|
|
திருத்தந்தை
பிரான்சிஸ்
அவர்களின் சிறப்பு பரிபூரண பலன் |
|
நமது திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் மிக அழகான அர்த்தமுள்ள செய்தி.
ஆறுகள் தங்கள் நீரைக் குடிப்பதில்லை...மரங்கள் தங்களது கனிகளை உண்பதில்லை...சூரியன் தனக்காக ஒளி வீசுவதில்லை...
மலர்கள் தங்களுக்காக மணம்
பரப்புவதில்லை................ |
|
வத்திக்கான்
பற்றிய ஒரு பார்வை |
வத்திக்கான் நகர் (VaticanCity)
இத்தாலி நாட்டின் உரோமை நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய
சுதந்திர நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர்,
(108.7 ஏக்கர்) ஆதலால் இதுவே உலகின் மிகச் சிறிய நாடு
ஆகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார்.
வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறை
விடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக
அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க
கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம்
திகழ்கிறது. இதன் மொத்த மக்கள் தொகை சுமார் 804 ஆகும்.
இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில்
உலகின் மிகச்சிறிய நாடாகும்.
வத்திக்கான்" என்ற பெயர் வத்திக்கான்
மலை எனப் பொருட்படும் லத்தீன் வார்த்தையான வட்டிகனசில்
இருந்து பெறப்பட்டது. இதன் ஆட்சிப்பகுதியானது புனித
பேதுரு பேராலயம், திருத்தூதரக அரண்மனை, சிசுடைன்
சிற்றாலயம் மற்றும் பல அருங்காட்சியகக் கட்டிடங்களை உள்ளடக்கியதாக
உள்ளது.
இப்பகுதியானது 1929 வரை இத்தாலிய பேரரசின் ஒரு பகுதியாக
இருந்தது. 1929ல் இலாத்தரன் ஒப்பந்தத்தின் போது,
முன்மொழியப்பட்ட பகுதிகளின் எல்லைகள் ஏற்கனவே இருந்த
சுற்று சுவர் மூலம் வரையறுக்கப்பட்டது.
மேலும் இந்நகரத்தின் எல்லைகள் இத்தாலியில் இருந்து ஒரு
வெள்ளை கொடு மூலம் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இலாத்தரன்
உடன்படிக்கை படி இந்நகரின் பகுதிகள் மட்டுமல்லாது இத்தாலிய
ஆட்சிப்பகுதிக்குள் அமைந்துள்ள ஆலயங்களும் வத்திக்கான்
நகர ஆட்சிப்பகுதியாக அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ரோம் நகரிலிருந்து வாடிகனுக்குச் செல்வதற்கு ஒரு மிக
பிரம்மாண்டமான சுரங்கப் பாதை மற்றும் நுழைவாயில் வழியாகத்தான்
நாங்கள் செல்ல நேர்ந்தது. ஆம், ஏதாவதொரு கேட் வழியாகத்
தான் வாடிகனுக்குள் நுழைய முடியும். இவ்வளவு முக்கியமான
நுழைவாயில்களை கண்கவரும் உடைகளோடு காவல் காப்பவர் களுக்கு
ஒரு பொதுவான அம்சம் உண்டு.
அவர்கள் அத்தனை பேரும் பூர்வாசிரமத்தில் சுவிட்சர்
லாந்து வாசிகள். அதாவது அந்த நாட்டிலிருந்து வந்து இங்கேயே
நிரந்தரமாகத் தங்கிவிட்ட காவலாளிகளின் பரம்பரைக்குதான்
இங்கு காவல் காக்கும் தகுதி.
மற்றபடி வாடிகனுக்கு என்று ராணுவம் கிடையாது.
கத்தோலிக்கர்களின் காணிக்கையால் கஜானா நிரம்பி வழிகிறது.
தவிர எந்தவிதமான வணிகத்தையும் வாடிகன் வைத்துக் கொள்வதில்லை.
தமிழ்நாட்டில் ஏதாவது பிரபல அரசியல் தலைவருக்கு கூடும்
கூட்டத்தையே "பல்லாயிரக் கணக்கில்" என்போம். ஆனால்
வாடிகனின் மக்கள் தொகை சுமார் ஆயிரம்பேர்தான். (மற்றவர்கள்
எல்லாம் வந்து தொழுதோ, வேடிக்கை பார்த்தோ செல்பவர்கள்).
மக்கள் தொகை சுமார் ஆயிரம் என்ற புள்ளிவிவரத்தோடு
வேறொரு புள்ளி விவரத்தையும் இணைத்துப் பார்த்தால் கொஞ்சம்
முரணாக இருக்கும். போப்பின் அலுவலகம் என்பது
ஒன்றோடொன்றாக இணைக்கப்பட்ட பல கட்டிடங்களைக் கொண்டது.
அங்குள்ள மொத்த அறைகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம்.
ஐ.நா.சபையில் வாடிகன் ஓர் உறுப்பினர் இல்லை. என்றாலும்
அதற்கு அங்கு நிரந்தரப் பார்வையாளர் அந்தஸ்து உண்டு.
கொஞ்சம் வாடிகன் சரித்திரத்தில் புகுவோமா?
வாடிகனில் பல நூற்றாண்டுகளாகவே கிறிஸ்தவம் காலூன்றி உள்ளது.
தூய பீட்டர் - இவருக்கு கத்தோலிக்க மதத்தில் தனி அந்தஸ்து
உண்டு. ரோம் நாட்டின் முதல் போப் ஆண்டவர் அவரே.
மன்னன் நீரோவைத் தெரியும் இல்லையா என்று கேட்டால் "ஓ,
ரோம் பற்றியெரிந்த போது பிடில் வாசித்தவன்தானே?" என்பீர்கள்.
அவனேதான். கி.பி. 54 முதல் 68 வரை ரோம ராஜ்ஜியத்தின்
சக்ரவர்த்தியாக விளங்கியவன். ஒருபுறம் பிற நாடுகளுடன்
நல்லெண்ண நடவடிக்கைகள், வணிகம், பண்பாடு என்றெல்லாம்
நல்ல பெயர் வாங்கினான்.
கி.பி. 64-ம் ஆண்டு ரோம் நகரம் ஒரு மாபெரும் தீவிபத்தை
சந்தித்தது. இதை Great Fire of
Rome என்றே சரித்திரத்தில்
குறிப்பிடுகிறார்கள். தனக்கு ஒரு பிரம்மாண்ட அரண்மனையை
எழுப்பிக் கொள்ள வேண்டுமென்பதற்காக நீரோவேதான் இப்படி
நகருக்குத் தீ வைத்தான் என்றும் கூறப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் என்றால் அவனுக்கு ஆகாது. கிறிஸ்தவர்களை
எண்ணெயில் பொரித்து அவர்களின் உடலை எரித்து அந்த
வெளிச்சத்தில் படிப்பது அவனது வழக்கம் என்றுகூட ஒரு
நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (அதெல்லாம் அதிகப்படி
என்று கூறும் சரித்திர ஆராய்ச்சியாளர்களும் இருக்கிறார்கள்)
தூய பீட்டர், மன்னன் நீரோவினால் கொல்லப்பட்டான். பீட்டரைக்
குறிவைத்து அவன் கொல்லவில்லை. வாடிகன் குன்றிலிருந்த
விளையாட்டு ஸ்டேடியம் ஒன்றில் கிறிஸ்தவர் களை கொத்துக்
கொத்தாக மேலுலகுக்கு அனுப்பினான் அந்த மன்னன். அவர்களில்
தூய பீட்டரும் ஒருவர். அவர் உடலை சிலுவையில் தலைகீழாகத்
தொங்க விட்டானாம் அந்த மன்னன். தூய பீட்டர் இறந்த இடத்தில்
அவருக்கு ஒரு கல்லறையை எழுப்பினார்கள் அவரது சீடர்கள்.
ரோம் நாட்டு அரசியலும் கிறிஸ்தவ மதமும் இத்தாலியின்
சில பகுதிகளின் அதிகாரத்துக்கு மாறி மாறிப் போட்டியிட்டன.
(அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் வெகுவாகவே கலந்திருந்தன
என்பது வேறு விஷயம்). வெற்றியும், தோல்வியும் இருதரப்புக்கும்
மாறி மாறிக் கிடைத்தன.
இப்போது இத்தாலி இருக்கும் பகுதியின் மத்தியிலுள்ள
பெரும் பகுதி கி.பி. 755 முதலாகவே வழிவழியாக வந்த போப்களின்
ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இவற்றை
papal states
என்று அழைத்தார்கள்.
1860-ல் போப் ஒன்பதாம் பியஸ் இந்தப் பகுதியை ஆட்சி
செய்து கொண்டிருந்தபோதுதான் முக்கிய திருப்புமுனை உண்டானது.
போப்பின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பெரும்பாலானவற்றை
மன்னன் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் தனது ராஜ்ஜியத்துடன்
இணைத்துக் கொண்டார். அடுத்த பத்து ஆண்டுகளில் அது இத்தாலியின்
பகுதி ஆனது.
வாடிகன் நகரம்தான். தி ஹோலி ஸி என அழைக்கப்படும்
நாட்டில் பெண்களே இல்லை.
கத்தோலிக்கத்தின் தலைமையிடம் அல்லது போப்பாண்டவர்களின்
இருப்பிடமாக உள்ளதால் இங்கே பெண்களே கிடையாது. குடும்பம்
நடத்துவதற்கு இதுவரை அங்கீகாரம் வழங்கப்படாத நாடும்
கூட.
போப் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்ட இந்நாடு, ஓவியக்கலையின்
தாயகமாக இந்நாடு செயல்பட்டு வருகிறது. |
|
|
. |
|