Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

விவிலியம்

 

                                    வாழ்விக்கும் விவிலியம்: வாழ்வாக்குவது எப்படி?

அனைத்து கிறிஸ்தவர்களின் புனித நூலாக இருப்பது திருவிவிலியம். கத்தோலிக்கத் திருச்சபையில் அனைத்து வழிபாடுகளிலும் திருவிவிலியம் முக்கிய இடம் பெறுகிறது. ஆலயங்களில் நடைபெறும் திருப்பலி மற்றும் திருவருட்சாதனக் கொண்டாட்டங்களாக இருந்தாலும் சரி, அல்லது வீடு மந்திரிப்பு, அன்பியக் கூட்டங்கள் போன்ற செப வழிபாடுகளாக இருந்தாலும் சரி, விவிலிய வாசகம் இல்லாமல் இருக்காது. நிச்சயம் ஒரு சிறு பகுதியாவது வாசிக்கப்படும். இருப்பினும், கத்தோலிக்கர்கள் மீது பிற கிறிஸ்தவ சபையினர் பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு: கத்தோலிக்கர்கள் விவிலியத்தைப் படிப்பதில்லை. அதற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதனால் இறைவார்த்தை அவர்களுக்குத் தெரிவதில்லை. விவிலியப் படிப்பினைகளின்படி வாழ்வதில்லை. விவிலியத்தை ஒரு பொருட்டாகவே கத்தோலிக்கர்கள் கருதுவதில்லை. எனவேதான் விவிலியத்தில் சொல்லப்படாத பல காரியங்களை அவர்கள் செய்கிறார்கள்.

ஆனால், நாங்கள் அப்படி அல்ல. எங்களுக்கு விவிலியம்தான் எல்லாம். அதை வாசிக்கிறோம், மனப்பாடம் செய்கிறோம். எங்கள் வழிபாடுகளிலும் விவிலியம்தான் எல்லாம். விவிலியம் சொல்வதை மட்டும்தான் செய்வோம் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

கத்தோலிக்கர்கள் மீது இவ்வாறு பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மையானதா? அவர்கள் சொல்வதுபோல் நாம் விவிலியத்தைப் படிப்பதில்லையா? அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் கொடுப்பதில்லையா? நமது வழிபாடுகள் விவிலியத்திற்கு எதிரானதா? இவர்களின் குற்றச்சாட்டுக்கு எப்படி பதில் சொல்வது? இவர்களின் வாதத்தை எப்படி எதிர்கொள்வது? விவிலியத்தை வாசிப்பதாலோ அல்லது மனப்பாடம் செய்வதாலோ மட்டுமே ஒருவருக்கு விவிலியம் தெரியும் என்று சொல்லிவிட முடியுமா? விவிலியத்தை அறிந்திருப்பதால் மட்டுமே ஒருவரது வாழ்வு விவிலியத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது என்று மார்தட்ட முடியுமா? விவிலியத்தில் இந்தெந்த புத்தகங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானித்ததே கத்தோலிக்கத் திருச்சபைதான். அதாவது எது விவிலியம் என்று சொன்னதே நாம்தான். நமக்கே இந்த நிலையா என்று நினைக்கும் போது சற்று வேதனைதான். அவர்களின் குற்றச்சாட்டைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால், அதில் உண்மையிருக்கிறதா என்று சற்று பணிவோடும், உண்மையோடும் நம்மை நாமே சோதித்தறிந்தால், அது நமது ஆன்மீக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்ற விழிப்புணர்வே இம்முயற்சிக்கான முதல் புள்ளி.

விவிலியத்தைப் பொறுத்தவரையில், நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டியது, அது ஏனைய புத்தகங்களைப் போன்றது அல்ல. அது குறிப்பிட்ட குறுகிய  காலத்திற்குள்  எழுதப்பட்டது அல்ல. அல்லது  ஒரு  குறிப்பிட்ட          பாணியில், ஒரே இலக்கிய நடையில், ஒரே ஆசிரியரால், ஒரே இடத்தில் வைத்து எழுதப்பட்டது அல்ல. அதற்கு நீண்ட கால வரலாறு உண்டு. கதை, கவிதை, கட்டுரை, உரைநடை, அறிவுரை, வெளிப்பாடு என்று அதற்குள் பல்வேறு இலக்கிய நடைகள் உண்டு. அதற்கென பல்வேறு ஆசிரியர்கள் உண்டு. அது மிக மிகப் பழமையானது. விவிலியம் ஒரு நூல் மட்டும் அல்ல. அது ஒரு நூலகம். அது ஓர் இறை-மனித காவியம். எனவே, ஏனைய நூல்களைப் படிப்பது போல, வேண்டுமானால் ஒருவர் விவிலியத்தைச் சாதாரணமாக வாசித்து விடலாம். ஆனால், அவ்வளவு எளிதாக அதனைப் புரிந்து வாழ்வாக்கிவிட முடியாது. அதற்கென்று சில நெறிமுறைகள் உண்டு. எனவே, விவிலியத்தை எப்படி வாசிக்கக் கூடாது, அதனை வாசிக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய அடிப்படை விடயங்கள் என்ன? என்பதை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். முதலில் விவிலியத்தை அடிப்படையாக வைத்து நம்மைக் குறைகூறும் பிற சபையினருக்கு எப்படி பதில் சொல்வது என்பதைப் பார்ப்போம்.......
 

ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு எல்லாம் ஆதரவு தருபவளே