• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

திருமண முன்னுரை

  திருமண திருப்பலி முன்னுரை 5  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கையில் அன்போடும் அறத்தோடும் விளங்கினால் அவ்வாழ்க்கையே பண்பாகவும் பயனாகவும் அமையும் என்பது இத்திருக்குறளின் விளக்கம்.

அன்போடும், அறத்தோடும் வாழ இல்வாழ்க்கையில் புகவிற்கும் செல்வன். ............ மற்றும் செல்வி......... இவர்களின் திருமண நிகழ்வில் பங்கெடுத்து கடவுளின் ஆசியையும், தங்களின் ஆசியையும் வழங்க வந்துள்ள அருட்தந்தையர்கள், உறவினர்கள் ஆகிய உங்கள் அனைவரையும் இந்த கல்வாரி திருப்பலிக்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

ஒருவருக்கு வாழ்வு கொடுப்பதல்ல அருட்சாதனங்கள் . ஒருவருடன் ஒருவர் வாழ்வை பகிர்வதே திருமணமாகும். அவ்வகையில் இந்நாள் வரை தங்களுக்காக வாழ்ந்த இவர்கள் இத்திருச்சடங்கின் மூலம் ஒருவர் மற்றவருக்காக வாழவிருக்கிறார்கள். இவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நின்று பாசத்தை மாறா நேசத்தோடு பகிர்ந்து வாழ நாம் அனைவரும் இவர்களுக்காக இத்திருப்பலியில் இணைந்து செபிப்போம்.

அருட்சாதனங்கள் செய்யவிருக்கும் செல்வன்..(பெயர்) செல்வி..(பெயர்) இச்சடங்கின் மூலம் உங்களுக்கு சமூகத்தில் மதிப்பும், பொறுப்பும் அதிகரிக்கின்றது. எனவே இந்த மங்கல நாளில் திருவிவிலியத்தில் காணப்படும் திருமண தம்பந்தியராகிய தோபித்து மற்றும் சாரா ஆகிய இருவரும் தங்களின் திருமண வாழ்வை தொடங்கும் முன் நாங்கள் இருவரும் முதுமை அடையும் வரை இணைபிரியாது வாழச் செய்யும் (தோபித்து 8:7) என்ற செபத்துடன் திருமண வாழ்வை தொடங்கினார்கள். என்று தோபித்து நூல் அதிகாரம் 8 வசனம் 7 கூறுவதைப் போலவே நீங்களும் இணைந்து இணைபிரியாது வாழ இத்திருப்பலியில் செபியுங்கள்.

எல்லா அருளும் நிறைந்த இறைவன் தன் ஆசியால் இவர்களையும், நம்மையும் நிரப்ப அருட்தந்தையர்களோடு இணைந்து செபித்து இறையாசீரை பெற இத்திருப்பலியில் அனைவரும் பக்தியோடு பங்கொடுப்போம்.





வேண்டுதல்கள்

1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த ,ப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும்,
திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம்
மணமக்களுக்கும் ஆசியளித்து, உம் அன்புக்கு அடையாளமாக
மக்களைப் பெற்று அவர்கள்என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

5. மாட்சிமிகு தந்தையே இறைவா!
மணமகன் இயேசுவின் அன்பின் மணவாட்டியாம் திரு அவையை ஆசிர்வதித்து, இதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும், உமதன்பால் பிணைக்கப்பட்டு, தூய ஆவி குடிகொள்ளும் ஆலயமாகி, உம்மையே என்றும் மாட்சிப்படுத்தி ஒரே மனத்தினராய் வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. அன்பே உருவான இறைவா!
திருமணமென்னும் அருள் அடையாளத்தின் முலம், இல்லற வாழ்வுதனில் இணைந்திருக்கும் (பெயர்கள்) இவர்களுக்கு உமது வளமான ஆசிகளை வழங்கி என்றும் இவர்களை உமதன்புறவில் இணைத்து வாழ்விக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்