|
18 -
சமரசம் உலாவும்
இடம் |
|
|
காலதேவன் ஒரு நாள் ஒரு
இளைஞனைப்பார்த்து தம்பி
இன்றோடு உன்
வாழ்க்கை முடிவடைகிறது. "என்னோடு வா போகலாம்
வா" என்று அவனைப்
பார்த்து சொன்னது. அதற்கு அவன் நான் உன்னோடு வரமுடியாது நான்
அதற்குத் தயாராக
இல்லை என்று சொன்னான். அதற்கு காலதேவன்
"தம்பி உன் பெயர்தான் என்னுடைய அட்டவைனையில்
இருக்கிறது வா
போகலாம்"; என்று அவனிடம் சொன்னது. அதற்கு
"சரி நான் வருகிறேன்";
ஆனால் அதற்கு
முன்பாக நாம் இருவரும் சாப்பிட்டு போகலாம் என
கால தேவனை விருந்துக்கு அழைத்தான் அந்த இளைஞன்.
சரி, என்று
காலதேவன் பதில் சொன்னது. இளைஞன் காலதேவனுக்கு அவன் விருந்து
படைத்தான். அந்தவிருந்தில் அவன் தூக்க மாத்திரையை
கலந்துவிட்டான்.
அதைச் சாப்பிட்ட காலதேவன் நன்றாகத்
தூங்கிவிட்டது. அந்த இளைஞன் காலதேவன் எழுவதற்குள்
அது
வைத்திருந்த பெயர் அட்டவணையை எடுத்து முதலில்
இருந்த தன்பெயரை
இறுதியாக மாற்றி எழுதி வைத்துவிட்டான். காலதேவன் தூங்கி
எழுந்தவுடன் அந்த இளைஞனிடம் சொன்னது "நீ என்னை நனறாக
கவனித்துக்கொண்டதால் நான் உன்னை விட்டுவிடுகிறேன் அதற்கு
பதிலாக அட்டவணையில்
இறுதி பெயரிலிருந்து ஆரம்பிக்கின்றேன்
என்று சொன்னது.
சாவு வாழ்க்கையைப் பார்த்துக் கேட்டது "ஏன் உன்னை எல்லோரும்
அன்பு செய்கிறார்கள் என்னை மட்டும் வெறுக்கிறார்கள்".
வாழ்க்கை பதில் சொன்னது "ஏனென்றால்! நான் அழகான பொய். நீ உண்மையான துன்பம்".
இறைவார்த்தை:
"விருந்து நடக்கும் வீட்டிற்குச்
செல்வதைவிடத் துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது. ஏனெனில், அனைவருக்கும்
இதுவே முடிவு என்பதை உயிருடன்
இருப்போர் அங்கே
உணர்ந்து கொள்வர்."
(சபை உரையாளர் 7: 2)
"மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே
திரும்பு முன்னும், கடவுள்
தந்த உயிர் அவரிடமே திரும்பு
முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை."
(சபை உரையாளர்
12: 7)
"எவருடைய சாவிலும் நான்
இன்பம் காண்பதில்லை, என்கிறார்
தலைவராகிய ஆண்டவர். எனவே மனம் மாறி
வாழ்வு பெறுங்கள்."
(எசேக்கியேல் 18: 32)
"இறைப்பற்றில்லாதவர்கள்
தங்கள்
செயலாலும் சொல்லாலும்
இறப்பபை வரவழைத்தார்கள்:
அதை நண்பனாகக்
கருதி அதற்காக ஏங்கினார்கள்: அதனோடு ஒப்பந்தம் செய்து
கொண்டார்கள். அதனோடு தோழமை கொள்ள அவர்கள் பொருத்தமானவர்களே."
(சாலமோனின் ஞானம்
1: 16)
"நல்லார்; பொல்லாரின்
முடிவு"
(சாலமோனின் ஞானம்
3:1-8)
"நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன்
இறந்தாலும், இளைப்பாற்றி அடைவார்கள்."
(சாலமோனின் ஞானம்
4: 7-19)
"நயின் ஊர்; கைம் பெண் மகன் உயிர் பெறுதல்"
(லூக்கா 7: 11-17)
"தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும்
என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே
தள்ளிவிடமாட்டேன்."
(யோவான் 6; 37-40)
"இலாசர்
இறத்தல், நம்புவோர்
வாழ்வர், இலாசர் உயிர்பெறுதல்"
(யோவான் 11)
"சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்
சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து
தம்மையே தாழ்த்திக்
கொண்டார்."
(1கொரிந்தியர் 15 ஆம்
அதிகாரம் முழுவதும்
பிலிப்பியர்
2: 8 )
"இயேசு
இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம்
நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு
இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்."
(1தெசலோனிக்கர் 4: 14 ) |
பாதர்: ஜெயசீலன்
திண்டுக்கல் |
|