திருமணத்திருப்பலி முன்னுரை 2 |
கிறீஸ்துவில் அன்புள்ள சகோதர சகோதரிகளே! மங்கலம் நிறைந்த இத்திருமணத் திருப்பலியில் பங்குகொள்ள இறைவனின் ஆலயத்தில் நாம் கூடியுள்ளோம். அருட்சாதனம் இருஇதயங்கள் பாசத்தால் இணைந்து தொடரும் ஓர் உறவுப்பயணம். படைப்பின் தொடக்கத்தில் இறைவன் மனிதரை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இருவரும் ஒரே உடலாக அன்புறவில் வாழவேண்டுமென்று ஆசீர்வதித்தார். ஆண்டவராகிய இயேசு திருமணத்தை ஓர் அருட்சாதனமாக உயர்த்தினார். இப்போது மணமக்கள் (பெயர்கள்)இருவரும் திருமண அருட்சாதனத்தைப் பெற்று இறைவனின் ஆசியுடன் தங்கள் அன்புப் பயணத்தைத் தொடங்கவும் புதிய குடும்பத்தை உருவாக்கவும் வந்துள்ளனர். இவர்கள் நூறாண்டு காலம் வாழவும் நோய் நொடி இல்லாமல் வளரவும் ஒருவரில் ஒருவர் உயிராய் வாழவும் வளங்களைப் பெற்று நலமோடு வாழவும், இவர்கள் அமைக்கும் இல்லற பூந்தோட்டத்தில் பிள்ளைச் செல்வங்கள் மலரவும், ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துஇ ஒளிமயமான எதிர்காலத்தை உருவாகவும், குடும்பத்து விளக்காய் மணமகள் வாழவும், மணமகன் கண் கண்ட தெய்வமாக மாறவும்இ வாழும் நாடும், வளரும் வீடும் மணம் பெறவும் நாம் அனைவரும் இவர்களுக்காக பக்தியோடு திருப்பலியில் ஜெபிப்போம். அவர்களுடைய மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்வோம். விசுவாசிகளின் மன்றாட்டு 1. இப்பொழுது திருமணத்தில் ஒன்றிணைந்த இப்பதிய மணமகனும் மணமகளும் தங்கள் இல்லற வாழ்வில் சமாதானமாகவும் மகிழ்ச்சியாகவும் என்றும் வாழ்ந்திட வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 2. உலகிலும் திருச்சபையிலும் அமைதி நிலவ வேண்டுமென்றும், திருச்சபையின் ஒற்றுமை மேன்மேலும் வளர வேண்டுமென்றும் ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 3. கானாவூர் திருமணத்தில் மணமக்களுக்கு ஆசியளித்தது போல், இம் மணமக்களுக்கும் ஆசியளித்து , உம் அன்புக்கு அடையாளமாக மக்களைப் பெற்று அவர்கள் என்றும் மகிந்திருக்கச் செய்ய வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 4. இப்புதிய மணமக்கள் (பெயர்...) அமைக்கும் இல்லமும், மற்ற கிறிஸ்தவக் குடும்பங்கள் அனைத்துமே தம் திருமண அருளில் என்றும் நிலைத்து நிற்கவும், உம் திருப்பெயருக்கு ஏற்ற சாட்சிகளாயத் திகழவும் வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம். 5. அன்புத் தந்தையே இறைவா! இன்று அருட்சாதனம் என்னும் அருட்சாதனத்தால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள இப் புதுமணத்தம்பதிகள் ( பெயர்) தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒருவருக்கொருவர் முழுமையாக அர்ப்பணித்து, திருக்குடும்பத்தைப்போல அன்பிலும் பிரமாணிக்கத்திலும், மகிழ்ச்சிலும் சமாதானத்திலும் நிலைத்து வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். |