Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 தவக்காலச் சிந்தனை

                                                          

01.03.2017: இறைவார்த்தை - லூக் 18:9-14
நாம் நேர்மையாளர் என்று எண்ணி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்க வேண்டாம்!
தீர்மானம்: உள்ளத்தை சுத்தமாய்ப் பேணுவேன்

02.03.2017 : இறைவார்த்தை - மாற் 12:28--34
இறைவனையும் பிறரையும் அன்பு செய்து வாழ்வோம் !
தீர்மானம்: சமுதாயத்திற்கு முன் மாதிரியாவேன்

03.03.2017: இறைவார்த்தை - லூக் 11:14-23
தனக்கு எதிராக தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய் போகும்!
தீர்மானம்: திருச்சபைக்கு எதிராக செயல் படமாட்டேன்

04.03.2017: இறைவார்த்தை - மத் 5:17-19
திருச் சட்டத்தையும், இறை வார்த்தைகளையும் கடைப்பிடித்தல் நன்று!
தீர்மானம்: திருச்சட்டங்களைக் கடைபிடிப்பேன்.

05.03.2017: இறைவார்த்தை - லூக் 11.02. 2016
அடையாளம் கேட்கும் தீய தலைமுறையினராக நாம் இருக்க வேண்டாம்
தீர்மானம்: கெட்டப்பழக்கங்களை விட்டுவிடுவேன்

06.03 2017: இறைவார்த்தை - மத்: 6:8
நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் தந்தை அறிந்திருக்கிறார்.
தீர்மானம்: பிறர் தேவையை அறிந்து உதவுவேன்

07.03.2017: இறைவார்த்தை - மத் 7:7-12
உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார்
தீர்மானம்: பேராசை கொள்ள மாட்டேன்

08.03.2017: இறைவார்த்தை - மத் 5:20-26
தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனை தீர்ப்புக்கு ஆளாவர்!
தீர்மானம்: கோபத்தை தவிர்ப்பேன்

09.03.2017 : இறைவார்த்தை - மத் 5:43-48
பகைவருக்கு அன்பு செய்யுங்கள் துன்புறுவோருக்காக் செபியுங்கள்!
தீர்மானம்: பகைவரை அன்பு செய்வேன்

10.03.2017: இறைவார்த்தை - லூக் 9:28-36
இவரே என் மைந்தர், நான் தேர்ந்து கொண்டவர் இவரே, இவருக்கு செவிசாயுங்கள்!
தீர்மானம்:இயேசுவின் வார்த்தைக்கு செவிமடுப்பேன்

11.03.2017: இறைவார்த்தை - மத் 23.02.2016
தம்மை உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர், தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவோர்.
தீர்மானம் :தாழ்ச்சியோடு வாழ்வேன்

12-03-2017: இறைவார்த்தை - மத் 20:17-28
மானிட மகனைப் போல நாமும் தொண்டேற்பதை விடுத்து தொண்டாற்றுவோம்.
தீர்மானம்: பங்கின் வளர்ச்சிக்கு உதவுவேன்

13.03.2017:இறைவார்த்தை - லூக் 16:19-31
பிறரைக் கண்டு கொள்ளாமை, அல்லது பகிராமை பெரிய பாவமாகும்!
தீர்மானம்: பகிர்ந்து வாழுவேன்

14.03.2017: இறைவார்த்தை - மத் 21:33-45
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆகும்!
தீர்மானம்: எவரையும் புறக்கணிக்கமாட்டேன்

15.03.2017: இறைவார்த்தை - லூக் 15:1-3,11-30
பாவம் செய்தவர் அதை அறிக்கையிட்டு மன்னிப்பு பெறுதல் வேண்டும்!
தீர்மானம்: ஒப்புரவு அருட்சாதனம் பெறுவேன்.

16.03.2017: இறைவார்த்தை - லூக் 13:1-19
கனி தராத மரமாக இருந்தால் வெட்டப்படுவது உறுதியே
தீர்மானம்: குடும்பத்தை பராமரிப்பேன்

17.02.2017: இறைவார்த்தை - லூக் 4:24-30
இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் மதிக்கப்படுவதில்லை!
தீர்மானம்: குருக்களை மதிப்பேன்

18.03.2017: இறைவார்த்தை - லூக் 4:24-30
நாம் இரக்கம் பெற்றால், பிறருக்கு இரக்கம் காட்டவேண்டும்!
தீர்மானம்:  இரக்கத்தோடு வாழ்வேன்

19.03.2017: இறைவார்த்தை - மத் 5:17-19
திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் கடைபிடித்து வாழ்தல் நன்று!
தீர்மானம்: திருச்சட்டங்களைக் கடைபிடிப்பேன்

20.03.2017: இறைவார்த்தை - லூக் 11:14-23
தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும்
தீர்மானம்: திருச்சபைக்க்கு எதிராக செயல்படேன்

21.03.2017: இறைவார்த்தை - மாற் 12:28-34
இறைவனையும் பிறரையும் அன்பு செய்து வாழ்வேன்
தீர்மானம்: சமுதாயத்திற்கு முன் மாதிரியாவேன்

22.03.2017: இறைவார்த்தை - லூக் 18:9-14
நாம் நேர்மையாளர் என்று எண்ணி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்க வேண்டாம்!
தீர்மானம்: உள்ளத்தை சுத்தமாகப் பேணுவேன்.

23.03.2017: இறைவார்த்தை - லூக் 4:1-13
உன்கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்
தீர்மானம்: கடவுளைச் சோதிக்கமாட்டேன்

24.03.2017: இறைவார்த்தை - லூக் 15:11-32
பாவத்தினால் நாம் கடவுளை விட்டு பிரிந்து விடுகிறோம்.
தீர்மானம்: தீய வழியில் நான் நடக்கமாட்டேன்.

25.03.2017: இறைவார்த்தை - யோவா:15:4-34
கடவுளின் வார்த்தையை நம்புவோர் நன்மையே பெறுவர்
தீர்மானம்: கடவுளை நம்புவேன்

26.03.2017: இறைவார்த்தை - யோவா:5:17-30
கட
வுள் அளிக்கும் தீர்ப்பு நீதியானது
தீர்மானம்: நீதிக்காகப் போராடுவேன்

27.03.2017: இறைவார்த்தை - யோவா:1,3,5
இதைவிடக் கேடானது நிகழாமல் இருக்க இனிமேல் பாவம் செய்யாமல் இருப்போம்
தீர்மானம்: பாவம் செய்யமாட்டேன்

28.03.2017: இறைவார்த்தை - யோவா:5:31-47
நம்மைப்பத்தி நாம் நான்று பகர்ந்தால் அது செல்லாது
தீர்மானம்: தற்புகழ்ச்சி கொள்ளமாட்டேன்

29.03.2017: இறைவார்த்தை - யோவா:8:1-11
எவரையும் தீர்ப்பிடவேண்டாம் பாவம் செய்ய
வும் வேண்டாம்.
தீர்மானம்: எவரையும்  தீர்ப்பிடேன்

30.03.2017: இறைவார்த்தை - யோவா:8:51-59
இறைவார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்.
தீர்மானம்: தீய வார்தைகளைப் பேசடமாட்டேன்.

31.03.2017: இறைவார்த்தை - மத்:1:16,18-21,34
ஆண்டவர் கட்டளைக்குப் பணிந்து நடப்பதே அனைத்திலும் சிறந்தது.
தீர்மானம்: நல்வழியில் நடப்பேன்.
                                       
 

வழியிழந்து வருந்துவோரைத் தேற்றும் அன்னையே !
வாழ்க்கைப் பயணம் போகும்போது துணையாய் நின்றவளே!