Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

செபமாலை

 

செபமாலை நமக்கு தரும் 53 கருத்துக்கள்:                 
1. கையில் இருந்தாலே பலம் கூடிடும்.

2. கழுத்தில் சுமந்தாலே பெருந்துணை சேர்ந்திடும்.

3. எப்பொழுதும் தீயவற்றை விலக்க துணையாகும்.

4. நான் கிறிஸ்தவன் என சொல்லாமல் சொல்லும்.

5.நல்ல கிறிஸ்தவனா(ளா) க மாற துணை செய்யும்.

6. பாதுகாப்பு தரும் நல்ல கேடயமாகும்.

7. வீண் பேச்சுகளை சற்று நேரம் குறைக்கும்.

8. உலக சிந்தனைகளில் இருந்து மனதை ஒருநிலைப் படுத்தும்.

9. மற்ற தொலைத்தொடர்புகளோடு உழலும் நமக்கு ஓய்வை தரும்.

10. அலை பாயும் மனதுக்கு ஆறுதல் தரும்.

11. உணர்ந்து தியானிப்போருக்கு பலன் தரும் விருட்சமாகும்.

12. உணராமல் சொல்வோரையும் ஒரு கட்டத்தில் சிந்திக்க வைத்து விடும்.

13. குடும்ப அங்கத்தினர் அனைவரையும் ஒருங்கிணைக்கும்.

14. குடும்ப நிகழ்வுகளில் முதன்மையாய் அமர்ந்திடும்.

15. குடும்ப உறவுகளை கட்டிக் காத்திடும்.

16.செபிக்கவிருப்பமில்லா உறவுகளுக்காக செபிக்கத் தூண்டும்.

17. குடும்பத்துக்காக மட்டுமல்லாது அயலாருக்காகவும் செபிக்க சொல்லும்.

18.குடும்பம் முழுமைக்கும் புண்ணியம் சேர்த்திடும்.

19. குடும்பத்தில் பிரச்னைகளை களைய வழி காட்டிடும்.

20. குடும்பத்தை வழி நடத்தும் ஒளி விளக்காகிடும்.

21. மனங்களை மாசின்றி காக்க துணைசெய்யும்.

22. மன பாரங்களுக்கு மருந்தாகிடும்.

23. மனவேற்றுமைகளை மறக்க செய்திடும்.

24. மனதால் செய்யத் தூண்டும் எச்செயலையும் சீர்தூக்க வைத்திடும்.

25. மனதை விட்டு நீங்கா தீய நினைவுகளை அழித்திடும்.

26.மனதை சற்று நேரம் லேசாக்கிடும்.

27.மன சஞ்சலத்தோடு துவக்கினால் நிச்சயமாக மனதை இலகுவாக்கிவிடும்.

28.எந்த நேரத்திலும் தெம்புத் தந்திடும்.

29.நடுநிசியோ, சாத்தானின் சோதனையோ பயம் போக்கிடும்.

30.அச்சம் தரும் எதையும் எதிர்க்கும்.

31.நடை பயணமோ,வாகன பயணமோ,ஒரு நல்ல துணையாகிடும்.

32.நம்பிக்கை இழந்த நிலையிலும் நம்பிக்கை தரும்.

33. ஒவ்வொரு முறை தியானிக்கும் பொழுதும் அன்னை மரியின் உடனிருப்பை உணரலாம்.

34.ஒவ்வொரு சிந்தனையும் தாயின் பங்களிப்பை பறைசாற்றும்.

35. ஒவ்வொரு நாளும் செபிக்கையில் அந்நாளே சிறப்படையும்.

36. ஒவ்வொரு மணியாக செபிக்கையில் மனம் அன்னை மரியோடு பயணிக்கும்.

37. இந்த மாலை ஜெயமாலை என்பதை உள்ளம் உரைத்துக் கொண்டேயிருக்கும்.

38. செபிக்க அமர்கையில் சாத்தான் வலையெல்லாம் அழிந்து போகும்.

39.செபமாலை செபிக்கையில் நம் இல்லத்திலும், நம் உள்ளத்திலும் அன்னை மரியாள் கொலு வீற்றிருக்கிறார்.

40. செபமாலையை பக்தியோடு உள்ளமும் உடலும் ஒரு முகமாய் கண்களை மூடி செபித்தல் நிறைய பலனளிக்கும்.

41. இத்தகைய செபமாலை செபிக்க நாம் நேரம் ஒதுக்குகிறோமா ?

42. இந்த செபமாலையை நேரம் கருதி அவசரமாக சொல்கிறோமா ?

43. இந்த அற்புத செயமாலையை முழு மனதோடு அர்த்தத்தோடு சொல்கிறோமா ?

44. அன்னைக்கு மணிமுடி சூட்ட நம்மிடம் நேரமிருக்கிறதா ?

45. செபமாலையோடு இயேசுவின் பிறப்பு, வாழ்வு, பாடுகள், உயிர்ப்பு இவற்றில் நாம் பயணித்த அனுபவம் என்ன ?

46. வாரத்துக்கு ஒருமுறையேனும் குடும்பம் முழுவதும் ஒன்றாய் அமர்ந்து செபமாலை ஒப்புக்கொடுக்க முயற்சிப்போம்.

47.அருகிலிருக்கும் கத்தோலிக்கக் குடும்பங்களை செபமாலை சொல்ல ஊக்குவிப்போம்.

48. சமாதானம் குன்றிய குடும்பத்தில் செபமாலையின் வல்லமையை தவறாமல் பகர்வோம்.

49. பிறமத நண்பர்களிடம் கூட அன்னையின் செபமாலை மகத்துவத்தை கதை போல சொல்வோம்.

50.இத்தகைய செபமாலை என் வெற்றிச் சின்னம் என பறை சாற்றுவோம்.

51. வாழும் செபமாலையாக மாற/ மாற்ற வழி காண்போம்.

52. செபமாலையின் தப்பறையான வினாக்களுக்கு சரியான பதிலளிக்க அன்னையிடம் வேண்டுவோம்.

53. செபமாலைக் குறித்து சங்கடப்படுவோருக்காகவும் செபிப்போம்.
                                         மரியே வாழ்க !
 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா