கீழ்காணும் ஜெபத்தை புனித
ஜெர்துருத்தம்மாள் ஜெபிக்கையில் அநேக ஆத்துமங்கள் உத்தரிக்கிற
ஸ்தலத்தில் இருந்து விடுவிக்கப்பட்டதைக் கண்டார். ஆண்டவர் தந்த
உறுதி என்னவெனில் ஒரு முறை ஜெபிக்கையில் குறைந்தது ஆயிரம் உத்தரிக்கிற
ஆத்துமங்கள் இரட்சிக்கப்படுவர் என்பதாம்.
நித்திய பிதாவே! எங்கள் ஆண்டவராகிய
ஏசுக்கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற திரு இரத்தத்தை இன்று உலகம்
முழுதும் நிறைவேற்றப்பட்டதும், இனி நிறைவேற்றப்பட இருக்கின்றவையு
மான சகல திருப்பலி பூசைகளோடு சேர்த்து உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்களுக்காகவும்
உலகின், திருச்சபையின், எனது குடும்பத்தினரின் ஆத்துமங்களுக்காகவும்
ஒப்புக் கொடுக்கிறேன். ஆமென் .
|
உத்தரிக்கிற
ஸ்தலத்துக்குப் போகாமல் மோட்சம் செல்ல உதவக்கூடிய பரிகார ஒப்புக்கொடுத்தல்
ஜெபம்
நித்திய பிதாவே! இன்றைய தினத்திலும் என் ஜீவிய காலம் முழுவதும்
நான் கட்டிக்கொண்ட சகல பாவங்களுக்குப் பரிகாரமாக, சேசு மரிய இருதயங்களை
அவர்களின் நேசத்தோடும், சகல பாடுகளோடும், சகல பேறு பலன்களோடும்
உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் .
நித்திய பிதாவே! இன்று தினத்திலும் என் ஜீவிய காலம் முழுவதும்
நான் குற்றங்குறைகளோடு செய்த நன்மையைச் சுத்திகரிப்பதற்காக
சேசு மரிய இருதயங்களை அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும்
சகல பேறு பலன்களோடும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன்
நித்திய பிதாவே! இன்று தினத்திலும், என் ஜீவிய காலம் முழுவதிலும்
நான் செய்யத்தவறிய நன்மைகளுக்கு ஈடாக, சேசு மரிய இருதயங்களை
அவர்களின் நேசத்தோடும் சகல பாடுகளோடும் சகல பேறு பலன்களோடும்
உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென் |
உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக மாதாவிடம் காணிக்கை ஜெபம்
மிகவும் பரிசுத்த
கன்னி மரியாளே! உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமங்கள்
பேரில் இரக்கம் மிகுந்த தேற்றரவு மாதாவே! அடியேன் இதோ
உமது பாதத்திலே சாஷ்டாங்கமாய் விழுந்து பிரார்த்தித்து
ஒப்புக் கொடுக்கும் காணிக்கை என்னவென்றால், என் அனுதினக்
கிரியையினாலே நான் அடையக் கூடிய பேறு பலன்களையும், என்
மரணத்திற்குப் பின் எனக்காக ஒப்புக்கொடுக்கும் ஜெபதவ
பலன்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன் . மரித்த
விசுவாசிகளின் ஆத்துமங்களின் நன்மைக்காக தேவரீர் சித்தம்
போல் அவைகளைப் பிரயோகிக்கக் கிருபை புரிந்தருளும். தற்காலத்திலும்
பிற்கால நித்தியத்திலும் எனக்கு வரக்கூடிய நன்மை பலன்களை
எல்லாம் சுயநல நாட்டமின்றி தாயின் நேசமுள்ள உமது பராமரிப்பிலேயே
முழுதும் ஒப்படைத்து விடுகிறேன். உமது திருக்குமாரனாகிய
ஆண்டவர் தமது கிருபை இரக்கத்துக்கு அல்லது நீதிக்கேற்றபடி
உமது திருக்கரங்களின் வழியாய் அடியேனுக்கு நியமித்து
அனுப்பும் நன்மை தின்மைகளை எல்லாம் மனப் பூரணமான அமைதலோடு
இப்போதே கையேற்றுக் கொள்கிறேன். ஆமென் |
|
|