Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(11) பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்  


1) பவுல் இத் திருமுகத்தை பிலிப்பியருக்கு எப்பொழுது எழுதினார்?
     கி.பி.56ல்.

2
) பவுல் இத் திருமுகத்தை எங்கிருந்து எழுதினார்?
     எபேசு நகரில் இருந்து.

3) பவுல் இத் திருமுகத்தை எழுதியதன் நோக்கம் என்ன?
    தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும், அவர்கள்     
      மகிழ்வோடும், மனவுறுதியோடும், கிறிஸதவ நம்பிக்கையோடு இலங்க
    வேண்டும் என்பதற்காகவும் இந்நூலை எழுதினார்.

4) பவுல் எவ்விரண்டு மனநிலைகளுக்கிடையே இழுபறி நிலையில் இருந்தார்?
     உயிர் நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒருபுறம்,
      இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். (1:23-24)

5) பவுல் பிலிப்பியருக்கு கூறும் அறிவுரை என்ன?
      " நீங்கள் அச்சத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து
         வாருங்கள் " (2:12)

6) மற்றவர்களை நாம் எவ்வாறு கருதவேண்டும் என பவுல் வலியுறுத்துகிறார்?
      கட்சி மனப்பான்மைக்கும், வீண்பெருமைக்கும் இடம் தராமல் மனத்தாழ்மை
      யோடு மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதவேண்டும் எனக் 
      கூறினார். (2:3-4)

7) இயேசுக்கிறீஸ்துவின் தாழ்மையை எவ்வாறு விபரிக்கின்றார்:
    கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை
    வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால்
    தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு
    ஒப்பானார்.  மனித உருவில் தோன்றி சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும்
    சிலுவைச்சாவையே  ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்
    கொண்டார்.   எனவே  கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும்
    மேலான பெயரை அவருக்கு  அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு
    விண்ணவர், மண்ணவர்,   கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;. தந்தையாம்
    கடவுளின் மாட்சிக்காக   "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே
    அறிக்கையிடும். (2:6)

8) பவுலைச் சந்திக்க பிலிப்பியர்கள் யாரை அனுப்பினர்?
     ஏப்பபிராதித் (2:25)

9) பவுல் தன்னைப்பற்றி எவ்வாறு விபரிக்கிறார்?
" தான் பிறந்த எட்டாம்நாள் விருத்தசேதனம் பெற்றவன்: இஸ்ராயேல்
   இனத்தவன்:   பென்ஐமின் குலத்தவன்: எபிரேய பெற்றோருக்குப் பிறந்த
   எபிரேயன்:    திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் பரிசேயன். திருச்சட்டத்தில்
   எனக்கிருந்த ஆர்வத்தால் திருச்சபையைத் துன்புறுத்தினேன். (3:5)

10) ஏகப்பட்ட செல்வம் என பவுல் எதைக் குறிப்பிடுகிறார்?
      ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவு. (3:8)

11) பவுல் தன் இலக்கை அடையச் செய்தது என்ன?
      "கடந்ததை மறந்து விட்டு, முன்னிருப்பதைக் கண்முன் கொண்டு பரிசு 
      பெறவேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். (3:13-14)

12) கிறிஸ்தவர்களின் தாய்நாடு என பவுல் குறிப்பிடுவது எது?
      விண்ணகம். (3:20)

13) ஆண்டவரில் நாம் என்ன செய்யவேண்டும் என அதிகாரம் நாலு வசனம்
      நாலில் பவுல் கூறுகிறார்?

       ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன்,
       மகிழுங்கள். (4:4)

14) எயோதியாவையும், சின்டிக்காவையும் பார்த்து பவுல் கேட்டது என்ன?
   ஆண்டவரோடு இணைந்து ஒருமனத்தவராய் இருக்கும்படி கேட்டுக்
   கொள்கிறார். (4:2)

15) கிளமந்து என்பவர் யார்?
      பவுலோடு உடன் உழைத்தவர்களுள் ஒருவர். (4:3)
 

தேவைகள் யாவையும் தருபவளே! வேண்டிய வரங்களைத் தாருமே