1) இத்திருமுகம் எப்பொழுது எழுதப்பட்டது?
கி.பி. 80ம் ஆண்டில் இருந்து 85ம் ஆண்டுக்குள்
எழுதப்பட்டிருக்கும் என்று
நம்பப்படுகின்றது.
2) இந்நூல் எங்கிருந்து எழுதப்பட்டது?
உரோமையில் இருந்து.
3) இத்திருமுகத்தின்
ஆசிரியர் யார்?
பவுலின் மற்றத் திருமுகங்களுக்கும் இத்திருமுகத்திற்கும்
வேற்றுமைகள்
அதிகமாக இருப்பதால் இதன்
ஆசிரியர் பவுல் இல்லை
என நம்பப்படுகிறது.
அது அப்பொல்லோவால் எழுதப்பட்டது
என்பார் சிலர். எனவே
இக்கேள்விக்கான சரியான விடை இன்னும்
கிடைக்கவில்லை.
4) இந்நூலின் மூலக்கருத்து என்ன?
கிறிஸ்துவின் மேன்மை பழைய ஏற்பாட்டுக் குருத்துவப் பலியை
விட
கிறிஸ்துவின் ஒரேபலி மேன்மையானது எனபதை
வலியுறுத்துகின்றது.
5) இத்திருமுகம் யாருக்காக எழுதப்பட்டது?
யூதக்கிறிஸ்தவர்களுக்கு.
6) வானதூதுவர்கள் என்பவர்கள்
யார்?
அவர்கள் அனைவரும் ஊழியம் புரியும் ஆவிகள். (1:14)
7) கிறிஸ்து தாமே சோதனைக்கு உட்பட்டது ஏன்?
சோதிக்கப்படுவோருக்கு உதவி செய்வதற்காக.(2:18)
8) மோசேக்கும், ஏசுக்கிறீஸ்துவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மோசே கடவுளின் ஊழியர், கிறிஸ்து கடவுளின் மகன். (3:5-6)
9) குருத்துவத்தைப்பற்றி இந்நூல்
கூறுவர் என்ன?
யாரும் இம்மதிப்புக்குரிய பணியை தாமே தேர்ந்து கொள்வதில்லை.
கடவுளிடமிருந்தே அழைப்பு வருகின்றது.(5:4)
10) தலைமைக் குருவின் பணி என்ன?
பாவங்களுக்குக் கழுவாயாக காணிக்கைகளையும், பலிகளையும்
மக்கள்
சார்பாக
செலுத்துகின்றனர். (5:1)
11) தலைமைக்குருவாகிய கிறிஸ்துவைப்பற்றி பவுல் கூறுவது
என்ன?
மேல்கீசதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே
(5:6)
12) இத்திருமுகத்தில் விபரிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்
யாவை?
திருமுழுக்கு, குருத்துவம், இறந்தோரின் உயிர்ப்பு
கடைசித்தீர்ப்பு ஆகியவை.(6:2)
13) நம்பிக்கையினின்று நெறிபிறழ்ந்து விடுவோரைப்பற்றி
பவுல் கூறுவது என்ன?
இவர்களை மனம் மாற்றி மீண்டும் புத்துணர்வு
பொறச் செய்வது
அரிது. (6:6)
14) மேல்கீசதேக்கு
என்பவர் யார்?
சாலேம் நகரின்
அரசர் (7:1)
15) மேல்கீசதேக்கு என்ற
பொயரின் பொருள் என்ன?
நீதியின் அரசர், அமைதியின்
அரசர். (7:2)
16) உடன்படிக்கைப் பேழையில் வைக்கப்பட்டிருந்தது என்ன?
மன்னா, ஆரோனின் தடித்த கோலும், உடன்படிக்கையின்
கற்பலகைகளும்
இருந்தன. (9:4)
17) இறப்பிற்குப் பிறகு நேரிடுவது என்ன?
தீர்ப்பு.
18) நம்பிக்கை என்பது என்ன?
நாம் எதிர்நோக்கி இருப்பவை, கிடைக்கும் என்னும் உறுதி:
கண்ணுக்குப்
புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. (11:1)
19) திருமணத்தை ஏன் உயர்வாக மதிக்கவேண்டும்?
ஏனெனில் காமுகனும், விபச்சாரத்தில் ஈடுபடுவோரும் கடவுளின்
தீர்ப்புக்கு
ஆளாவர். (13:4) |
|