தவக்காலம்
அனைவருக்கும் மன்னிப்பு உண்டு
|
நம்மில் பலரும் "இத்துணை
பாவியான என்னை கடவுள் விரும்புவாரா?" என்ற சந்தேகத்திலேயே
கடவுளிடம் நெருங்கி வராமல் வாழ்ந்து வருகின்றோம். யூதாசு பாவம்
செய்து, அதன் குற்ற உணர்ச்சியில் தன்னை மாய்த்து கொண்டான்.
இயேசு தன்னையும் மன்னிப்பார் என்று யூதாசு தெரிந்திருக்கவில்லை.
அனால் இயேசுவோ, தன்னை கொடூரமாக சிலுவையில் துடிதுடிக்க
அறைந்தவர்களை கூட, மன்னிக்கும்படி தந்தையிடம் மன்றாடினார்.
இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்.
ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை"
என்று சொன்னார். (லூக்கா 23:34)
எனவே யூதாசும் கடவுளிடம் மன்னிப்பு
கோரியிருந்தால், அவரும் மும்முறை மறுதலித்த இராயப்பர் மற்றும்
கிறிஸ்தவர்களை வதைத்த சவுல், ஆகியோரை மன்னித்து போல்
யூதாசையும் மன்னித்திருப்பார். யூதாசு ஒரு அப்போஸ்தலராக
உயர்ந்திருப்பார்.
ஆகவே கடவுள் பாவிகளை வெறுக்கவில்லை, பாவத்தையே
அருவெறுக்கின்றார். காணாமல் போன ஆட்டை தேடும் ஆயன் போல்,
பாவத்தில் தொலைந்த நம்மை அவர் எப்போதும்
தேடிக்கொண்டுருக்கின்றார். மனம்திரும்புவோம்!!!
"மனம் மாறத் தேவையில்லாத்
தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும்
மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து
விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான்
உங்களுக்குச் சொல்கிறேன்."
(லூக்கா 15:7) |
|