• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அருட்சாதனங்கள்

 

திருமண முன்னுரை

             திருமணம் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது நம் கண்களுக்கு வியப்பே!

வாருங்கள் பொங்கிப் பாயும் ஆண்டவரின் அருள் பெற வாருங்கள்!

கருவிலே முன் குறிக்கப்பட்டு கருணைக்கடலாம் இறைவனின் திட்டத்திற்கேற்ப, இன்று கரங்கள் மட்டுமல்ல, அன்பில் ஒன்றாய்க் கலந்திடும் இதயங்களாம் இவர்களை வாழ்த்தி ஜெகத்தில் பங்கீடு செய்ய, பாசத்தோடு வந்துள்ள பண்பாளர்களே! குருகுலமே!! இறைகுலமே!!! எங்கள் குடும்பத்தினரின் நேசக்கரங்கள் இணைய, அகமுகம் மலர, திருமணவிழாவிற்கு வருக, வருகவென வரவேற்கின்றோம்.

நம் மணமக்களுக்கு இன்று ஓர் பொன்நாள். ஒருவரை ஒருவர் பாசத்தின் பரிசாக ஏற்கும் நன்நாள். பாசமும் நேசமும், பகிர்வும் பங்கீடும், சமத்துவமும் சமதர்மமும், கடமையும் கண்ணியமும், மகிழ்வும் நிம்மதியும், பிரமாணிக்கமும் பிணைப்பும் இதயங்களில் நிறைந்திடும் இனிய நாள். அன்பே ஆணிவேராக, வாழ்வே பாடமாக, இறைவார்த்தையே மூலைக்கல்லாக, ஆதரவும் அரவணைப்பும் பாலமாக, அமைதியும் ஆசீரும் நிறைந்த குடும்பத்தை உருவாக்கி இறைவன் தரும் கொடைகளாம் மக்கள் செல்வங்களோடு என்றும் இன்பமாய் வாழ்ந்திட நெஞ்சம் நிறைந்து வாழ்த்துவோம்.

தியாகத்தில் கனியும் இரக்க உணர்வில், நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்லி, உள்ளத்தில் நேர்மையும், உதடுகளில் உள்ளொளியும் பெற்று, செய்யவேண்டியதை சரியான நேரத்தில், சரியான பாதையில், சரியாய்ச் செய்யும் மனப்பக்குவமும், எதுவந்தபோதும் இணைந்தே செயல்படவும், தூய ஆவியின் கொடைகள், கடவுளின் ஞானம், மழையென பொழியப்பட, மணமக்களுக்காக மன்றாடுவோம்.

நீயே என் வலிமை. நீயே என் கற்பாறை, நீயே என் உயிர் தரும் ஊற்று என்று, இறைவா, உன் நிரந்தர அன்பை தாகம் தீரப்பருகி, அதைப் பிறருக்கும் சமூகத்திற்கும் அள்ளிக் கொடுத்திட அருள் கேட்டு, பலிப்பீடம் வந்துள்ள மணமக்களே! நீவிர் வாழ்க! மகிழ்வுடன் வளமுடன் வாழ்க!! பல்லாண்டு உம் நினைவுகள் மலர்க!!! என்று வாழ்த்தி, செபித்து, இருமனங்கள் ஒன்றிணையும் இத்தெய்வீகத் திருப்பலியில் பக்தியுடன் பங்கு பெறுவோம்.



வேண்டுதல்கள்


அன்புத் தந்தையே இறைவா!

இன்று திருமணம் என்னும் அருட்சாதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இப் புதுமணத்தம்பதிகள் (பெயர்) தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, திருக்குடும்பத்தைப் போல அன்பிலும் பிரமாணிக்கத்திலும், மகிழ்ச்சிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


அன்பின் ஊற்றாகிய இறைவா!
"இறைவன் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப இவர்கள் அன்பிலும் புரிந்துணர்விலும் ஒருவரை ஒருவர் ஒன்றித்து வாழவும், இவ்வுலகில் தங்கள் கடமை எது என்பதை உணர்ந்து வாழவும் தூயஆவியின் கொடைகளால் நிரப்பி நீரே வாழ்வும், வழியும், ஒளியுமாய் இருந்து, வழி நடத்திடவும் வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்


கருணைக்கடலே இறைவா!
அன்று கானாவூர் திருமணத்தை ஆசீர்வதித்து எவ்வித குறையும்   ஏற்படாமல் கன்னிமரியாள் இறைமகன் கிறீதுவிடம் வேண்டிக் கொண்டதுபோல இப்புதுத்தம்பதியினரின் வாழ்க்கையிலும் கன்னிமரியாளின் உதவியாலும் வழிநடத்துதலாலும் இறைமகனின் ஆசீரையும் நிறைவாகப் பெறவும் அவர்கள் அன்பின் அடையாளமாக நன்மக்களைப் பெற்று, என்றும் மகிழ்ந்திருக்க உமது நிறைவான ஆசீரைப் பொழிந்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


அன்பின் ஊற்றாகிய இறைவா!
(மணமக்கள் பெயர்) என்ற இம்மணமக்களின் இல்லறம் நல்லறமாக அமையவும், பெற்றோர் உற்றாருடன் அன்புறவுடன் வாழவும், இவர்களின் ஆன்ம உடல் நோய்களை அகற்றி இவர்கள் வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று இன்புற வாழவும், வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


அருளின் ஊற்றே இறைவா!
இந்த திருமணக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தும் இந்த அருட்பணி அடிகளார் தொடர்ந்தும் உமது பணியைச் சிறப்பாகப் புரிய ஆன்ம உடல் நலத்தை பெற்று உமது அன்பில் நிலைத்து வாழவும் இன்னும் இத் திருமணக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் தம்பதியர் அனைவரும், தங்கள் திருமண வார்த்தைப்பாட்டை மீண்டும் நினைவு கூர்ந்து அதைப் புதுப்பித்து, இறை அன்பிலும், பிறரன்பிலும் இயேசுவுக்குச் சாட்சியாக வாழும் வரத்தினை வழங்கிடவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



திருமண திருப்பலி முன்னுரை 2


திருமண திருப்பலி முன்னுரை 3


திருமண திருப்பலி முன்னுரை 4


திருமண திருப்பலி முன்னுரை 5


திருமண திருப்பலி முன்னுரை 6


திருமண திருப்பலி முன்னுரை 7





பொன்விழ மன்றாட்டு பாடலில்

தந்தை இறைவனே - தந்தை இறைவனே
எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும் - தந்தை இறைவனே

இன்றிந்த நன்னாளில்- பொன்விழாக்காணும்- இனிய தம்பதியர்
இறைவன் அருளிய - கொடைகளுக்காக - நன்றி நவில்கின்றனர்
இனிவரும் வாழ்விலும் - இறைஅன்பில் வாழ - உறுதி பகன்றிட
நிறைவாய் உமது - ஆசீரைத் தாரும் - அன்புத்தந்தையே

குடும்பக் கோவிலைக் - கட்டிக் காத்து வாழ்ந்த இத்தம்பதியரின்
மக்கள் மருமக்கள் - பேரப்பிள்ளைகளையும் - அறவழியில் வாழச்செய்து
அன்பென்னும் மொழியை - வாழ்வில் என்றும் - நிலையாய் கொள்ளவும்
உமது அருளை- நிறைவாய் இவர்க்குத் - தாரும் தந்தையே

கானாவூரில்- திருமணப்பந்தியில் - கனிரசம் அருளி.......
முதல் புதுமையை - ஆரம்பித்த - கருணைத் தெய்வமே
குடும்ப வாழ்வில் - பொன்விழாக் கண்டு - மகிழும் இவர்களை
உமது கரங்கள் - நீட்டி ஆசீர் - தாரும் இறைவனே

நன்றித் திருப்பலியில் - பங்கு கொண்ட- இறைகுலம் அனைவர்க்கும்
புனித பலியை - ஒப்புவிக்கும் - அருட்தந்தை அவர்கட்கும்
இறைவன் அருளும் - புனிதர் உறவும் - நிறைவாய் விளங்கிட
கிருபை நிறைந்த - உமது அருளைத் - தாரும் தந்தையே

எமது தாய்திரு- ஈழநாட்டில் - வாழும் மக்களின்
வாயிருந்தும் -பேசமுடியாத - அடிமைத்தனம் நீங்கி
நல்லுறவும் - சமத்துவமும் கொண்ட - மக்களாய் வாழ
நிறைவாய் உமது - அருளைத்தாரும் - தந்தை இறைவனே
 

மங்களம் மங்களம் பொங்கிடவே
வாழியவே மணமக்களே சீருடனே வாழ்ந்திடவே