Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(21) பேதுறு எழுதிய  முதல் திருமுகம்

   

1. பேதுறு இத்திருமுகத்தை எழுதிய நோக்கம் என்ன?
    துன்புறுத்தப்பட்ட காலத்திலும், சோதனைக்காலத்திலும்,  கிறிஸ்தவர்களை
    ஊக்கப்படுத்தவும் தளர்ந்து போன நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்பவும் 
    இத்திருமுகத்தை எழுதினார்.

2. இத்திருமுகம் யாருக்காக எழுதப்பட்டது?
     சின்ன ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ சபைகளுக்கு எழுதப்பட்டது.(1:1)

3. சோதனைகளில் மற்றும் துயரங்களின் நோக்கம் என்ன?
     நமது நம்பிக்கை மெய்யானது என்று நிரூபிக்கவே. (1:7)

4. மனிதரை விடுவிக்க கொடுக்கப்பட்ட விலை என்ன?
     கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இருத்தம்.(1:19)

5. ஆண்டவரின் வார்த்தை என்ன?
     நற்செய்தி. (1:25)

6. கணவர் மனைவியருக்கு பேதுறு கூறும் அறிவுரை என்ன?
     திருமணமான பெண்களே! உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்:         
 திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரோடு இணைந்து வாழுங்கள் (3:1-7)

7. ஒரு பெண்ணின் அலங்காரப் பெருள் என்ன?
    பணிவும் அமைதியும். (3:4)

8. ஆயர்களுக்குப் பிறகு பேதுறு வழங்கும் அறிவுரை என்ன?
      ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம
      ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாதீர்கள். (5:2)

9. கிறிஸ்தவர் ஏன் விழிப்பாய் இருக்கவேண்டும்?
    ஏனெனில் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமென கர்ச்சிக்கும்
    சிங்கம் தேடித் திரிகிறது. (5:8)

10. பேதுறுவின் நம்பிக்கைக்குரிய சகோதரன் யார்?
      சில்வான். (5:12)
 
 

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே!
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!!