நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்
மிக அழகான அர்த்தமுள்ள செய்தி. ஆறுகள் தங்கள் நீரைக் குடிப்பதில்லை... மரங்கள் தங்களது கனிகளை உண்பதில்லை... சூரியன் தனக்காக ஒளி வீசுவதில்லை... மலர்கள் தங்களுக்காக மணம் பரப்புவதில்லை... பிறருக்காக வாழ்வதுதான் இயற்கையின் நியதி. நாம் அனைவரும் ஒருவர் மற்றவருக்கு உதவுவதற்காகவே பிறந்திருக்கின்றோம். இது கடினமான ஒன்றா ?? இது எப்படி கடினமாகும் ??? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்களால் பிறர் மகிழ்ச்சியடையும் போதுதான்உங்கள் வாழ்வு சிறப்பானதாக அமையும். நாம் ஒன்றை நினைவிற் கொள்வோம், ஒவ்வாரு தாவர இலைக்கும் மாறுபடும் அதன் நிற வேறுபாடுதான் அழகு. மனித வாழ்வில் மாறுபடும் ஒவ்வொரு சூழலும்தான்நம் வாழ்க்கைக்கு அழகு. இரண்டிற்கும் மிகத் தெளிவான தொலைநோக்கு அவசியம். எனவே..... முறுமுறுக்க வேண்டாம் ! குற்றம்சாட்ட வேண்டாம் !! வலிகள்தான் நாம் உயிரோடிருக்கிறோம் என்பதன் அடையாளம்., பிரச்சனைகள்தான் நாம் வலிமையானவர்கள்என்பதன் அடையாளம்., செபம்தான் நாம் தனிமையில் இல்லை என்பதன் அடையாளம்., மேற்கூறியவற்றை மனதில் இருத்துவோம்..... இந்த உண்மைகளை, ஒழுங்குகளை ஏற்க முடிந்தால்தான் நமது மனம் நமது உள்ளம் மற்றும் நமது வாழ்வு: மிகவும் அர்த்தமுள்ளதாக.... மிகவும் மாறுபட்டதாக.... மிகவும் மேன்மையானதாக..... இருக்கும். நெருக்கடியான இக்காலகட்டத்தில் இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைய இறைபணிந்து வாழ்த்துகிறேன்... |