவருக்கு (1:3)

4) செக்கரியா என்னும் குருவானவர் எந்த வகுப்பைச் சார்ந்தவர்?
     அபியா வகுப்பைச் சார்ந்தவர். (1:5)

5) எலிசபேத்து என்பவர் யார்?
     சக்கரியாவின் மனைவி. (1:5)

6) சக்கரியா ஆண்டவரின் திருக்கோவிலில் இருந்தபொழுது அவர் முன் 
    தோன்றியது யார்?

    ஆண்டவருடய தூதர். (1:11)

7) ஆண்டவருடைய வார்த்தைகளை நம்பாத சக்கரியா, எவ்வாறு 
     தண்டிக்கப்பட்டார்?

      அவர் பேச்சற்றவராய் இருந்தார். (1:20)

8) கபிரியேல் வானதூதர் மரியாவுக்கு அறிவித்தது என்ன?
     மரியா கடவுளின் அருளை அடைந்துள்ளார் எனவும், கருவுற்று ஒரு மகனைப் 
    பெறுவார், அவருக்கு இயேசு என்னும் பெயரிடப்படும் ; உன்னத கடவுளின் மகன் 
    எனப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. (1:30)

9) வானதூதரின் அறிவிப்புக்கு மரியாள் அளித்த பதில் என்ன?
     "நான் ஆண்டவரின் அடிமை, உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார்.
      (1:38)

10) மரியா எலிசபேத்தோடு எத்தனை மாதங்கள் தங்கியிருந்தார்?
      ஏறக்குறைய மூன்று மாதம்.(1:56)

11) தம் பேரரசு முழுவதிலும், மக்கள் தொகை கணக்கெடுக்குமாறு கட்டளையிட்ட 
      மன்னன் பெயர் என்ன?

      ஆகஸ்து சீசர். (2:1)

12) மரியாவுக்கு பிறக்கவிருக்கும் குழந்தைக்கு வானதூதர் அளித்த பெயர் என்ன?
      இயேசு (2:21)

13) தாவீதின் ஊர் எது?
      பெத்தலேகெம்.(2:4)

14) யோசேப்பு எந்த குடும்பத்தைச் சார்ந்தவர்?

      தாவீது குடும்பத்தைச் சார்ந்தவர். (2:4)

15) இயேசு எங்கே பிறந்தார்?
      பெத்தலேகெம்.(2:6-7)

16) இயேசுவின் பிறப்பைப் பற்றி வானதூதர்கள் யாருக்கு அறிவித்தனர்?
      இடையர்களுக்கு. (2:10)

17) குழந்தைக்கு எப்பொழுது பெயரிடப்பட்டது?
       எட்டாம் நாள். (2:21)

18) இயேசுவைக் கோவிலில்  ஒப்படைக்கும் பொழுது, இயேசுவைப்பற்றி பேசிய
      பெண் யார்?

      அன்னா. (2:36)

19) அன்னாவுக்கு அப்பொழுது என்ன வயது?
      84 வயது. (2:37)

20) இக்குழந்தை பிறஇனத்தார்க்கு வெளிப்பாடு, அருள், ஒளி எனக் கூறியது யார்?
       சிமியோன். (2:28)

21) அக்காலத்தில் யூதேயாவில் மன்னராக இருந்தது யார்?
      ஏரோது.

22) இயேசு கோவிலில் காணாமல் பொழுது, அவருக்கு வயது என்ன?
      12வயது. (2:42)

23) இயேசு எப்போது கண்டு பிடிக்கப்பட்டார்?
      மூன்று நாட்களுக்குப் பின். (2:46)

24) திருமுழுக்கு யோவான் எக்காலத்தில் இயேசுவை முன்னறிவித்தார்?
       அன்னாவும், கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்த பொழுது.(3:2)

25) இயேசு தம் பணியை தொடங்கிய போது அவருக்கு வயது என்ன?
       ஏறக்குறை 30 வயது. (3:23)

26) யோசேப்பு யாருடைய மகன்?
       ஏலியின் மகன். (3:23)

27) இயேசு திருமுழுக்கு பெறும் பொழுது, தந்தை கடவுள் கூறியது என்ன?
        "என் அன்பார்ந்த மகன் நீயே! உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். (3:22)

28) இயேசு பாலை நிலத்தில் எத்தனைமுறை அலகையால் சோதிக்கப்பட்டார்?
       மும்முறை. (4:2)

29) இயேசு எத்தனை நாள் அலகையால் சோதிக்கப்பட்டார்?
      40நாள். (4:2)

30) சீமோன் பேதுறுவின் வீட்டில் இயேசு செய்த புதுமை என்ன?
      சீமோன் பேதுறுவின் மாமியாரை,  இயேசு குணமாக்கினார். (4:38-39)

31) முடக்குவாதமுற்றவரைப் பார்த்து இயேசு கூறியது என்ன?
      "உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன"என்றார். (5:20)

32) லேவி என்பவர் யார்?
      அவர் ஒரு வரி தண்டுபவர். (5:27)

33) இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர் செய்தது என்ன?
       இரவெல்லாம் கடவுளிடம் வேண்டுதல் செய்தார். (6:12)

34) இயேசு தேர்ந்தெடுத்த பன்னிருவரின் பெயர்களைக் கூறுக?
      1) பேதுறு என்னும் சீமோன்
      2) சீமோனின் சகோதரர் அந்திரேயா
      3) யாக்கோபு
      4) யோவான்
      5) பிலிப்பு
      6) பர்சலேமேயு
      7) மத்தேயு
      8) தோமா
      9) அல்பேயுவின் மகன் யாக்கோப்பு
     10) தீவிரவாதி எனப்பட்ட சீமோன்
     11) யாக்கோபின் மகன் யூதா
     12) துரோகியாக மாறிய யூதாஸ் (6:14-16)

35) திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு கூறியது என்ன?
     "மனிதராய்ப் பிறந்தவர்களுள், யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை"
       என்றார். (7:28)

36) நூற்றுவர் தலைவன் இயேசுவிடம் கூறியது என்ன?
    "ஐயா, உமக்கு தொந்தரவு வேண்டாம்;; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து 
      வைக்க நான் தகுதியற்றவன்"என்றார் (7:6)

37) நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை இயேசு எப்பாறு உயிர் பெறச் செய்தார்?
      "இளைஞனே! நான் உனக்குச் சொல்கிறேன் எழுந்திரு" என்றார். (7:14)

38) இயேசுவால் ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற பெண்ணின் பெயர் என்ன?
        மகதலா மரியா. (8:2)

39) இயேசுவின் பெண் சீடர்கள் பெயரைக் குறிப்பிடு:
     மகதலா மரியா, கூசாவின் மனைவி யோவன்னாவும், சுசன்னாவும். (8:2-3)

40) இயேசுவின் முறைப்படி, அவருடைய தாயும் சகோதரர்களும் யாவர்?
      இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்கள், அவருடைய தாயும்
      சகோதரர்களும் ஆவர். (8:21)

41) வானத்திலிருந்து தீ வரவழைத்து சமாரியாவை அழிக்கலாமா? ஏன    
      இயேசுவைக் கேட்டவர்கள் யாவர்?

      யாக்கோபும், யோவானும். (9:54)

42) இயேசுவைப் பற்றிய பேதுறுவின் அறிக்கை என்ன?
          "நீர் கடவுளின் மெசியா" என்று அறிக்கையிட்டார். (9:20)

43) இயேசுவின் பார்வையில் யார் மிகப் பெரியவர்?
       எல்லோரிலும் சிறியவரே, பெரியவர் ஆவார். (9:48)

44) தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், இடங்களுக்கும் எத்தனை சீடர்களை 
     அனுப்பினார்?

         72 சீடர்களை (10:1)

45) நல்ல சமாரியன் உவமையில் அடிபட்டுக்கிடந்த சமாரியரைக் கண்டு, 
      மறுபக்கமாகச் திரும்பிச் சென்றவர்கள் யாவர்?

      லேவியரும்,  குருவும். (10:31-32)

46) மார்த்தாவின் சகோதரி பெயர் என்ன?
          மரியா. (10:39)

47) பெயல்செபூல் என்பவர் யார்?
      பேய்களின் தலைவன். (11:15)

48) யோனாஸ் என்ற நகரின் பெயர் என்ன?
       நிநிவே (11:30)

49) உடலுக்கு விளக்கு எது?
      கண். (11:34)

50) பலிப்பீடத்திற்கும், தூயகத்துக்கும் நடுவே கொல்லப்பட்ட இறைவாக்கினர்
       யார்?

       சக்கரியா இறைவாக்கினர். (11:51)

51) பரிசேயருடைய புளிப்பு மாவு எனக் கூறப்படுவது என்ன?
     வெளிவேடம்.(12:1)

52) "மீட்பு பெறுவோர் எத்தனைபேர்"என்ற கேள்விக்கு இயேசு அளித்த பதில்    
        என்ன
?
       இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர்
     உள்ளே செல்ல முயன்றும் இயலாமல் போகும். (13:24)

53) "நரி"என இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?
          ஏரோது (13:32)

54) ஊதாரி மகனின் சொத்தெல்லாம் அழிந்த பிறகு, அவனுக்கு கிடைத்த வேலை 
      என்ன?

       பன்றி மேய்க்கும் வேலை. (15:15)

55) தன் தலைவரிடம் நூறு குடம் எண்ணெய் கடன்பட்டிருந்த ஒருவரிடம்,      
      முன்மதியோடு செயல்பட்ட வீட்டுப் பொறுப்பாளர் கூறியது என்ன?

       உட்கார்ந்து 50 என்று எழுதச் சொன்னான். (16:6)

56) "எந்த வீட்டு வேலையாளரும், இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய   
       முடியாது"என்னும் வசனத்தில், குறிப்பிடப்படும் இரு தலைவர்கள் யாவர்?

        கடவுளும், செல்வமும். (16:13)

57) செல்வந்தரின் வீட்டு வாயில் அருகே அமர்ந்திருந்த ஏழை யார்?
       இலாசர். (16:20)

58) இயேசு எருசலேமுக்கு போகும் வழியில், எத்தனை தொழுநோயாளர்களைக்
      குணப்படுத்தினார்?

       10 தொழுநோயாளர்களை. (17:12)

59) இறைவனிடம் வேண்ட கோவிலுக்குச் சென்ற இருவர் யாவர்?
       பரிசேயர், வரிதண்டுபவர். (18:10)

60) இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வரைப் பார்த்து, அவர் கூறியது என்ன?
     "உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும், அப்போது  
      விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும். 
       என்றார். (18:22)

61) சக்கேயு இயேசுவைக் காண்பதற்காக எந்த மரத்தில் ஏறினார்?
         ஒரு காட்டு அத்தி மரத்தில். (19:4)

62) சீசருக்கு கப்பம் கட்டுவது முறையா? இல்லையா? என்ற கேள்விக்கு இயேசு 
      அளித்த பதில் என்ன?

    "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும்   
       கொடுங்கள்"என்று சொன்னார். (20:25)

63) இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது ஏன்?
      அவர் செய்யும் அடையாளம் ஏதாவது காணலாம் என்று நெடுங்காலமாய்      
      எதிர்பார்த்திருந்தான். (23:8)

64) இயேசுவுக்காக அழுத எருசலேம் மகளிரை நோக்கி, அவர் கூறியது என்ன?
       "எருசலேம் மகளிரே! நீங்கள் எனக்காக அழ வேண்டாம்;  மாறாக உங்களுக்காகவும், 
        உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள்"என்றார். (23:28)

65) இயேசு இறந்த நேரம் என்ன?
      ஏறக்குறைய நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3மணி வரை. (23:44)

66) எம்மாவுஸ் சென்ற சீடர்களுள் ஒருவரின் பெயர் என்ன?
         கிளையோபா. (24:18)

 

இதோ உன் அன்னை என்று என் மீட்பர் இயேசு சொன்னார்
இம்மையில் எம்மைத் தேற்ற உன்னையன்றி யாரம்மா