Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ ✞ மரியன்னையின் பிறப்புவிழா: ✞ ✠
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 08)

✠ அதிதூய கன்னி மரியாளின் பிறப்பு ✠
(The Nativity of the Blessed Virgin Mary)

"தூயவர், பாவமற்றவர், அமலோற்பவி, அசல் பாவமற்றவர்"
(Pure, Sinless, Immaculate, Without Original Sin)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

திருவிழா: செப்டம்பர் 8 (உலகளாவியது)

மரியாளின் பிறப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் தாயான தூய கன்னி மரியாளின் பிறந்த நாளைக் குறிக்கிறது. திருமுறை சாராத கி.பி. 2ம் நூற்றாண்டு நூலான யாக்கோபின் முதல் நற்செய்தியில் இருந்து அவரது பெற்றோரின் பெயர் சுவாக்கின் - அன்னா என்று அறிந்து கொள்கிறோம். மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.

யாக்கோபு நற்செய்தி:
கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட யாக்கோபின் முதல் நற்செய்தி, கன்னி மரியாளின் பிறப்பைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறது:

எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான யோவாக்கிம் (சுவக்கீன்), அவரது மனைவி அன்னா (அன்னம்மாள்) இருவரும் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார். அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியாள் (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.

மரியாளுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாளை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்வி சாலையில், மரியாள் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டு தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியாள் ஆர்வம் கொண்டிருந்தார்; பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

கிறிஸ்தவ மரபு:
மரியாளின் பிறப்பு பற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே, திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது. அத்துடன் மரியாளின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்ததாகவும் பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. இறைமகன் இயேசுவின் தாயாகுமாறு, அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உருவானபோதே பிறப்புநிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கிறது.

✞ மரியன்னையின் பிறப்புவிழா:
நிகழ்வு:
ஒரு சமயம் இங்கிலாந்துக்கும், ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது, இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா? அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்.

இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.
தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.

வரலாற்றுப் பின்னணி:
மரியாவின் பிறப்பைக் குறித்து கி.பி. 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.
மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும் என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியாள் எனப் பெயரிடுவீர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியாள் அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாவக்கறை சிறிதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியாள் கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி. 330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சபை வழக்கமாக புனிதரின் தூயவரின் இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியாள் ஆகியோர் ஆவர். இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியாள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியாள் பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்:
இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தேவையில் இருப்போருக்கு இரங்குதல்:
மரியாள் தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். இவற்றையெல்லாம் மரியாள் யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், உன்னால் முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும் என்றார்.
ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.

கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்:
மரியாள் எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும் என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியாள் மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.
இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா, அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தாழ்ச்சி:
மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும். இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.
ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார். படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன் என்றார். அதற்கு குரு, முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.

அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.
ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

நிகழ்வு :
ஒரு சமயம் இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையே கடுமையாகப் போர் நடைபெற்றபோது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய வீரன் ஒருவனைக் கொல்ல நேர்ந்தது. அப்போது இங்கிலாந்து படைவீரன் ஜெர்மானிய படைவீரனின் அன்னைக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதினான்: "போர் நிமித்தமாக உங்களது மகனைக் கொல்ல வேண்டி வந்தது. ஆனாலும் உங்களிடம் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். என்னை மன்னிப்பீர்களா?". அதற்கு அந்தத் தாய் பதில் எழுதினாள்: "மனதார உன்னை மன்னித்துவிட்டேன். போர் முடிந்து நாம் இருவருமே உயிர்வாழ நேர்ந்தால் கிளம்பி வா. என் உள்ளத்திலும் இல்லத்திலும் மகனாக வாழ உன்னை அன்புடன் அழைக்கின்றேன்".

இக்கடிதம் கண்ட அந்த இங்கிலாந்து நாட்டுப் படைவீரன், அந்த ஜெர்மானியத் தாயின் மன்னிக்கும் அன்பை நினைத்து பெருமிதம் கொண்டான்.

தாய் என்றாலே எப்போதும் மன்னிப்பவள்தானே. இன்று நாம் பிறந்த நாளைக் கொண்டாடும் மரியன்னையும்கூட நாம் செய்யும் தவறுகளை மன்னித்து, தன்னுடைய மகனிடம் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது ஆழமான உண்மை.

வரலாற்றுப் பின்னணி :

மரியாவின் பிறப்பைக் குறித்து 170 ஆம் ஆண்டு எழுதப்பட்ட திருச்சபையால் அங்கீகரிக்கப்படாத தூய யாக்கோபு நற்செய்தியில் இடம்பெறும் நிகழ்வு.

மரியாவின் பெற்றோரான ஜோக்கினும் அன்னாவும் திருமணம் செய்து இருபது ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இருந்தாலும் அவர்கள் இறைவனிடத்தில் இடைவிடாது ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் ஜோக்கின் எருசலேம் திருக்கோவிலுக்கு பலி ஒப்புக்கொடுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த தலைமைக்குரு ரூபன் என்பவர் ஜோக்கினிடம், "உனக்குத்தான் குழந்தை இல்லையே. பிறகு எதற்கு இங்கு வந்து பலி செலுத்துகிறீர். உம்முடைய பலியை எல்லாம் கடவுள் ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் தயவுசெய்து இங்கிருந்து போய்விடும்" என்று கடினமான வார்த்தைகளால் திட்டி அனுப்பி விட்டார். இதனால் மனம் உடைந்துபோன ஜோக்கின் தனிமையான இடத்திற்குச் சென்று ஜெபிக்கத் தொடங்கினார்.

இதற்கிடையில் எருசலேம் திருக்கோவிலுக்குச் சென்று, நீண்ட நாட்கள் ஆகியும் தன்னுடைய கணவர் திரும்பி வராததைக் கண்ட அன்னா, தன்னுடைய கணவர் உண்மையிலே இறந்துவிட்டார் என நினைத்து, விதவைக்கோலம் பூண்டு நின்றார். அப்போதுதான் ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, "அன்னா! உன்னுடைய ஜெபம் கேட்கப்பட்டது. நீர் கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுப்பீர். அவருக்கு மரியா எனப் பெயரிடுவீர்" என்று சொல்லிவிட்டுச் சென்றார். பின்னர் வானதூதர் ஜோக்கினுகுத் தோன்றி, அதே செய்தியை அவரிடத்திலும் சொன்னார். இச்செய்தியைக் கேட்ட ஜோக்கின் மிகவும் மகிழ்ந்தார். வானதூதர் அவர்களுக்குச் சொன்னது போன்றே மரியா அவர்களுக்கு மகளாகப் பிறந்தார்.

மரியாவின் பிறப்பு உண்மையிலே இறை வல்லமையால்தான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று சொன்னால் அது மிகையாகாது. எப்படியென்றால், விவிலியத்தில் நிகழ்ந்த ஒருசில முக்கியமான நபர்களின் பிறப்பு இறைவல்லமையால் நிகழ்ந்திருக்கின்றது. ஈசாக்கு (தொநூ 21: 1-3) சிம்சோன் (நீதி 13: 2-7), சாமுவேல் (1சாமு 1: 9-19), திருமுழுக்கு யோவான் (லூக் 1:5-24), இயேசு கிறிஸ்து (லூக்1:26-38) இவர்களுடைய பிறப்பு எல்லாம் சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. இறை வல்லமை அங்கே அதிகதிகமாக செயல்பட்டிருக்கிறது. மரியாவும் மீட்பின் வரலாற்றில் சாதாரணமான ஒரு நபர் இல்லை. இந்த உலகத்தை உய்விக்க வந்த ஆண்டவர் இயேசுவையே பெற்றெடுத்தவள். எனவே, அவருடைய பிறப்பிலும் இறை வல்லமை அதிகமாகச் செயல்பட்டிருக்கும் என நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

பாவக்கறை சிறுதும் இல்லாது பிறந்தவர் இயேசு. எனவே, இயேசு மாசற்றவராக இருப்பதனால், அவரைப் பெற்றெடுக்கும் தாய் மரியாவும் மாசற்றவராக இருக்கவேண்டும் என்பதற்காக அவரைக் கருவிலே பாவக்கறையில்லாமல் தோன்றச் செய்கிறார் கடவுள். ஆகவே, மரியா கடவுளின் படைப்பில் தனிச் சிறப்பு வாய்ந்தவராக விளங்குகின்றார்.

இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட மரியாவின் பிறப்பு விழா நான்காம் நூற்றாண்டிலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது. கி.பி.330 ஆம் ஆண்டு புனித ஹெலன் என்பவர் மரியன்னைக்கு ஓர் ஆலயம் கட்டி, மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபெனஸ், கிறிசோஸ்டம் போன்றோர் மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடியதாக அறிகின்றோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் மரியாவின் பிறப்பு விழா உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவர்தான் இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியன்னையின் பிறப்பு விழா அவ்வாறே கொண்டாடப்பட்டு வருகின்றது.

திருச்சபை வழக்கமாக புனிதரின் தூயவரின் இறந்த நாளை அல்லது அவருடைய விண்ணகப் பிறப்பைத்தான் கொண்டாடும், மண்ணகப் பிறப்பைக் கொண்டாடுவதில்லை. இதற்கு விதிவிலக்கு ஆண்டவர் இயேசு, திருமுழுக்கு யோவான், அன்னை மரியா. இதை வைத்துப் பார்க்கும்போது திருச்சபையில் மரியா எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் என நாம் புரிந்துகொள்ளலாம். மரியா பாவத்தால் வீழ்ந்துகிடந்த இந்த மானுட சமூகத்தை தன்னுடைய திருமகனால் மீட்டவர். எனவே, அவருடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுவது என்பது அன்னைக்கும் ஆண்டவருக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் :

இறைவனின் தாய், மீட்பரின் தாய் என அன்போடு அழைக்கப்படும் மரியன்னையின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்ப்போம்.

தேவையில் இருப்போருக்கு இரங்குதல்:

மரியா தேவையில் இருப்போருக்கு இரங்கும் நல்ல குணம் படைத்த பெண்மணியாக வாழ்ந்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. பேறுகால வேளையில் இருந்த தன்னுடைய உறவுக்கார பெண்மணிக்கு காடு மலைகளை கடந்து உதவச் செல்கிறார். இரசம் தீர்ந்துபோனதால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த கானாவூர் திருமண வீட்டாருக்கு உதவச் செல்கிறார். இவற்றையெல்லாம் மரியா யாரும் கேட்காமல் தாமாகவே சென்றுசெய்கிறார். மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாம், நம்மிடத்தில் அவரிடம் இருந்த இரக்க குணம், தேவையில் இருக்கின்ற மக்கள்மீது இரங்கும் குணம் இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். நாம் தேவையில் இருப்போர்மீது இரங்கும்போது மரியாவின் கடவுளின் அன்புப் பிள்ளைகளாக - மாறுவதோடு மட்டுமல்லாமல், அப்படிப்பட்ட குணம் நம்முடைய உள்ளத்திற்கு ஆறுதலையும் தருகின்றது. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

இந்த உண்மையை விளக்க ஒரு கதை. ஒருமுறை இளைஞன் ஒருவன் ஒரு குருவிடம் சென்று, தனக்கிருக்கும் சந்தேகங்களைக் கேட்டான். "நீண்ட நேரம் பூஜை செய்கிறேன். நெடுநேரம் தியானம் செய்கிறேன். மனம் அமைதியடையவில்லை. அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, பின்னர் குரு அவனிடத்தில் சொன்னார், "உன்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவி செய். யாரேனும் ஏழை நோயுற்றிருந்தால் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அவனுக்கு பணிவிடை செய். அதனால் உனக்கு மன அமைதி உண்டாகும்" என்றார்.

ஆம், தேவையில் இருக்கும் ஓர் ஏழைக்கு உதவும்போது நம்முடைய உள்ளத்தில் மன அமைதி உண்டாகின்றது. அதேவேளையில் நாம் மரியாவின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம்.

கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்தல்:

மரியா எப்போதும் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து வாழ்ந்தவராக விளங்கினார் என்று சொன்னால் அது மிகையாகாது. வானதூதர் கபிரியேல் மரியாவிடம் மீட்புத் திட்டத்தை எடுத்துச் சொன்னபோது, தொடக்கத்தில் தயங்கினாலும், பின்னர் "இதோ ஆண்டவரின் அடிமை, உம்முடைய சொற்படி ஆகட்டும்" என்று சொல்லி இறைவனின் விருப்பம் நிறைவேற தன்னை முழுவதுமாய் கையளிக்கின்றார். ஒருவேளை மரியா மட்டும் வானதூதரின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்காமல் இருந்திருந்தால், நமக்கு மீட்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. மரியாவின் சம்மதத்தால் நாம் அனைவரும் மீட்கப்பட்டோம் என்பதே உண்மை.

இன்றுக்கு நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கின்றோமா? அல்லது நம்முடைய விருப்பத்தின் படி நடக்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். பல நேரங்களில் கடவுளின் விருப்பத்தை மறந்து, நம்முடைய விருப்பத்தின் படி மனம் போன போக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். நாம் அனைவரும் மரியாவைப் போன்று கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தாழ்ச்சி :

மரியாவிடம் விளங்கிய எல்லா நற்பண்புகளைவிடவும் தாழ்ச்சி என்ற நற்பண்பே மேலோங்கி இருக்கின்றது. ஏனென்றால் அவர் ஒருபோதும் தன்னை இறைவனின் தாய் என்று காட்டிக்கொள்ளவில்லை. மாறாக பணிவிடை செய்வதிலேயே எப்போதும் மகிழ்ந்திருந்தார். அதனால்தான் இறைவன் அவரை மேலும் மேலும் உயர்த்துகின்றார். நாமும் தாழ்ச்சியோடு வாழும்போது இறைவனால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.

ஆனால் வேடிக்கை என்னவென்றால், நம்மிடத்தில் தாழ்ச்சி என்ற நற்பண்பு பெருகுவதை விடவும், ஆணவம் என்ற துர்பண்புதான் அதிகமாகப் பெருகுகின்றது. அதனால் நாம் மேலும் மேலும் அழிவைச் சந்திக்கின்றோம். நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், "இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்". இது எவ்வளவு அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். நாம் ஆணவத்தோடும் இறுமாப்போடும் இருக்கின்றபோது அழிவுதான் உறுதி.

ஓர் ஊரில் மிகவும் படித்த அறிஞர் ஒருவர் இருந்தார். தன் கல்வி பற்றி அவருக்கு எப்போதும் அகந்தை உண்டு. ஒருநாள் அவர் ஒரு குருவை அணுகி தனக்கு ஞானம் தருமாறு வேண்டினார். அப்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. ஞானி அவரிடத்தில் சொன்னார். "முதலில் மழையில் போய் நின்று கைகளை உயர்த்தி ஆகாயத்தைப் பார்". படித்தவர் அப்படியே செய்தார். ஆனால் அவருக்குப் பிடிக்கவில்லை. குருவிடம் வந்து, "கொட்டும் மழையில் முழுக்க நனைந்து ஒரு முட்டாள் போல நின்றுகொண்டிருக்கிறேன்" என்றார். அதற்கு குரு, "முதல் நாளே உனக்கு உன்னைப் பற்றிய தெளிவு வந்துவிட்டதே!, அது நல்லது" என்றார். எல்லாம் தெரிந்தவன் என்று ஆணவத்தோடு இருந்த அந்த அறிஞருக்கு குருவின் வார்த்தைகள சாட்டையடி போன்று இறங்கின.

அகந்தையினால் அழிவு ஒன்றே மிஞ்சும் என்பதை இந்தக் கதை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நாம் ஆணவத்தோடும், அகந்தையோடும் வாழாமல், தாழ்ச்சியோடு வாழவேண்டும் என்பதைத்தான் மரியாவின் வாழ்வு நமக்குக் கற்றுத்தருகின்றது.

ஆகவே, மரியன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இன்று, அவரைப் போன்று வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாய் பெறுவோம்.

(அருட்தந்தை: மரிய அந்தோனிராஜ்)

=================================================================================
அன்னை மரியின் பிறப்பு விழா.

தாய்மையின் தாய் பிறந்த தினம்.


எதைப் பற்றி வேண்டுமானாலும் திட்டவட்டமாக சொல்லிவிட முடியும். ஆனால் தாயின் அன்பை பற்றி முழுமையாக விவரிக்க வார்த்தைகளே கிடையாது. கடலின் ஆழம், கோபுர உயரம், மலையின் அகலம், இது அனைத்திற்கும் ஏதாவது ஒன்று ஈடு / நிகர் இருக்கும். ஆனால் தாயின் அன்பிற்கு நிகர் / ஈடு எதுவுமில்லை. தாய்மையின் மேன்மை குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியுள்ளனர்.

கவிஞர் திருவிக.
உலகெல்லாம் உதுப்பிடம் தாய்மை,
உதித்து தங்கி ஓங்குமிடம் தாய்மை,
கலையின் மூலம் கமழுமிடம் தாய்மை, என்று பாடியிருக்கிறார்.

வீரமாமுனிவர், உருவிலான் உருவாகி உலகில் ஓர் மகன் உதிப்ப,
கருவிலான் கருத்தாங்கி கன்னித்தாய் ஆயினயே என்று அன்னை மரியின் தாய்மையைப் பற்றி பாடுகிறார். இத்தகைய தாய்மையின் பிறப்பிடமான அன்னையின் பிறப்பு விழாவையே நாம் இன்று கொண்டாடுகிறோம். அன்னை மரியின் பிறப்பு விழா நாளான இன்று அவரின் மூன்று பண்புகள் வழி அவரைப் போல் வாழ அழைப்புவிடுக்கிறார்.

1. தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.
2. கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றியவர்.
3. தாயாவதற்காக தரணி வந்தவர்.

1.தன் அன்னைக்கு தாய்மை பட்டமளித்தவர்.:
வீட்டின் மூத்த குழந்தைகள் மேல் பெற்றொருக்கு எப்பொழுதும் தனிப்பட்ட அக்கறை , பாசம், கவனம் இருக்கும். ஏனெனில் தம்பதியர்களாகிய அவர்களுக்கு பெற்றோர்கள் என்னும் பெரும் பேற்றினைத் தந்தது அந்த முதல் குழந்தை தான். அதிலும் நீண்ட வருடம் கழித்து பிறந்த குழந்தையாய் இருந்தால் சொல்லவே வேண்டாம். மொத்த பாசமும் அதன் மேல் தான் இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் மரியாள், அன்னா சுவக்கீன் என்னும் வயது முதிர்ந்த தன் பெற்றோருக்கு மகளாய்ப் பிறந்து, அவர்களின் புத்திர சோகத்தைத் தீர்க்கின்றார். இதுவரை பிறரால் மலடி என அழைக்கப்பட்டு வந்த அன்னாள், தாய் என்னும் உயரிய மதிப்பினைப் பெற காரணமாகிறார் அன்னை மரியாள். பிறரது ஏளனத்துக்கும் இகழ்ச்சிக்கும் தூற்றுதலுக்கும் உள்ளான அன்னாள், இன்று பிறரால் ஆச்சரியமாக மகிழ்வாக, விரும்பி பேசப்படும் ஒரு நபராக மாற காரணமாயிருக்கிறார் அன்னை மரியாள். எத்தனையோ பேருக்கு அன்னாள் தனது வாழ்நாளில் பிற பெண்களின் பிரசவ காலத்தில் உறுதுணையாய் இருந்திருப்பார். இன்று தான் அன்று செய்த நற்செயல்களுக்கான கைம்மாறை பெற காத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளாக மாறி இருக்கின்றார். அன்னை மரியாள் பிறப்பின் போதே பலருடைய இன்னல்களைப் போக்கி இனிமையைக் கொண்டு வந்திருக்கிறார். நாம் அன்னை மரியாள் போல என்றாவது செயல்பட்டிருக்கிறோமா சிந்திப்போம். பிறரை மகிழ்விக்கும் ஒரு நபராக, பிறரின் மகிழ்விற்கு காரணமாக இருப்பவராக இருக்க முயல்வோம். பிறரின் இன்னல் நீக்கி இனிமை சேர்ப்பவர்களாவோம்.

ஆச்சரியக் குறியைக் கேள்விக் குறியாக்கியவர்.:
முதிர் வயதினருக்கு மகிழ்வே, தன் பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளின் உடன் இருப்பும் உறவும் தான். அவர்களது எதிர்காலமே, குழந்தைகளின் வாழ்வும் வளர்ச்சியும் தான். அவர்களது சிறு சிறு அசைவிலும், சொல்லிலும், செயலிலும் உலகத்தையும் தன்னையும் மறந்து மகிழ்வடைவர். அத்தகையதொரு எல்லையில்லா மகிழ்வை அன்னாள் சுவக்கீன் என்னும் தன் பெற்றோருக்கு கொடுக்கின்றார் அன்னை மரியாள். தங்களது வாழ்வு இப்படியே முடிந்து விடுமோ என்று எண்ணி ஏங்கியவர்களுக்கு புது வாழ்வாய் உதயமாய் பிறக்கின்றார். பெரியவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிய கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மாற்றி மகிழ்வு தருகின்றார். அன்னை மரியாள். நாம் என்றாவது கேள்விக்குறியாக இருப்பவர்களின் வாழ்வை ஆச்சரியக் குறியாக மாற்றி இருக்கின்றோமா? அதாவது, பிறரின் வாழ்விற்கு வளம் சேர்த்த நாட்கள் நேரங்கள் உண்டா? என சிந்திப்போம். குறைந்த பட்சம் ஆச்சரியக்குறியுடன் (மகிழ்வுடன்) வாழ்பவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக ( குழப்பமாக) மாற்றாதிருக்க முயல்வோம். பெரியவர்களோ சிறியவர்களோ அவர்களின் மகிழ்விற்கு மகிழ்வு சேர்க்கும் காரணிகளாக வாழ முயல்வோம்.

தாயவதற்காக தரணி வந்தவர்:
நம் ஒவ்வொருவரின் பிறப்பிற்கும் ஒரு காரணம் உண்டு. அதுபோல நாம் வாழ்கிறோமா என்றால் அது யோசிக்க வேண்டிய ஒரு விசயம். ஆனால் அன்னை மரியாளின் பிறப்பிற்கு காரணம் அவர் இறைமகனின் தாயாக வேண்டும் என்ற ஒரு காரணமே. நான் மருத்துவராவேன் பொறியியலாளராவேன் விஞ்ஞானியாவேன் என்று சிறு வயதில் சொல்லித் திரியும் குழந்தை, காலப் போக்கில் அதை மறந்து விடும். ஒவ்வொரு முறையும் யார் அதன் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்களோ அவராக மாறவேண்டும் என முடிவு செய்யும். அதையே பிறரிடம் வெளிப்படுத்தவும் செய்யும். உதாரணத்திற்கு தன் அம்மா அப்பா போல,தன் உறவினர்கள் போல, தான் பார்க்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் கதை மாந்தர் போல என் தன் முடிவை மாற்றிக் கொண்டே இருக்கும். இறுதியில் தனக்கென்று ஒரு துறையை, வளர்ந்த பின் தேர்ந்தெடுத்து அதுவாக மாற முயற்சிக்கும். ஆனால் அன்னை மரியாள் அப்படியில்லை. சிறுவயது முதலே இறைவனின் தாயாகும் நிலைக்கு தன்னை தகுதிப்படுத்துகிறாள். அவர் அறியாமலேயே அப்பண்பு அவரை அந்நிலைக்கு உயர்த்துகிறது பிறக்கும் போதும் வளரும் போதும் வளர்ந்த பின்பும் என எல்லா நேரத்திலும் இறைவனின் தாயாகவே உருமாறுகிறார். நமது பிறப்பின் நோக்கம் என்ன? நமக்கென்று கொடுக்கப்பட்டுள்ள இறைத்திருவுளத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா? சிந்திப்போம். எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இந்நாளில் அன்னையைப் போல துன்புறும் மனிதர்களுக்கு தூய மகிழ்வைத் தருபவர்களாவோம். எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கங்களுடன் காத்திருப்பவர்களுக்கு விடைதரும் விழுதுகளாவோம். பிறப்பின் நோக்கத்தை உணர்ந்து செயல்படும் செயல் வீரர்களாகத்திகழ்வோம். அன்னையின் பண்பில் மிளிர்ந்து அவரைப் போல வாழ முயற்சிப்போம். இறையாசீர் என்ன்றும் நம்மோடும் நம் குடும்பத்தார் அனைவர் மீதும் இருப்பதாக ஆமென்.

மீக்கா; 5:2-5
உரோமையர்: 8: 28-3-
மத்தேயு : 1: 1-16,18-23

மறையுரைச்சிந்தனை சகோதரி மெரினா ம. ஊ. ச.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா