✠ புனிதர்கள் அட்ரியான் மற்றும் நடாலியா ✠
(Sts.Adrian
and Natalia of Nicomedia) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep 08) |
✠ புனிதர்கள் அட்ரியான் மற்றும்
நடாலியா ✠(Sts.Adrian and Natalia of Nicomedia)
✠
மறைசாட்சியர் :
(Martyrs)
✠பிறப்பு
: ----
✠இறப்பு
: மார்ச் 4, 306
நிகொமேடியா
(Nicomedia)
✠ஏற்கும்
சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠முக்கிய
திருத்தலம் :
கான்ஸ்டன்டினோபில் அருகேயுள்ள அர்கிரோபொலிஸ்
(Argyropolis near Constantinople)
ஜெரார்ட்ஸ்பெர்கன், பெல்ஜியம்
(Geraardsbergen, Belgium)
தூய அட்ரியானோ அல் ஃபோரோ, ரோம்
(Church of St Adriano al Foro, Rome)
✠நினைவுத்
திருநாள் : செப்டம்பர் 8
✠பாதுகாவல்
:
பிளேக் நோய், வலிப்பு நோய், ஆயுத விற்பனையாளர்கள், கறி வெட்டுபவர்கள்,
காவலர்கள், வீரர்கள்.
புனிதர் அட்ரியான், ரோம பேரரசர் (Roman Emperor) "கலேரியஸ்
மேக்ஸிமியனின்" (Galerius Maximian) அரச பாதுகாவலராகப் (Herculian
Guard) பணியாற்றியவராவார். இவரும், இவரது மனைவு "நடாலியாவும்"
(Natalia) கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாறிய காரணத்தால்
"நிகொமேடியா" (Nicomedia) நகரில், மறைசாட்சியாக துன்புறுத்தப்பட்டுக்
கொல்லப்பட்டனர்.
அட்ரியானும், நடாலியாவும், பேரரசன் "மேக்ஸிமியனின்" காலத்தில்,
நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், நிகொமேடியா நகரில் வாழ்ந்தவர்கள்
ஆவர். இருபத்தெட்டு வயது அட்ரியான், ரோம அரச மாளிகையின் தலைமை
காவலனாக இருந்தார்.
ஒருமுறை, ஒரு கிறிஸ்தவ இசைக்குழுவை துன்புறுத்தும் பணியை தலைமை
தாங்கியபோது அவர் அவர்களிடம், "நீங்கள் உங்கள் கடவுளிடம் என்ன
பரிசினை எதிர்பார்க்கிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர்கள்,
1 கொரிந்தியர் 2:9ல் எழுதியிருந்ததைப் போல, "தம்மிடம் அன்பு
கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப்
புலப்படாமலும், செவிக்கு எட்டாமலும், மனித உள்ளமும் அதை அறியாமலும்
இருக்கவேண்டும்" என்று கேட்டார்கள். அவர்களது தைரியத்தைக் கண்டு
ஆச்சரியப்பட்ட அவர், அனைவரின் முன்னிலையில் தமது விசுவாசத்தை
ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் இதுவரை திருமுழுக்கு பெற்றிருக்கவில்லை.
அட்ரியான் தம்மைத்தாமே சிறையில் அடைத்துக்கொண்டார். தம்மைக்
காண வருபவர்களை காண மறுத்தார். நடாலியா மட்டும் ஒரு ஆணின் ஆடை
அணிந்து, அவர் பரலோகத்தில் நுழைந்தபோது அவரது ஜெபங்களை கேட்க
வந்தார்.
கொலையாளிகள், இறந்துபோனவர்களின் உடல்களை எரித்துவிட விரும்பினர்.
ஆனால், ஒரு பெரும் காற்று எழுந்து, எரிந்த தீயை அணைத்தது. நடாலியா,
அட்ரியானின் கை ஒன்றினை தேடி கண்டெடுத்தார்.
வரலாற்று உண்மைகள்:
"நிகொமேடியா" (Nicomedia) நகரில் இரண்டு அட்ரியான்கள் இருந்ததாகவும்,
இருவருமே மறைசாட்சிகளாக கொல்லப்பட்டதாகவும், ஒருவர் பேரரசன்
"டயக்லேஷியன்" (Diocletian) காலத்தில் இருந்ததாகவும், இன்னொருவர்
பேரரசன் "லிஸினியஸ்" (Licinius) காலத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. |
|
|