Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(2)  புனித மாற்கு நற்செய்தி

 
1) மாற்கு என்பவர் யார்?
    புனித பேதுறுவின் சீடரும், பர்ணபாவின் உறவினரும் ஆவார்.(முன்னுரை)

2) மாற்கு நற்செய்தி யாருக்காக எழுதப்பட்டது?
    பிறஇனத்துக் கிறீஸ்தவருக்காக எழுதப்பட்டது. (முன்னுரை)

3) இந்நற்செய்தியை மாற்கு எந்த மொழியில் எழுதினார்?
     கிரேக்க மொழியில்

4) இந்நூல் எப்பொழுது எழுதப்பட்டது?
    கி.பி. 64மு. ஆண.டில் இருந்து 70ம் ஆண்டுக்குள் (முன்னுரை)

5) திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு எங்கே திருமுழுக்கு பெற்றார்?
     யோர்தான் ஆற்றில். (1:9)

6) பரிசுத்த ஆவி ஆண்டவர் மேல் எவ்வடிவில் இறங்கி வந்தது?
    புறா வடிவில். (1:10)

7) இயேசு திருமுழுக்கு பெற்றவுடன் அவர் தூய ஆவியால் எங்கே அனுப்பப்பட்டார்?
     பாலை நிலத்துக்கு. (1:12)

8) இயேசு பாலை நிலத்தில் எத்தனை நாள் இருந்தார்?
     40 நாள். (1:13)

9) யோவான் கைது செய்யப்பட்டபின் இயேசு கடவுளின் நற்செய்தியை எவ்வாறு      
     பறைசாற்றினார்?

    "காலம் நிறைவேறிவிட்டது, இறையாட்சி நெருங்கி வந்து விட்டது. மனம் மாறி 
     நற்செய்தியை நம்புங்கள்" என்றார். (1:15)

10) இயேசுவின் முதல் சீடர்கள் யாவர்?
     சீமோன், அவர் சகோதரர் ஆந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவர் சகோதரர்  
     யோவான். (1:16-19)

11) முடக்குவாதமுற்றவர் எவ்வாறு வீடு திரும்பினார்?
      தம்முடைய படுக்கையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினார். (2:12)

12) இயேசு லேவியை அழைக்கும்போது அவர் எங்கே இருந்தார்?
      சங்கச் சாவடியில் அமர்ந்திருந்தார். (2:14)

13) இயேசுவின் சீடர்கள், ஓய்வு நாளில் கதிர் கொய்வதைக் கண்ட பரிசேயர்கள்   
      இயேசுவிடம் முறையிட்டபோது, அவர் கூறிய பதில் என்ன?

    "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது: மனிதர் ஓய்வு நாளுக்ககாக 
    உண்டாக்கப்படவில்லை" என்றார். (2:27)

14) இயேசு சீமோனுக்கு அளித்த வேறு பெயர் என்ன?
      பேதுறு. (3:14)

15)"இடியின் மக்கள்"என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?
      செபதேயுவின் மகன் யாக்கோப்பும், அவர் சகோரரான யோவானும். (3:17)

16) விதைப்பவர் உவமையில்"விதை"எவற்றைக் குறிப்பிடுகின்றது?
      இறைவார்த்தையை குறிக்கின்றது. (4:14)

17) இயேசு காற்றையும், கடலையும் அடக்கியபோது, அவருடைய சீடர்கள் என்ன   
      கூறினார்கள்?

      " காற்றும், கடலும் இவருக்கு கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?" என்றனர். (4:41)

18) கெரசேனர் பகுதியில், தீப்பிடித்தவர் வாழ்ந்து வந்த இடம் எது?
      கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம். (5:3)

19) இயேசு பேய் பிடித்தவரின் பெயரைக் கேட்டபோது அவர் கூறிய பதில் என்ன?

       என் பெயர் " இலேகியோன்" என்றது. (5:9)

20) " இலேகியோன்" என்பதன் பொருள் என்ன?
       உரோமைப் படையின் ஆறாயிரம் போர் வீரர்கள் கொண்ட பொரும் படைப்பிரிவு. (5:9)

21) பேய்பிடித்தவரிடமிருந்து வெளியே அனுப்பப்பட்ட, தீய ஆவிகள் எங்கே சென்றது?
       அவை பன்றிகளுக்குள் புகுந்தன. (5:13)

22) இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண்ணின் நம்பிக்கை என்ன?
     " அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று நம்பி இருந்தார். (5:28)

23) தொழுகைக் கூடத் தலைவரின் இறந்த மகளைப் பார்த்து, இயேசு கூறியது என்ன?
      " தலித்தா கூம்" என்றார். (5:41)

24) " தலித்தா கூம்" என்பதன் பொருள் என்ன?
     " சிறுமி, உனக்கு சொல்லுகிறேன், எழுந்திரு" என்பது பொருள். (5:41)

25) இயேசுவின் சகோதரர்கள் யாவர்?
       யாக்கோப்பு,யோசே, யுதா, சீமோன் ஆகியோர்.(6:3)

26) மாற்கு நற்செய்தியாளர் குறிப்பிடும் இயேசுவின் சகோதரர்கள், அவருடைய சொந்தச்  
     சகோதரர்களா?

     இல்லை.

27) இயேசு தம் நற்செய்திப் பணிக்கென பன்னிரு திருத்தூதர்களை, எவ்வாறு   
      அனுப்பினார்?

      இருவர் இருவராக அனுப்பினார். (6:7)

28) இயேசு அனுப்பிய பன்னிரு திருத்தூதர்களும் நற்செய்தியை எவ்வாறு பறைசாற்றினர்?
      மக்கள் மனம்மாறவேண்டுமென்று பறைசாற்றினர்.(6:12)

29) திருமுழுக்கு யோவான் ஏரோதிடம் கூறியது என்ன?
      " உன் சகோதரர் மனைவியை நீ வைத்திருப்பது முறையல்ல" எனக் கூறினார். (6:18)

30) திருமுழுக்கு யோவானை கொலை செய்ய திட்டம் தீட்டியது யார்?
      ஏரோதியாள். (6:19)

31) ஏரோதியாள்  என்பவர் யார்?
     ஏரோதின் சகோதரரான பிலிப்பின் மனைவி. (6:17)

32) ஏரோதியாளின் மகள் பெயர் என்ன?
     சலோமி.

33) சலோமி ஏரோதிடம் கேட்டது என்ன?
     திருமுழுக்கு யோவானின் தலையைக் கேட்டார்.(6:25)

34) யோவானின் தலையைப் பெற்ற சலோமி, அதை யாரிடம் கொடுத்தார்?
      அதைத் தன் தாயிடம் கொடுத்தார். (6:28)

35) ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு எத்தனைபேர் வயிறாற       
      உண்டனர்?

      ஐந்தாயிரம் பேர்(6:44)

36) ஐந்து அப்பங்களையும்,  இரண்டு மீன்களையும் கொண்டு, வயிறாற உண்டபின்பு 
      எஞ்சியவற்றை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தனர்?

       பன்னிரண்டு கூடைகள். (6:43)

37) இயேசு எந்த நேரத்தில் கடல் மீது நடந்தார்?
      ஏறக்குறைய நான்காம் காவல்வேளையில். (6:48)

38) " கொர்பான்" என்பதன் பொருள் என்ன?
       கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது. (7:11)

39) மனிதரைத் தீட்டுப் படுத்துபவை என இயேசு எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
      பரத்மை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி,
      பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவை. (7:21-22)

40) தீர் பகுதியில் இயேசு யாரைக் குணப்படுத்தினார்?
      ஒரு கிரேக்கபெண், சிரியா தெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். (7:26)

41) காது கேளாதவரிடம் இயேசு கூறியது என்ன?
      " எப்பத்தா" (7:34)

42) " எப்பத்தா" என்றால் என்ன?
      " திறக்கப்படு" என்று பொருள். (7:34)

43) பிலிப்பு - செசாரியாவில், பேதுறு இயேசுவைப் பற்றி அறிக்கையிட்டது என்ன?
      " நீர் மெசியா" என்று உரைத்தார்;. (8:29)

44) இயேசுவை பின்செல்ல விரும்புவோர் செய்யவேண்டியது என்ன?
     தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு, அவரைப் பின்பற்றவேண்டும்.
       (8:34)

45) இயேசு உருமாறிய பொழுது அங்கே தோன்றிய இருவரது பெயர் என்ன?
       எலியாவும், மோசேயும் தோன்றினர். (9:4)

46) திருமணத்தைப் பற்றி இயேசு கூறியது என்ன?
      " கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார். (10:9)

47) சிறுபிள்ளைகளைக் கண்டு அதட்டிய சீடர்களிடம் இயேசு கூறியது என்ன?
      " சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள், அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில்
        இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. (10:14)

48) இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வந்தர் அவரிடம் கேட்டது என்ன?
      "நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய 
       வேண்டும்" என்று அவரைக் கேட்டார். (10:17)

49) இயேசு அந்த செல்வரிடம் கூறியது என்ன?
       நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடும், பின்பு என்னை வந்து     
       பின்பற்றும்" என்று கூறினார். (10:21)

50) செல்வந்தர் இயேசு கூறியவாறு செய்தாரா?
      இல்லை. அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார்;. ஏனெனில் அவருக்கு
      ஏராளமான சொத்து இருந்தது. (10:22)

51) செல்வந்தர்கள் இறையரசில் நுழைவதைப் பற்றி, இயேசு கூறியது என்ன?
      "அவர்கள் இறையாடசிக்கு உட்படுவதை விட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது 
       எளிது" என்றார் (10:25)

52) எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் சென்றவர்களுக்கு அவர் கூறியது   
       என்ன?

      " நிலைவாழ்வு பெறுவர்" என்றார். (10:30)

53) எரிக்கோவில் பார்வை பெற்றவரின் பெயர் என்ன?
       பார்த்திமேயு (10:46)

54) இயேசு எவ்வாறு எருசலேமுக்குள் நுழைந்தார்?
       கழுதைக் குட்டியில் அமர்ந்து வந்தார்.( 11:7)

55) அத்திமரத்தைப் பற்றிய கேள்விகளுக்கு இயேசு அளித்த பதில் என்ன?
      " இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது. (11:7)

56)  வரி செலுத்துவதைப் பற்றிய கேள்விக்கு, இயேசு அளித்த பதில் என்ன?
     " சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றை கடவுளுக்கும்
       கொடுங்கள்" என்றார்;. (12:17)

57) உயிர்தெழுதலை நம்பாத
யூதர்கள் யாவர்?
       சதுசேயர். (12:18)

58) எல்லாக் கட்டளைகளிலும், முதன்மையான கட்டளை எது?
      உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், முழுமனத்தோடும், முழு
      ஆற்றலோடும், உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக (12:30)

59) இயேசு
ஜெருசலேம் கோவிலைப்பற்றி கூறியது என்ன?
     " இந்த மாபெரும் கட்டிடங்களை பார்க்கிறீர் அல்லவா! இங்கு கற்கள் ஒன்றின் மேல்
       ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும்" என்றார். (13:2)

60) தனது இரண்டாம் வருகையைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
      "மிகுந்த வல்லமையோடும், மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவார்" 
       என்றார். (13:26)

61) பெண் ஒருவர் இயேசுவின் பாதங்களைத் தைலத்தால் பூசிய போது அவர்
       எங்கிருந்தார்?

        இயேசு பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். (14:3)

62)
ஜெத்சமெனிதோட்டத்தில் இயேசுவோடு இருந்தவர்கள் யாவர்?
      பேதுறு, யாக்கோபு, யோவான். (14:33)

63) படைவீரர்கள் இயேசுவின்மேல் உடுத்திய ஆடையின் நிறம் என்ன?
      செந்நிற ஆடை. (15:17)

64) சிலுவை சுமப்பதில் இயேசுவுக்கு உதவியது யார்?
       சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர். (15:21)

65) சிலுவையின்மேல் எழுதப்பட்டிருந்தது என்ன?
     "
யூதரின் அரசன்" என எழுதப்பட்டிருந்தது. (15:26)

66) இயேசுவின் இறபபை தெலைவில் இருந்து பார்த்த பெண்கள் யாவர்?
     மகதலா மரியாவும், யாக்கோபின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் ஆவார்.     
      (15:40)

67) வாரத்தின் முதல் நாளில் கல்லறைக்கு வந்தது யார்?
       மகதலா மரியா, யாக்கோபின் தாயாகிய மரியா, மற்றும் சலோமி . (16:1)

68) கல்லறைத் தோட்டத்தில் அவர்கள் யாரைக் கண்டனர்?

       வானதூதரைக் கண்டனர். (16:5)

69) இயேசு விண்ணேற்றம் அடையும் பொழுது தன்னுடைய 11 சீடர்களுக்கு அவர் கூறியது
      என்ன?

       "உலகமெங்கும் சென்று, படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை பறைசாற்றுங்கள்.     
       நம்பிக்கை கொண்டு திருழுமுக்குப் பெறுவோர்,  மீட்புப் பெறுவர்:
       நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்" (16:15-16)

 

அம்மா நீ தந்த செபமாலை செபிக்கும் நாளெல்லாம் சுபவேளை
அன்றாடம் ஓதி உயர்வடைந்தோம் மன்றாடும் நலன்கள் உடனடைந்தோம்