• english
  • francais
  • tamoul1
  • tamoul2
  • tamoul3

Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

நவம்பர் மாதம் 

                                                                  

 
 
உத்தரிக்கிற ஸ்தலம்
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் -1
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் -2
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் - 3
உத்தரிக்கிற ஆன்மாக்கள் வணக்கம் மாதம் - 4
ஒப்புக்கொடுத்தல் ஜெபம்
தப்பிக்க முடியுமா?
                                        ஒரு நாள், பணக்காரன் ஒருவன் தனது வேலைக்காரனோடு தோட்டத்திற்குள் சென்றான். வேலைக்காரன் அங்கே நின்று கொண்டிருந்த மரணத்தைப் பாத்துப் பயந்து ஓடி, பணக்காரனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு மன்றாடுகிறான். பணக்காரனோ அவனிடமிருந்த மிக வேகமாக ஓடக் கூடிய குதிரை ஒன்றை வேலைக்காரனிடம் கொடுக்க, வேலைக்காரன் டெஹரான் பட்டணத்திற்கு ஓடி விடுகிறான்.  அவன் ஓடிய பிறகு பணக்காரன் சாவைப் பார்த்து, எங்கே வந்தாய் என்று கேட்கிறான். அதற்கு சாவோ, வேலைக்காரனைச் சந்தித்து அவனிடம் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்ல வேண்டும் என்றது. அதற்குப் பணக்காரன் அவனை முக்கியமான வேலைக்காக வெளியில் அனுப்பியுள்ளேன். செய்தியை என்னிடம் சொல். நான் சொல்லி விடுகிறான் என்றான். அதற்கு சாவு "ஒன்றுமில்லை! இன்று இரவு அவனது உயிரை நான் டெஹரான் பட்டணத்தில் எடுக்கப் போகிறேன்" என்று சொல்ல வந்தேன் என்றது.

ஆம் மரணம் யாரையும் விட்டு வைக்காது. மரணத்திற்குப் பயந்து யாரும் தப்பித்து ஓடி ஒளியவும் முடியாது. ஏழை, பணக்காரர், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடும் கிடையாது. மரணத்தை மிகப் பக்குவமாக நம்மால் வரவேற்க முடியும்

விடைபெறுவது, புறப்படுவது, அன்புடன் ஒருவர் கரங்களை மற்றவர் பற்றியபடி பாசத்துடன் பிரிவது ஓர் அருமையான கலை. வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் மட்டுமல்ல, வாழ்வின் நிறைவுக்கும், அதாவது மரணத்துக்கும் இது பொருந்தும்.

இரவு திடீர் என்று எழுந்து தம் சீடரை எழுப்பிச் சில தபால் அட்டைகளைக் கொண்டு வரச் சொன்னார். பிறகு இரவு கண் விழித்து அந்தக் கடிதங்களை எழுதிவிட்டு சீடரிடம் "நாளை காலை இவற்றைத் தபாலில் சேர்த்துவிடு" என்று சொல்லி விட்டு படுத்துக்கொண்டார். மறுநாள் காலை சீடரும்  சிரத்தையாகக் கடிதங்களை தபாலில் சேர்த்து விட்டு வந்துவிட்டார். கடிதத்தில் எழுதியிருந்த செய்தியையும் படிக்கவில்லை.

கடிதங்கள் எழுதி இரண்டு மூன்று நாட்கள் கடந்த இரவில் குரு மரணமடைந்தார். எல்லோருக்கும் காலை தகவல் அனுப்ப வேண்டும் என்று சீடர் நினைத்து கவலைப்பட்டார் . ஆனால், காலை முதல் குருவின் அன்பர்கள் பலரும் செய்தி அறிந்தவர்களாக வாரிசையாக வந்து கொண்டிருந்தார்கள். ஆச்சாரியப்பட்ட சீடர்  "குருவின் மரணம் உங்களுக்கு எப்படி தெரியும்"? என்று கேட்டதும் பலரும் தபால் அட்டையைக் காட்டினார்கள் . "இன்ன நாள், இந்த நேரம்" என்று குறித்து அன்று தாம் மரணம் அடைந்து விட்டதாகக் குருவே தம் கைப்பட கடிதம் எழுதி இருந்தார். மரணம் கூட அவருக்கு வெறும் தகவல் அவ்வளவே. அதையும் அவரே தேர்ந்தெடுக்கிறார். எத்தனைப் பக்குவம் பாருங்கள்.

மரணத்தைக் கூட அழகான விடைபெறும் நிகழ்வாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் நமக்கும் வேண்டும். பழைய நைந்து போன ஆடையை மாற்றிவிட்டு புதிய ஆடையை அணிவது போன்றது, "இறப்புக்குப் பிறகு செத்த உடம்பை உதறிவிட்டு புதிய உடம்பைப் பெறுகிறது நமது ஆன்மா". என பகவத் கீதை கூட சொல்கிறது.

-பிறக்கும்போது அழுகின்ற மனிதன் இறக்கும்போதும் அழுகிறான் என்றால், இறக்கும்போதும் அவன் குழந்தையாகவே இறக்கிறான் என்பது பொருள்.

-நாம் அனைவருமே சாக மாட்டோம்.......  ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம்.(1கொரி.15:51) வேற்றுரு பெற நம்மை நாம் அனுதினமும் தயாரிப்போம். அப்போது நாம் மரணத்தைக் கண்டுத் தப்பி ஓடத் தேவையில்லை. பணி நிறைவு பெறும் போது, மன நிறைவுடன் ஓய்வு பெறுவது போல, கட்டாயம் மனநிறைவுடன் மரணத்தை பெறுவோம்.

இறப்புக்குப் பின் நிலை வாழ்வு உண்டு "கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர். நல்லன செய்தோர் வாழ்வு பெற உயிர்த்தெழுவர். தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்பு பெற உயிர்த்தெழுவர்" (யோவான் 5:28,29)

இம் மாதத்தில் இறந்த ஆன்மாக்களுக்காக நாம் செய்ய வேண்டியவை என்ன?

நித்திய இளைப்பாற்றியை இறந்து போன எல்லா ஆன்மாக்களுக்கும் இறைவா தாரும் என அடிக்கடி செபிக்கலாம்.

நம் குடும்பத்தில் இறந்த அனைவருக்காகவும், யாரும் நினையாத ஆத்துமாக்களுக்காகவும் அனுதினமும் குடும்ப செபம் ஒப்புக்கொடுத்து இறைவனிடம் செபிக்கலாம்.

இந்த மாதம் முழுவதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்லறைக்கு சென்று, நம்மை அதிகமாக அன்பு செய்து நம்மை விட்டுப் பிhரிந்து இறைவனடி சேர்ந்த அனைவருக்காகவும் செபிக்கலாம்.

நம் குடும்பங்களில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்காகவும் திருப்பலி ஒப்புக் கொடுக்கலாம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கல்லறைக்கு சென்று சிறிது நேரம் தனியாக செபிப்பதில் செலவு செய்யலாம்.

இந்த நாட்களில், நான் ஏன் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்? எப்படி வாழ்கிறேன்? இந்த சமூகத்திற்கு நான் என்ன செய்திருக்கிறேன்? என்ன செய்யப் போகிறேன்? என்று நம்முடைய வாழ்க்கையை சற்று அலசிப் பார்க்கலாம்.

நம்முடைய நிலையற்ற வாழ்க்கையையும், நாம் இறக்கும் போது, எதையுமே கொண்டு செல்லப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கடவுள் முன்னும், நமக்கு அடுத்திருப்பவாரின் முன்னும், நம்மை நாம் தாழ்த்திக் கொள்ளலாம்.

நம்மை அதிகமாக அன்புச் செய்து நம்மை விட்டு பிhரிந்து இறைவனடி சேர்ந்த நல்லவர்களின் ஒரு சில நல்ல பண்புகளை, நல்ல மதிப்பீடுகளை நம் வாழ்க்கையில் பின்பற்றலாம்.

நாம் ஆண்டவருக்குhரிய ஒரு நல்ல வாழ்க்கை வாழவில்லையென்றால், மனம் வருந்தி, மன்றாடி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, அடுத்தவரை மையப்படுத்திய ஒரு புதுவாழ்க்கையைத் துவங்கலாம்.

நம்மை அதிகமாக நேசித்து இறைவனடி சேர்ந்தவர்களின் கனவை நனவாக்கலாம்.

கல்லறைகள் நம்மை பயமுறுத்தும் இடமல்ல. மாறாக நம்முடைய மூதாதையார்கள் இறைவனில் இளைப்பாறும் இடம். எனவே கல்லறைகளை துhய்மையாக்கி சீர்படுத்தி அனைவரும் செபிக்கின்ற ஒரு புனித இடமாக மாற்றலாம்.

நம்முடைய குடுபங்களில் இறந்து போனவர்களின் நினைவாக, அவர்களுடைய பெயாரில் நம்முடைய பங்குகளில் இருக்கும் ஏழைப் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாம்.

நம்முடைய குடும்பங்களில் இறந்து போனவர்களின் நினைவாக, நம்முடைய பங்கில் வீடின்றி இருக்கும் நமது சகோதரார்  ஒருவருக்கு ஒரு சிறு வீடாவது கட்டிக் கொடுக்கலாம்.

இப்படிச் செய்து நமக்கும் விண்ணகம் சென்றௌருக்கும் புண்ணியங்கள் செய்து கொள்ளலாம்.
    ✠ வேண்டாம் மரணம் ✠
நவம்பர் மாதம் என்றாலே கல்லறைத் தோட்டங்கள் எல்லாம் அழகு செய்யப்படுகின்றன. புதர் மண்டிப் போய் கிடந்த கல்லறைகள் எல்லாம் மீண்டும் புதுப் பொலிவுடன் தோற்றம் தருகின்றன. கல்லறைகளைச் சுத்தம் செய்து வெள்ளையடித்தல், கல்லறைகளை சந்தித்தல், இறந்தவர்களுக்கான திருப்பலி நிறைவேற்றல், இறந்தவர்களை நினைத்து சிறப்பு அன்னதானம் வழங்கல்... இப்படியாக பல்வேறு நிகழ்ச்சிகளால் கார்த்திகை மாதம் முக்கியமானதாக அமைந்துவிடுகின்றது.

ஏன் இந்தக் கொண்டாட்டங்கள். ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? எதற்காக நாம் இறந்தவர்களை நினைவு கூறுகின்றோம். அனைத்து ஆன்மாக்களின் நினைவு தினம் நமக்கு என்ன, எதைக் கற்றுத்தருகின்றது.
                                            

மரணம் நிகழாத நாளில்லை, மரணம் நிகழாத வீடில்லை என்றே சொல்ல வேண்டும். இயற்கையாக ஏற்படும் மரணம் முதல் தற்கொலை வரை ஏற்படும் மரணச் செய்திகள், பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் வராமல் இருந்ததில்லை. இதனால் தான் மரணம் என்பதுமே எல்லோருக்கும் இயல்பான ஒரு பயம் ஏற்படுகின்றது. மரணம் என்பது ஓர் எதார்த்தம். மரணத்தை இறப்பு என்றும், சாவு என்றும் செத்துப்போதல் என்றும் குறிப்பிடுவர். மரணமா? அது வேண்டாம் என்று எண்ணுவோரே அதிகம். காரணம்: மரணம் வாழ்வின் மிகப்பெரும் இழப்பை ஏற்படுத்துகின்றது. ஆனால் நிலைவாழ்வை அடைவதற்கான வாயில் மரணம்தான் என்பதை எல்லோரும் மறந்து விடுகின்றனர். நிலையான வாழ்வைப் பெறுவிக்கும் மரணத்தை நாம் சந்தோசமாக ஏற்றுக் கொள்ளவேண்டும். எனவே மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் இறப்பைச் சந்தித்தே ஆகவேண்டும். மரணம் எனக்கு வேண்டாம் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. மாறாக அனைத்து உயிர்களும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு மனிதரும் சந்தித்தே ஆகவேண்டியது வாழ்வின் எதார்த்தம்.

ஆகவே நவம்பர் மாதம் 2ஆம் திகதி அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக, அதாவது இறந்தோர் தினமாக திருச்சபை சிறப்பித்து வருகின்றது. பாமர மக்கள் இதைக் கல்லறைத் திருநாள் என்று அழைக்கின்றனர். எவ்வாறு இவ்விழா வழக்கத்திற்கு வந்தது என்பதை சற்று பார்ப்போம்.

தொடக்க திருச்சபையின் வாழ்வு மிகவும் போராட்டம் நிறைந்த வாழ்வாக அமைந்திருந்தது. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமையில் அவ்வப்போது ஏற்பட்ட வேதக்கலாபனையில் பலரும் இயேசுவுக்கு சாட்சியாக இறந்தனர். மிகக்குறிப்பாக திருச்சபையின் இரு தூண்கள் எனப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுலின் கல்லறைகள் மக்களிடையே விரும்பிச் சந்திக்கப்பட்ட இடங்களாக மாறின. காலஞ்செல்லச் செல்ல மறைச் சாட்சிகளாக இறந்த இவர்களின் கல்லறைகளில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு திருச்சபை உரோமையில் வேரூண்ட ஆரம்பித்த பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சாட்சிய வாழ்வை நினைவு கூர்ந்து மக்கள் விழாக் கொண்டாடி அவர்களின் கல்லறைகளைச் சந்தித்து வந்தனர்.

வேதக்கலாபனைகளில் மறைசாட்சிகளாக இறந்தவர்களை ஒட்டுமொத்தமாக அடக்கம் செய்யும் பழக்கமும் இருந்தது. திருத்தூதர்களின் கல்லறைகள் போன்றே அவர்களின் கல்லறைத் தோட்டங்கள் காலப் போக்கில் மக்கள் விரும்பிச் சந்திக்கும் இடங்களாகவும் மாறின. இதற்கு சிறந்த உதாரணம் திருத்தொண்டராக இருந்து மறைசாட்சியாக மரித்த புனித லோரன்ஸ் என்பவரின் இடத்தில் இன்றும் அவரின் பெயரில் ஆலயம் உள்ளது. அதை ஒட்டிய மிகப் பெரிய கல்லறைத் தோட்டம் இன்றளவும் உள்ளது. மக்கள் ஒவ்வொரு ஆண்டும், சிறப்பான வகையில் இங்கு திருப்பலி நிறைவேற்றி மறைசாட்சிகளாக இறந்தவர்களை நினைவு கூறுகின்றனர். இருப்பினும் இக்கல்லறை விழா உலகத் திருச்சபை அளவில் கொண்டாடப்படும் விழாவாக இருக்கவில்லை.

கி. பி 998இல் புனித ஓதிலோ என்பவர் தன்னுடைய குளுனி சபையினருக்கு இதனை அறிமுகப்படுத்தினார். இவர் குளுனி சபையின் முதல் மடாதிபதியாக இருந்தார். தன்னுடைய துறவற மடத்தில் வாழ்வோர் இறந்தவர்களுக்காக சிறப்பான செபங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்விழாவை அறிமுகப்படுத்தினார்.

11ஆம் நூற்றாண்டில் இறந்தவர்களுக்காக மன்றாடும் குளுனி சபையினரின் வழக்கம் ஐரோப்பிய நாடுகளிம், இலத்தீன் அமெரிக்கா நாடுகளும், மிக விரைவாகப் பரவியது. இறந்த ஆன்மாக்களுக்காக மன்றாடும் இவ்விழாவைத் தாய் திருச்சபை கி.பி 13ஆம் நூற்றாண்டில் அனைத்துலகின் விழாவாக கொண்டாட அனுமதி வழங்கியது.
                                              
✠ இறந்தவர்களுக்காக மன்றாடுதல் ✠
இறந்தவர்களுக்காக மன்றாடும் வழக்கம் விவிலிய வழக்கமாகும். இது மக்கபேயர் காலத்திலிருந்து வருகின்றது.(2மக் 12:43-45) யுதா, மக்கபே இறந்தவர்களுக்காகப் பாவப்பரிகாரப் பலி ஒப்புக் கொடுக்க எருசலேமிற்கு ஆள்களை அனுப்பினார். இந்த மரபு புனித பவுலின் காலத்தில் இயேசு வழியாக இறந்தவர்கள் மீட்பைப் பெறுவதற்காக வாழ்ந்து கொண்டிருந்தோர், அவர்கள் பெயரில் திருமுழுக்குப் பெற்றுக் கொண்டனர் (1கொரி 15:29). இதன் பின்னணியில்தான் காலப்போக்கில் இறந்தவர்களுக்காகச் செபிக்கும் பழக்கமும், கல்லறைத் தோட்டச் சந்திப்புக்களும், திருப்பலி ஒப்புக் கொடுக்கும் பழக்கமும் தாய் திருச்சபையின் மரபில் வளர்ந்தது.

பழைய ஏற்பாட்டு பலிகளைவிட இயேசுவின் ஒப்புயர்வற்ற கல்வாரிப்பலி அனைத்து பாவங்களையும் போக்குகின்றது. எனவேதான் நவம்பர் மாதம் இறந்தவர்களுக்காக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்படுகின்றன. ஆகவே நவம்பர் மாதம் ஏன் நாம் இறந்த ஆன்மாக்களின் தினமாக கொண்டாடுகின்றோம் என்பது எமக்கு தெளிவாகின்றது. எனவே இறந்தவர்களை நினைத்து நாமும் திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்போம்.

"வாழ்வோர் அனைவரின் தாயே!  வான் உலகை அடையும் வழியே"