Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

அன்னையின் வணக்கமாதம்

                                                                

ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்.
அன்னையோடு பயணிக்கும் தூய ஆவியாரின் கனிகள்
செபமாலை நம்மோடு 
53  எண்ணங்கள்
செபமாலை செபிக்கும்போது
செபமாலை அன்னை வரலாறு
 
                                        ஜெபமாலை மாதம் இது

"அழிந்து கொண்டிருக்கும் இவ்வுலகைக் காப்பாற்ற அனுதினமும் செபமாலை ஓதுங்கள்" என்று அன்னை மரியா பாத்திமாவில் 1917 மே 13 முதல் அக்டோபர் 13 வரையான காலப்பகுதியில் லூசியா - ஜசிந்தா -மற்றும் பிரான்சிஸ் எனப்படும் மூன்று சிறு பிள்ளைகளுக்கு ஏழு தடவைகள் தரிசனமான போது எமக்கு பகிரங்க விண்ணப்பம் செய்துள்ளார்

அன்னை மரியாளின் மகிமையைப் பரப்பும் வணக்க மாதமான  அக்டோபர்   மாதத்தில் விண்ணக மண்ணக தாயின் மகிமையைப் போற்றுவோம். தரணியில் இறையருள் மலரட்டும் என்ற விசுவாச நோக்கத்தோடு நாமனைவரும் தனியாகவோ - அல்லது குடும்பமாகவோ - அல்லது குழுக்களாகவோ அனுதினமும் செமாலை செபிப்பதற்கு முன்வருவோம்.

சிறுவன் "பிரான்சிஸ் பரலோக வீடு சேரவேண்டுமாயின் அவன் அதிகமாக செபமாலை செபிக்க வேண்டும்" என்பது அன்னை யின் அறிவுரையாக பாத்திமாவில் கொடுக்கப்பட்டது - சிறப்பு மிக்க அக்டோபர் மாதத்தில் செபமாலை அன்னையின் விழாவை திருத்தந்தை ஐந்தாம் பக்திநாதர் 1571 ஆம் ஆண்டில் ஒரு வெற்றி விழாவாக உருவாக்கினார்.

"செபமாலைப் பக்தி உலகிற்கு பல நன்மைகளை செய்துள்ளது. பாவத்திலிருந்து விடுதலையையும் - உடல் நலத்தையும் - பரிசுத்த வாழ்வையும் அளித்திடும் ஒரு சிறந்த சாதனம். செபமாலையைப் பக்தியோடு மறையுண்மைகளை தியானித்துக்கொண்டே செபித்தல் வேண்டும்" என்று புனித அல்போன்ஸ் லிகோறியார் (1696 -1787) கூறிச்சென்றுள்ளார்.

ஆண்டவர் இயேசுவின் மகிழ்ச்சி - ஒளி - துக்கம் - மகிமை பேருண்மைகளை செபமாலையில் தியானிப்பதன் வழியாக கிறிஸ்து நம் வாழ்வின் மையமாக மாறுகின்றார் - "செபமாலை செபிக்கும் ஓர் வீரர் படையை எனக்குக் கொடுங்கள், நான் உலகை வென்று காட்டுகிறேன்" என்கிறார் திருந்தந்தை 9ம் பத்திநாதர்.

"செபமாலையின் மலர்கள் என்றும் அழுகிப்போகாது" என்கிறார் திருத்தந்தை 12ம் பத்திநாதர் - திருத்தந்தை இரண்டாவது அருள் சின்னப்பர் "கன்னி மரியாவுக்கு மிகவும் பிரியமான செபம் செபமாலை" என்கின்றார் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் "மாலை நேரத்தில் செபமாலை செபிக்கும் குடும்பம் எவ்வளவு அழகானது" என்கிறார்.

"செபமாலை எனப்படும் செபம் எனது வாழ்வில் எவ்வேளையிலும் என்னோடு இணைந்துள்ளது...... செபமாலை சாதாரன மக்களது செபம் மட்டுமல்ல புனிதர்களது செபமாகவுமுள்ளது...... எனது இதயத்திலிருந்து எழுகின்ற செபமாகவும் செபமாலை இருக்கின்றது..... செபமாலை செபிப்பதற்கே மாறாக அணிவதற்கல்ல" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவிக்கின்றார்.

செபமாலை செபிக்கும்போது ஆண்டவர் இயேசுவின் மீட்பு வரலாற்றின் முக்கியமான பொருள் பொதிந்த தருணங்கள் மீண்டும் வாழ்ந்து காட்டப்படுகின்றன - கிறிஸ்துவின் வாழ்வு மற்றும் இறைபணியின் பல்வேறு நிலைகள் கண்டுபிடிக்கப்படுகின்றனவென இறையியல் வல்லுனர்கள் கருதுகின்றார்கள். .

அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது என்று மரியன்னையின் கோடிக்கணக்கான பக்தர்கள் கருதுகின்றார்கள். சாத்தானை எதிர்த்து நிற்க அன்னை மரியாவின் வல்லமையான ஆயுதமாக செபமாலை கருதப்படுகின்றது.

அடிப்படை பிரிவினைவாதக் குழுவினர் - கத்தோலிக்கரான எம்மை அன்னை மரியாவைக் கடவுளின் நிலைக்கு மேலுயர்த்தி வழிபடுகிறார்களென தப்பறையாகக் குறைகூறி விண்வெளி ஆய்வுகள் - விஞ்ஞான ஆராய்ச்சிகள் மனிதரது மட்டுப்படுத்தப்பட்ட திறமைகளை வெளிப்படுத்தினாலும் - "கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" (லூக்கா 1:37). என நம்புவோம்.

அனுதினமும் செபமாலை செபிக்கும்போது அன்னை மரியாளோடு நம் இதயம் இயேசுவின் மறையுண்மைகளை நோக்கிப் பயிற்சி பெறுகின்றது என்று மரியன்னையின் கோடிக்கணக்கான பக்தர்கள் கருதுவதால் ''எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு'' (பிலி 4:13). என நாம் துணிவோடு கூற முடியும்.

சாத்தானை எதிர்த்திட செபமாலை ஒரு சிறந்த போர்க் கருவியாகக் கருதப்படுகிறது. செபமாலையைக் கழுத்தில் தொங்கவிடுவது பக்தியல்ல. மாறாகத் தினமும் செபமாலை செபித்து இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, அது பக்தியை அதிகரிக்க செய்வது மட்டுமல்ல. அருளை அள்ளித்தரும் சாதனமாகவும் அமைகிறது.

செபமாலை என்றதும் சாத்தான் நடுங்குகிறான். நம்மை செபிக்க விடாமல் பலவகை சோதனைகளை நமக்குத் தருகிறான். செபமாலையில் வல்லமை அதிகமுண்டு. எமது அன்பின் விண்ணக மண்ணத் தாய்க்கு செபமாலையை பூமாலையாகச் சூட்டும் போது தாயைவிட அவரது மகன் இயேசு இன்னும் அதிகமாக இன்புற்று இறையருளை எமக்கு அள்ளித் தருகிறார்.

செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம், எமது அன்பின் விண்ணக மண்ணத் தாயின் மகிமையைப் போற்றுவோம் தரணியில். இறையருள் மலரட்டும் "மாதாவே சரணம்" என்று அக்டோபர் மாதத்தில் செபமாலை அன்னையை இல்லந்தோறும் போற்றிடும் செயல்களில் நாமும் இணைந்து மீட்பின் பாதையில் நடந்து செல்வோம்.

அருள்நிறை மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே!!
பெண்களுள் சிறந்தவள் நீயே!!! மாமரியே நீ வாழ்க!!!!