திருமண திருப்பலி முன்னுரை 3 |
அன்புக்குரிய மணமக்களே! மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் நெஞ்சங்களே! கடவுள் அமைத்து வைத்த கல்யாண மேடை இது! பூ மழை தூவி வசந்தங்கள் பாடும் திருமண விழா கோலம். இனி மணமக்கள் கனா காணும் நிலா காலம். வாழ்க்கைத் துணையோடு இணையும் இல்லற வாழ்வில் பிரகாசிக்கும். திருமண விழா மகிழ்வலைகள் நெஞ்சத்தின் நீங்கா நினைவலைகள். இராக தீபங்கள் இசைத்து கீதங்கள் வாழ்த்திடும் உள்ளங்கள். மகிழ்ந்திடும் நண்பர்கள் புடைசூழ திருமணத் திருப்பலியில் தொடங்கும் நறுமண இல்லற வாழ்விலே இருமனங்கள் இறைவனில் சங்கமம். இயேசுவும் அன்னை மரியும் பிரசன்னமாகும். கானாவூர் கல்யாண வைபோகம் இன்று. இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தார் தேவன் அன்று கனா காணும் கண்கள் மெல்ல உலா போகும் நேரம் இன்று. உல்லாச வாழ்க்கையை உறவுகள் பரிமாறிட. கடவுள் சேர்த்து வைக்கும் புதுவாழ்வை இணைக்கிறது கல்யாண மாலைகள். மாலை சூடும் இந்த மணநாள் மணமக்கள் வாழ்வின் மங்கலத் திருநாள் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் வந்து ஆனந்த கும்மிகள் கொட்டும் பொன்னாள் இளஞ்சிட்டுகள் பற்றிக் கொண்டு வாழவும் விட்டுக் கொடுத்து மகிழவும்.. இனி தொடரும் அன்றாட திருவிழா பண்டிகை நாள் அழகான மனைவி.. அன்பான கணவன்அமைவது பேரின்பம் காலங்களில் இவர்கள் வசந்தம் கலைகளில் இவர்கள் ஓவியம் மாதங்களில் இவர்கள் மார்கழிமலர்களில் இவர்கள் மல்லிகை பறவைகளில் இவர்கள் மணிப்புறா காற்றினில் இவர்கள் தென்றல் இவர்கள் நூறாண்டு காலம் வாழவும் நோய் நொடி இல்லாமல் வளரவும் ஒருவரில் ஒருவர் உயிராய் வாழவும் வளங்களைப் பெற்று நலமோடு வாழவும் இவர்கள் அமைக்கும் இல்லற பூந்தோட்டத்தில் மழலைப் பூக்கள் மலரவும், ஆன்மீக வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், ஒளிமயமான எதிர்காலம் உருவாகவும், குங்குமச் சிமிழாய் குடும்பத்து விளக்காய் மணமகள் வாழவும், மணமகன் கண் கண்ட தெய்வமாக மாறவும், வாழும் நாடும், வளரும் வீடும் மணம் பெறவும் நாம் அனைவரும் இவர்களுக்காக பக்தியோடு திருப்பலியில் ஜெபிப்போம். இறைவேண்டல் 1. திருச்சபையின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: அருட்சாதனங்கள் என்ற திருவருட் சாதனத்தை ஏற்படுத்திய இறைவா! திருச்சபையை வளர்த்தெடுக்க, குடும்பங்கள் நல்ல தலைவர்களை உருவாக்கித் தருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 2. நாடுகளின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: நாடு, மொழி, மதம், இனம் கடந்து மக்களை நேசிக்கும் இறைவா! தேசத்தை செழிக்கச் செய்யும் கலப்புத் திருமண உறவுகளை ஆதரிக்கும் சட்டங்களை இயற்றி மணமக்களால் நன்மக்கள் பெருக வழிகாட்டும் தலைவர்களை நாட்டிற்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்: 3. தலத்திருச்சபையின் தலைவர்களுக்காக மன்றாடுவோம்: திருமண நிகழ்வை நடத்தி வைக்கும் நம் பங்குத் தந்தையின் கருத்துகள் நிறைவேறவும், அவர் வழியாக நிகழும் இத்திருமண நிகழ்வில் புனிதம் கமழவும் அருள் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 4. மணமக்களுக்காக மன்றாடுவோம்: மணமகனுக்காக, மணமகளை பெயர் சொல்லி அழைத்த இறைவா! இம்மணமக்கள் அமைக்கும் இல்லற வாழ்வில் இவர்கள் காணும் கனவுகள் பலிக்கட்டும், தேடும் செல்வங்கள் கிடைக்கட்டும், மழலை ஒலிகள் முழங்கட்டும், அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும், சமாதானமும் போட்டியிட்டு நிரந்மரமாகத் தங்கட்டும் அதற்கான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம். 5. கூடியிருக்கின்ற இறைமக்களுக்காக மன்றாடுவோம்: நாங்கள் விரும்பிக் கேட்கின்ற வரங்களைத் தருகின்ற இறைவா! மணமக்களின் பெற்றோர் மற்றும் இங்கே கூடியிருக்கின்ற மக்கள் அனைவரும் குடும்ப உறவில் உறுதிப்படுத்தப்பட்டு திருக்குடும்பமாக தங்கள் குடும்பங்களை அமைத்துக் கொள்ளவும், ஒத்த கருத்துடன் குடும்ப செயல்பாடுகளை செய்து மகிழவும் அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம். |