ஒப்புரவு
அருட்சாதனம் |
திருச்சபை மற்றும் குருக்களின் முக்கியமான
பணி, திருப்பலி நிறைவேற்றுவதும் , திருவருட்சாதனங்களை
நிறைவேற்றுவதுமேயாகும்.
ஏழு திருவருட்சாதனங்களில் ஓப்புரவு திருவருட்சாதனம் மிக முக்கியமானதாகும்.
ஆனால் இன்றைய நவீன கிறிஸ்தவர்கள்,குருக்களிடம் எதற்கு பாவங்களை
அறிக்கையிட வேண்டும்?
நாமே நேரடியாக கடவுளிடம் சொன்னால் போதாதா?என கேள்வி எழுப்புகின்றனர்.
பரிசுத்த ஆவியாரின் துணையோடு பைபிளை படித்து சிந்திக்கும்
போது,குருக்களிடம் நம் பாவங்களை அறிக்கையிட்டால் மட்டுமே கடவுளிடமிருந்து
மன்னிப்பை நாம் பெறமுடியும் என்ற சத்தியத்தை அறிந்து கொள்ளலாம்..
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது , திருச்சபை ஒன்றை
வேண்டும், என சொல்லும் போது அதை ஏற்று, திருச்சபைக்கு கீழ் படிய
வேண்டியது நமது கடமை. அதற்குரிய அதிகாரத்தை இயேசு ஆண்டவரிடமிருந்து
திருச்சபை பெற்றுகொண்டுள்ளது.
"19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில்
நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ
அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.
மத்தேயு நற்செய்தி 16:19"
அடுத்ததாக, ஆண்டவரே பாவ மன்னிப்பிற்கான அதிகாரத்தை சீடர்களுக்கு
கொடுக்கிறார்
"21 இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக!
தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார்.
யோவான் நற்செய்தி 20:21
22 இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப்
பெற்றுக் கொள்ளுங்கள்.
யோவான் நற்செய்தி 20:22
23 எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும்.
எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா" என்றார்.
யோவான் நற்செய்தி 20:23"
மேலும்
"18 இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத்
தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத்
தந்துள்ளார்.
2 கொரிந்தியர் 5:18
19 உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள்
கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த
ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார்.
2 கொரிந்தியர் 5:19
20 எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே
எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள்
என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம்.
2 கொரிந்தியர் 5:20"
ஆனால் இதற்கும் முன்பே குருக்கள் பாவ மன்னிப்பு கொடுத்து வந்ததை
நாம் இந்த ஆதாரங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம்
* 26 அதன் கொழுப்பு முழுவதையும் நல்லுறவுப்பலியின்
கொழுப்புக்குச் செய்வதுபோல, பலிபீடத்தின்மேல் எரித்துவிடுவார்.
குரு அவனுக்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்;; அவன் மன்னிப்புப்
பெறுவான்.
லேவியர் 4:26
* 19 யோசுவா ஆக்கானிடம், "என் மகனே! இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்கு
மாட்சி செலுத்தி அவருக்கு நன்றி கூறு! நீ என்ன செய்தாய் என்பதை
எனக்குச் சொல். என்னிடமிருந்து மறைக்காதே" என்றார்.
யோசுவா 7:19
* 13 அப்போது தாவீது நாத்தானிடம், "நான் ஆண்டவருக்கு எதிராக
பாவம் செய்துவிட்டேன்" என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், "ஆண்டவரும்
பாவத்தை நீக்கிவிட்டார்.
2 சாமுவேல் 12:13
* 6 அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில்
அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.
மத்தேயு நற்செய்தி 3:6
* 13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம்
பெறாது; அவற்றை ஒப்புக்கொண்டு விட்டுவிடுகிறவர் கடவளின் இரக்கம்
பெறுவார்.
நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 28:13 இந்த வசனத்தில் தன் குற்ற பழிகளை
மூடி மறைப்பவரின் வாழ்வு வளம் பெறாது என்றுள்ளது, மனதில் பாவ
அறிக்கை செய்பவர்கள் நிச்சயமாக மூடி மறைக்க தேவையில்லை மாறாக
பிறரிடம் அறிக்கை செய்யும் போது தான் மூடி மறைப்பார்கள். ஆக
பாவங்களை குருக்களிடம் அறிக்கையிட்டு பாவ மனனிப்பை பெறுவதையே
இங்கே வலியுறுத்த பட்டுள்ளது என அறியலாம்.
ஆக கத்தோலிக்க திருச்சபையின் குருக்களிடம் அறிக்கையிட்டு அப்பாவத்தை
விட்டு விட்டால் மட்டுமே பாவமன்னிப்பு உண்டு,
பாவமன்னிப்பை பெற்று கொண்டால் மட்டுமே மீட்பு உண்டு என்ற சத்தியத்தை
அறிந்து கொள்ளுங்கள்.
|
|
|