✠ புனிதர் தாமஸ் ✠(St. Thomas of Villanova) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep
10) |
✠ புனிதர் தாமஸ் ✠(St. Thomas of Villanova)
✠மறைப்பணியாளர், ஆயர், ஒப்புரவாளர் :
(Religious, Bishop and Confessor)
✠பிறப்பு : 1488
வில்லநோவா டி லாஸ் இன்ஃபேன்ட்ஸ், சியுடாட், ஸ்பெயின்
(Villanueva de los Infantes, Ciudad Real, Spain)
✠இறப்பு : செப்டம்பர் 8, 1555
வலென்சியா, ஸ்பெயின்
(Valencia, Spain)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠புனிதர் பட்டம் : நவம்பர் 1, 1658
திருத்தந்தை ஏழாம் அலெக்சாண்டர்
(Pope Alexander VII)
✠பாதுகாவல் :
வில்லநோவா பல்கலைகழகம்
(Villanova University)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 10
வில்லநோவா புனிதர் தாமஸ், "அகுஸ்தினார் துறவற சபையைச்" (Order
of Saint Augustine) சேர்ந்த ஒரு ஸ்பேனிஷ் துறவியாவார்
(Spanish friar). தமது காலத்தில், குறிப்பிடத்தக்க ஒரு
போதகரும், சந்நியாசம், மற்றும் ஆன்மீக எழுத்தாளரும் ஆவார்.
இவர், ஏழைகளின்பால் அன்பும் கருணையும் கொண்ட ஒரு பேராயரும்
ஆவார்.
"தோமஸ் கார்சியா ஒய் மார்ட்டிநெஸ்" (Tomás García y Martínez)
எனும் இயற்பெயர் கொண்ட இவருடைய தந்தை, ஒரு தானியங்களை
அரைக்கும் தொழில் செய்பவர் ஆவார். அவர் தமது தாயைப் போலவே,
உணவு மற்றும் பலசரக்கு வகைகளை தினமும் ஏழைகளுக்கு கொடுக்கும்
வழக்கம் கொண்டவராயிருந்தார்.
தமது பதினாறு வயதில், கலை மற்றும் இறையியல் கற்பதற்காக
"அல்காலா பல்கழையில்" (University of Alcalá) சேர்ந்தார். தமது
கல்வியை முடித்த தாமஸ், அங்கேயே ஒரு பேராசிரியராக பணி
புரிந்தார். கலை, தர்க்கம், மற்றும் தத்துவம் ஆகிய பாடங்களைப்
போதித்த தாமஸ், தொடர்ச்சியான மறதி மனப்பாங்கு உள்ளவராயும்,
குறைந்த ஞாபக சக்தியும் கொண்டவராக இருந்தார். இதன் காரணமாகவே,
1516ம் ஆண்டு, "சலமான்கா" (Salamanca) எனுமிடத்திலுள்ள புனித
அகுஸ்தினார் துறவற சபையில் இணைந்தார். 1518ம் ஆண்டில்
குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
அன்பொழுக இனிமையாக அருட்போதனை செய்வதில் மிகவும் பிரசித்தி
பெற்றவராக திகழ்ந்தார். "இறைவனின் அன்பு" என்னும்
தலையங்கத்திலேயே பெரும்பாலான சொற்பொழிவுகளை தயாரித்து
நிகழ்த்தினார். அன்னை கன்னி மரியாளின் மீது அபரிமிதமான பக்தி
கொண்டிருந்தார்.
1533ல், புனித அகுஸ்தினார் துறவற மடத்திலிருந்து மெக்சிக்கோ
(Mexico) நாட்டுக்கு அனுப்பப்பட்ட தாமஸ், அங்கே அரசர் ஐந்தாம்
சார்லஸ் (Charles V) அவர்களால் "கிரனடா" (Granada) உயர் மறை
மாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால், தாமஸ் அதை
ஏற்க மறுத்துவிட்டார். 1544ல் மீண்டும் அவர் "வலேன்சியா"வின்
(Valencia) பேராயராக நியமிக்கப்பட்டார். ஆனால் தமது
முன்னோடிகள் உத்தரவிடும்வரை அவர் தொடர்ந்து அதற்கும்
மறுத்துவிட்டார்.
தாமஸ் சிக்கனத்துக்கு பெயர் போனவர். ஒருமுறை, தமது இல்லத்தை
அலங்கரிப்பதற்காக கிடைத்த நன்கொடை பணத்தை நகரிலுள்ள ஒரு
மருத்துவமனையின் பராமரிப்பு பணிகளுக்காக கொடுத்துவிட்டார்.
அவர், தாம் படுக்க உபயோகித்த பாயை கூட ஏழை ஒருவருக்கு
உதவுவதற்காக விற்றுவிட்டார். துறவு மடத்தில் தாம் புகுநிலை
துறவியாக இருந்தபோது அணிதிருந்த சீருடை அங்கியையே
பேராயரானபிறக்கும் அணிந்து வந்தார். தாமஸ் "ஏழைகளின் தந்தை"
என்று அறியப்பட்டார். அனாதைகள், ஏழைப்பெண்கள், ஆதரவற்றவர்கள்
மற்றும் நோயுற்றோர் மீது அவர் கொண்ட தொடர்ந்த அன்பும் பற்றும்
அளவற்றது. உறைவிட பள்ளிகள் மற்றும் உயர்நிலை பள்ளிகள் பலவற்றை
அவர் கட்டி உருவாக்கினார்.
தமது 67வது வயதில் வலென்சியா'வில் (Valencia) மரணமடைந்த
தாமசின் உடல் அங்கேயுள்ள பேராலயத்தில் பாதுகாக்கப்பட்டது. |
|
|