• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

   தவக்காலச் சிந்தனை

                                      

   
திருநீற்றுப் புதன்
தவக்காலத் தீர்மானம்
மன்னிப்பு
புனித வாரத்தில்
பாடுபட்ட இயேசு
குருத்துவம்
இயேசுவைப் பற்றி
தானம் - தர்மம்
திருப்பாடுகளின் தியானம்
 இயேசுநாதருக்குச் செய்யப்பட்ட 15 இரகசிய கொடுமைகள்
தவக்காலம் ஏன் ?
 
 
   
 
 
 
 
 
 
BIBLE AND EASTER SEASON..... new   
 திருத்தந்தை பிரான்சிஸ் - தவக்கால சிந்தனை
பேசுகிறேன் சிலுவைப் பாதை
 பேசுகிறேன்
 
சிலுவைப்பாதைகள்
தவக்கால உணவு A
1   2   3   4    5   6  7  8  9  10  11 12  13  14  15  16  17  18 19   20  22  23 24  25  26 27   28   29   30  31  32 33   34  35  36  37  38  39   40
   
தவக்கால பாதை B
1  2  3  4  5  6  7   8  9  10  11  12  13  14  15 16 17  18
  19  20  21 22  23  24  25 26 27 28  29  30   31  32  33  34  35   36  37  38 39 40
தவக்கால பிராத்தனைகள்
 01-mannal
      manithanai

 
02-ennkesumantu
 
03-enatusanamee
 
04-Parisutha kanni  mariyalin
புனிதவாரப் பாடல்கள் 1
புனிதவாரப் பாடல்கள் 2
 Lent Hymns
தவக்காலபாடல்கள்- 1
தவக்கால பாடல்கள்- 2
 மைந்தனார்சிலுவை மீது - பாரம்பரிய சிலுவைப் பாதை பாடல்  
தயை செய்வாய் நாதா
அம்மா வியாகுல அன்னையே
கண்ணீரே கண்ணீரே
யேசுவே யேசுவே
அன்பு என்பது இதுவோ
காருண்யமே
மன்னிப்பவன் தான் மனிதன்
பாடுகள் அவர் பட்டதும்
சிலுவை சுமக்கின்றேன
புனித வியாழன்
பாடல்கள்
             தவக்காலப்பாடல்கள புனித வெள்ளி
 
ஒப்புரவுப் பாடல்கள் (பாவமன்னிப்பு)
பாசமுள்ள இயேசப்பா
எனக்காக எல்லாம் எனக்காக
எனக்காக இறைவா
புனித வாரப் பாடல்கள்
குருத்தோலை ஞாயிறு
1 2 3
Holy Week   BIBLE AND EASTER SEASON.....new 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Lent Tamil   Lent  40  days
1) தவக்காலம் ஏன் ?
2) பாவம் என்றால் என்ன?
3) திருப்பாடுகள் நமக்கு உணர்த்துவது
4) இயேசு நாதர் சுவாமி தீர்ப்பிடப்படுகிறார்..
5) இயேசு நாதர் சுவாமியின் தோளில் சிலுவை.
6) திவ்ய இயேசுவுக்கு திருச்சிலுவை பரிசு..
7) முதல் முறை மண்ணை முத்தமிடுகிறார்.
8) தாயும் மகனும் சந்திக்கிறார்கள்..
9) மாபரன் இயேசுவுக்கு சீமோனின் உதவி...
10) வீரப்பெண் வெரோனிக்கா...
11) இயேசுநாதர் சுவாமி சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில்
     விழுகிறார்...
13) இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 9-ம் ஸ்தலம்..
14) இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட பத்தாம் ஸ்தலம்...
15) ஆண்டவருடைய திருப்பாடுகளின் அகோரம்
16) " இளந்தளிர் போல் அவர் வளர்ந்தார், வரண்ட நிலத்திலிருக்கும் வேர்
        போலத் துளிர்த்தார்"
17) ஆனால் நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார்
18) ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழி தவறி அலைந்தோம்
20) புதுவிதமான நூதன தண்டனையை நமக்கு தருகிறார் நம் பரமன்..
22) அவரை விசுவசித்தவர்கள் மட்டுமே மீட்படைவார்கள்.
23) நம் அரசரின் சிரசில் முள்முடி...
24) நம் இயேசு தெய்வத்தை சிலுவையில் அறைகிறார்கள்...
25) "நாம் தண்டிக்கப்படுவது முறையே "
27) " என் இறைவா! என் இறைவா! ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்"
29) இயேசு சுவாமியை அடக்கம் செய்கிறார்கள்..
30) " தாகமாயிருக்கிறது"  (அருளப்பர் 19 : 28)
32)  மாதாவின் வியாகுலம்.. ..
தவக்காலம் வந்ததுவே....*
சாம்பல் பூசி
சோம்பல் களைந்து

தவத்தை துவங்கி
தவற்றைத் திருத்தி

ஒரு சந்தி இருந்து
ஒறுத்தலில் நிறை கண்டு

செபத்தில் நுழைந்து
செபித்தலில் மகிழ்ந்து

சிலுவைப் பாதை கண்டு
சில பாவம் தொலைத்து

இறை சன்னதியில் அமர்ந்து
இரக்கத்தை வேண்டி

திருப்பலியில் பங்கேற்று
திருத்திய மனம் கொண்டு

தியானத்தில் இணைந்து
சமாதானத்தை உணர்ந்து

மனமாற்றம் காணவே
செயல் மாற்றம் அடையவே
தவக் காலம் வந்ததுவே...

அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை
     நல்லகாலம்

மாறி வருகின்ற பருவ காலங்களில், மக்களுக்கு உகந்த காலம் எது? என விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தை உகந்த காலம் என மேற்கோள் காட்டி விவாதித்தனர் நடுவரோ தனது தீர்ப்பில், மனிதர்கள் எந்தக்காலத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உணவு உண்டிருந்தால், அதுவே அவர்களுக்கு நல்ல காலம், வறுமை துன்பம் இல்லாது இருந்தால் அதுவே அவர்களுக்கு உகந்த காலம் என்று சொன்னார்.


வயிறு நிறைய உணவு உண்டு, தான் மட்டும் மகிழ்ந்திருப்பது அல்ல, அயலாரையும் மனநிறைவோடு வாழச் செய்ய வேண்டும். அடுத்தவர் நலமாக வாழ்ந்தால், நமது நலமும் கூடுதலாகும்  அப்படியான காலமே அனைவருக்கும் நல்ல காலம். அவை எல்லாவற்றையும் விட இறைவனோடு இருக்கின்ற காலமே நமக்கெல்லாம் நல்ல காலம்.

"நன்மைக்கும் தீமைக்கும் வேறுபாடு தெரியாத போக்கில் இன்றைய உலகம் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே அயலார் மீது நமது அக்கறையை இந்த தவக்காலத்தில் திருப்புவோம்" என திருத்தந்தை தவக்காலச் செய்தியாக தருகிறார்.


பள்ளி மாணவன் ஆசிரியரையே கொலை செய்யும் அளவுக்கு மனித உணர்வு சீரழிந்து கொண்டிருக்கின்றது. மனித உரிமை மதிக்கப்படாமல், மனிதநேய சிந்தனை மடிந்து கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் தவக்காலச் சிந்தனையை ஆரம்பிக்கின்றோம். தீபத்தின் சுடர் மேல் நோக்கி எரிவதுபோல், நம் சிந்தனையை உயர்த்திக் கொள்ள வேண்டும். தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள், நம் நடுவே இறையரசை, அன்பை, அமைதியை, ஒற்றுமையை விசுவாசத்தை மனித நேயத்தை கட்டி எழுப்புவதாக அமைய வேண்டும். நாம் மேற்கொள்ளும் செபம், தபம், ஒறுத்தல் முயற்சிகள் நம்மை புண்ணியத்தில் உறுதிப்படுத்த வேண்டும். நன்மை செய்தவருக்கு நன்மையே செய்யவும், தீமைக்கும் நன்மையே செய்யவும், எதுவுமே பிறர் நமக்கு செய்யாதபோதும் நாமாக வலியச் சென்று நன்மையே செய்யவும் வேண்டும். இதைத்தான் தவக்கால சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தவக்காலம் செபத்தின் காலம். இறைவனோடு சகமனிதரோடு ஓப்புரவாக வாழ அழைக்கும் காலம். இரக்கத்தின் காலம். அருளின் காலம். மன்னிப்பின் காலம். நாம் எத்தனை பாவம் செய்திருந்தாலும் மன்னிப்பு வழங்கி, நம்மை புனிதராக மாற்றும் புனிதக் காலம். தாழ்ச்சி, பொறுமை, பரிவு, அன்பு என்ற புண்ணிய உணர்வுகளை உள்ளம் நிறைய அடுக்கி வைத்துக் கொள்ள, இந்தக் காலத்தில் இறைவனுக்கு அருகில் நெருங்கிச் செல்வோம்.

நமது பாதையில் நாம் செய்த தவறுகளுக்காக கடவுள் மன்னிப்பாரா? நம்மால் நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்க முடியுமா? மறக்க முடியுமா? எதுவாக இருந்தாலும் கடவுள் நமக்குப் பச்சைக் கொடி காட்டுவார். நாமும் பிறருக்கு பச்சைக் கொடி காட்டுவோம்.

குற்றம்புரிந்த சிறுவன் ஒருவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டான். எங்கிருந்தோ தனது முகவரியை மறைத்து, இவ்வாறு தந்தைக்குக் கடிதம் எழுதினான்: "அப்பா! எந்த நிபந்தனையுமில்லா மல் நான் வீடு திரும்பி வரும்போது, என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னுடைய வேண்டுகோளுக்கு நீங்கள் இணங்கினால், நமது வீட்டிற்கு முன்னால் உள்ள ஆலமரத்துக் கிளையொன்றில் ஒரு பச்சைக் கொடியைக் கட்டித் தொங்க விடுங்கள். நினையாத நேரத்தில் நான் வருவேன். கொடியைக் காணவில்லை என்றால் நான் வீட்டிற்குள் நுழைய மாட்டேன்"

இவ்வாறு வீடு திரும்ப நினைத்த சிறுவன், ஒரு நாள் பேருந்தில் ஒரு வயதானவரின் பக்கத்தில் அமர்ந்திருந்தான்.  அவன்  கலங்கிய  கண்களைக்  கண்டபெரியவர் காரணத்தை அறிந்து கொண்டார். சிறுவனோ "தாத்தா கொடி இல்லை என்றால் என்ன செய்வது? எனக்கு ஒன்றும் புரியவில்லை! எங்கள் வீட்டு வழியாகத்தான் இந்தப் பேருந்துச் செல்லும். கொடியிருக்கின்றதா என்று பார்த்துச் சொல்லுங்கள்" என்றான்.

வயதானவரும் "சரி" என்றார். வீட்டைப் பேருந்து கடந்தது. பெரியவரின் கலங்கிய கண்களைப் பார்த்து, "ஏன் தாத்தா? என்ன நடந்தது" என்றான். வயதானவரோ! "தம்பி! ஒரு கொடியைக் கட்டி வைத்தால் நீ எங்கோ பார்த்தும் பார்க்காமல் சென்றுவிடுவாயோ என்று எண்ணி, மரம் முழுவதும் உன் தகப்பன் எண்ணற்ற கொடிகளைக் கட்டி வைத்திருக்கிறார்" என்றார். இதைக் கேட்டு சிறுவன் அதிர்ந்து போனான்.


நம்முடைய ஒவ்வொரு கருணைச்செயலும் மற்றவர்களை மகிழ்ச்சி நிறைந்த அதிர்ச்சிக்கு ள்ளாக்க வேண்டும். அதற்கு தந்தை, மகனே நீ என்றும் என்னுடன் இருக்கிறாய். என்னுடைய தெல்லாம் உன்னுடையதே. நாம் விருந்தாடி மகிழ்வது முறையே. ஏனெனில் உன் தம்பி இறந்து போயிருந்தான் உயிர்த்துவிட்டான்: காணாமற் போயிருந்தான், கிடைத்துவிட்டான் என்றார்.(லூக் 15:31,32)

மனித இனம் அழிவதற்கு மனிதரிடையே உள்ள வெறுப்பு, பொறுப்பின்மை, கலாச்சாரசீரழிவு, பொறாமை, எரிச்சல் இவை காரணமாகும். எல்லோருக்கும் நல்ல காலமாக வாழத் தூண்டும் அன்பு, பொறுமை, அமைதி போன்ற பண்புகள் மனத்திருப்தியின்போது வெளிப்படும். இத்தகைய நற்பண்புகளை வளர்த்தெடுப்போம். மனிதர்களாக மாறுவோம்

இந்த தவக்காலம், நாம் சமூக அக்கறை கொண்டவராக மாறவும், நம்மிடம் இருக்கும் அன்பு, வெறும் வார்த்தையோடு நின்றுவிடாமல் செயலாக்கம் பெறவும் அழைக்கிறது.

ஒரு அறிஞன் கூறுவது போல, பண்பும், பணிவும், பாசமும் நம்மை நல்லவர்களாக்கும்.

அடக்கமும், ஒழுக்கமும், பரிவும் நம்மைச் சிறந்தவர்களாக்கும்.

உண்மையும், உழைப்பும், விடாமுயற்சியும் நம்மை உயர்ந்தவர்களாக்கும்.

ஆர்வமும், முயற்சியும் நம்மை வெற்றியாளர்களாக்கும்.

திறமையும், அறிவும், ஆற்றலும் நம்மைச் சாதனையாளர் களாக்கும்.

ஆனால் அன்பும், கருணையும், பணிவும், தாழ்ச்சியும், விட்டுக்கொடுக்கும் தன்மையும், பகிர்வும், மன்னிப்பும்தான் நம்மை மனிதர்களாக்கும்.

நாமும் இத்தவக்காலத்தில் மனித நேயம் போற்றும் மனிதர்களாக மாறுவோம். பிறரையும் மாற்றுவோம். அப்பொழுது எப்போதும் எல்லோருக்கும் நல்லகாலமே!

"என் நுகம் இனிது: என் சுமை எளிது"(மத் 11:30)
             கடந்த காலம் உடைந்த பானை:
             எதிர்காலம் மதில்மேல் உள்ள பூனை:
             நிகழ்காலம் கையிலுள்ள வீணை.

நாமும் நிகழ்காலத்தை மனதில் வைத்து மாற்றம் அடைவோம்! பிறருக்கு வீணையில் எழும் இசையாக மாறுவோம்!!  மாற்றம் பெறுவோம்!!!

மாற்ற முடியாதென நினைத்ததை மாற்றிக் கொள்ள, மற்றுமொரு தவக்காலம் நமக்காகவே வந்திருக்கிறது.....

பாதைகள் கரடு முரடுதான், பயணத்திற்கு முன் பாதங்களை சரி செய்யலாமே.....

சடங்குகளின் ஆணிவேர்களை சாம்பலாக்கி, உயிருள்ள மனசுகளை நேசிக்கச் சொல்லி, நெற்றியில் பூசும் சாம்பல் இத்தவக்காலத்தின் வெற்றிக்கு அஸ்திவாரமாகிறது.......

நோன்பு, செபம், தபம், தருமம், அறநெறிச் செயல்களை அன்றாடம் செய்யும் போது, ஒழுக்கம் நமக்கு நெருக்கமாகிறது......

அயலவரை அன்பு செய்வதால் அர்த்தமுள்ள வாழ்க்கையின் விதி பூர்த்தியாகிறது.......

இறையரசின் கனவு மெய்ப்பட இந்தத் தவக்காலத்தில் பாதங்களை சரி செய்து நல்ல காலத்தில் பயணிப்போம்......

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!