Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 விவிலியத்தை அறிவோம்

(12)  கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 

1. பவுல் இத்திருமுகத்தை எப்பொழுது எழுதினார்?
     கி.பி.61ல்

2. இத்திருமுகம் எங்கிருந்து எழுதப்பட்டது?
     எப்பப்பிராவிடமிருந்து

3. கொலோசியர்கள் யாரிடமிருந்து இயேசுவைப்பற்றி அறிந்து கொண்டார்கள்?
     எப்பப்பிராவிடமிருந்து (1:7)

4. இத்திருமுகத்தில் குறிப்பிடப்படும் வானுலக ஆற்றல்கள் யாவை?
     *விண்ணில் உள்ளவை.
     *மண்ணில் உள்ளவை.
     *கற்புலனாகாதவை.
     *கற்புலனாகுபவை.
     *அரியணையில் அமர்வோர்.
     *தலைமை தாங்குவோர்.
     *ஆட்சியாளர். 
     *அதிகாரம் கொண்டோர்   போன்றவைகள். (1:16)

5. திருச்சபையாகிய உடலுக்குத் தலை யார்?
    இயேசுக்கிறீஸ்து. (1:18)

6. கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். என்பதன் பொருள்  
      என்ன?

      இயேசுக்கிறிஸ்து விண்ணுலகில் கடவுளோடு இருக்கின்றார் என்று பொருள்.

7. கொலோசியரிடம் காணப்பட்ட உலகப்போக்கிலான இயல்புகள் யாவை?
     *பரத்தைமை
      *ஒழுக்கக்கேடு
       *கட்டுக்கடங்காத பாலுணர்வு
        *தீயநாட்டம்
          *சிலைவழிபாடான பேராசை (3:5)

8. கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இருக்கவேண்டிய பண்புகள்   
      யாவை?

       *பரிவு
       *இரக்கம்
       *நல்லெண்ணம்
       *மனத்தாழ்மை
       *கனிவு
       *பொறுமை ((3:12)

9. கொலோசியருடைய பேச்சு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என 
     அறிவுறுத்துகின்றார்?

      இனியதாகவும், சுவையுடையதாகவும் இருக்கவேண்டும். (4:6)

10. பவுல் லூக்காவை எவ்வாறு அழைக்கிறார்?
      மருத்துவர்.(4:14)

11. இத்திருமுகத்தை கொலோசியர் வாசித்த பின்பு அதை யாருக்கு அனுப்புமாறு    
        பவுல் கூறினார்?

       லவோதிக்கேயா திருச்சபைக்கு அனுப்ப ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்
        கொண்டார். (4:16)
 
 

கலங்கரை தீபமே கலங்களின் தாரகையே துலங்கிடும் மணியே கலங்குவோர் கதியே காத்திடுவாய்த் தாயே