Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் வென்செஸ்லாஸ் ✠(St. Wenceslaus I)
  Limage contient peut-tre : 2 personnes  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 28)
✠ புனிதர் முதலாம் வென்செஸ்லாஸ் ✠(St. Wenceslaus I)

மறைசாட்சி : (Martyr)

பிறப்பு : கி.பி. 907
ப்ராக், போஹேமியா
(Prague, Bohemia)

இறப்பு : செப்டம்பர் 28, 935
ஸ்டாரா போலேஸ்லாவ், போஹேமியா
(Star Boleslav, Bohemia)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள் :
தூய விதுஸ் பேராலயம், ப்ராக்
(St Vitus Cathedral, Prague)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 28

சித்தரிக்கப்படும் வகை :
மகுடம், குத்துவாள், பதாகையில் கழுகு

பாதுகாவல் : ப்ராக் (Prague), பொஹேமியா (Bohemia), செக் குடியரசு (Czech Republic)

புனிதர் முதலாம் வென்செஸ்லாஸ் "போஹேமியா"வின் (Bohemia) கோமகனாக கி.பி 921ம் ஆண்டு முதல் கி.பி. 935ம் ஆண்டில் தனது தம்பி "கொடூரன் போலஸ்லாஸ்" (Boleslaus the Cruel) என்பவரால் கொல்லப்படும்வரை ஆட்சியில் இருந்தவர் ஆவார். இவருடைய உயிர்த் துறப்பாலும் இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல்களாலும் நற்பண்புமிக்க நாயகன் என்று போற்றப்பட்டு புனிதராக அறிவிக்கப்பட்டார். இவர் செக் குடியரசு, பொஹேமியா மற்றும் ப்ராக் ஆகிய இடங்களின் பாதுகாவலராவார்.

வாழ்க்கை :
இவரது பெற்றோர், "முதலாம் விராடிஸ்லாஸ்" மற்றும் "டிராஹோமிரா" (Vratislaus I & Drahomra) ஆவர். இவரது தந்தை, போஹேமியாவின் "பிரெமிஸ்லிட்" (Premyslid dynasty) எனும் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் ஆவார். வென்செஸ்லாஸ், சிறுவயது முதல் இறையுணர்வும், அடக்கமும் கொண்டவராகவும், நன்கு கற்றறிந்தவராகவும், புத்திசாலியாகவும், அறியப்பட்டார். இவர் சிறுவயது முதல், நற்கருணை வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு போஹேமியாவின் கோமகனாக, வென்செஸ்லாஸ் பதவியேற்றார்.

மரணம் :
இவருக்கு ஒரு மகன் பிறந்ததால், தன் அரசு உரிமையை இழந்ததாக நினைத்த இவரது தம்பி போலெஸ்லாவ், இவரைக் கொல்லத் திட்டமிட்டான். தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனிதர்கள் "கோஸ்மாஸ் மற்றும் தமியான்" (Saints Cosmas and Damian) விழாவில் பங்கேற்று விருந்துண்ண அழைத்தான். விருந்துக்குச் செல்லும் வழியில் தேவாலயத்திற்குச் சென்ற வென்செஸ்லாஸை, தேவாலயத்தின் வாசலிலேயே இவரது தம்பியுடனிருந்தோர்கள் குத்திக் கொன்றனர். "இறைவன் உன்னை மன்னிப்பாராக." என்ற வார்த்தைகளுடன் வென்செஸ்லாஸ் உயிர் துறந்தார்.


 

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா