Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் தியோடர் ✠(St. Theodore of Tarsus)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 19)
✠ புனிதர் தியோடர் ✠(St. Theodore of Tarsus)

 ✠
கேண்டர்பரி நகர பேராயர் :
(Archbishop of Canterbury)

பிறப்பு : கி.பி. 602
டார்சஸ் (Tarsus), துருக்கி

இறப்பு : செப்டம்பர் 19, 690
காண்டர்பரி (Canterbury), இங்கிலாந்து

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 19

புனிதர் தியோடர், இங்கிலாந்து நாட்டின், கேண்டர்பரி நகரில் 668 முதல் 690 வரை பேராயராக இருந்தவர் ஆவார். இவரது காலத்தில் ஆங்கில திருச்சபையின் சீர்திருத்தம் செய்தது மற்றும் கேண்டர்பரி நகரில் ஒரு பள்ளியைக் கட்டி தொடங்கியது இவருக்கு புகழ் சேர்த்தது. இவருக்கு இங்கிலாந்து நாட்டில் பெரிய பேராலயம் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.

"பைசான்டைன் கிரேக்க" (Byzantine Greek) வம்சாவளியைச் சேர்ந்த இவர், "சிலிசியாவின்" (Cilicia) "டார்சஸ்" (Tarsus) நகரில் பிறந்தவர் ஆவார். தமது குழந்தைப் பருவத்திலேயே "பைசாண்டியம்" (Byzantium) மற்றும் "பாரசீக சஸ்ஸனிட்" (Persian Sassanid Empire) பேரரசுகளுக்கிடையே நடந்த பேரழிவுகரமான போர்களைக் கண்டார். இப்போர்களால் 613-614 ஆண்டு காலகட்டத்தில் "அந்தியோக்கியா" (Antioch), "டமாஸ்கஸ்" (Damascus) மற்றும் "எருசலேம்" (Jerusalem) ஆகிய நாடுகள் பிடிபட்டன. தியோடருக்கு பதினோரு வயதாகையில், பாரசீக படைகள் அவரது சொந்த ஊரான "டார்சஸ்" (Tarsus) நகரைக் கைப்பற்றின.

பாரசீக பண்பாடுகளின் அனுபவமிக்க இவர், அந்தியோக்கியாவில் கல்வி கற்றார். இவர் சிறிய பண்பாடுகள், மொழி மற்றும் இலக்கியங்களை அறிந்திருந்தார். கிழக்கு ரோம பேரரசுக்குச் (Eastern Roman Empire) சென்ற இவர், "காண்ஸ்டன்டினோபிளின்" (Constantinople) தலைநகரான "பைசண்டைனில்" (Byzantine) வானியல், திருச்சபை கணிப்பு, வானசாஸ்திரம், மருத்துவம், ரோமன் சிவில் சட்டம், கிரேக்கம் சொல்லாட்சி, தத்துவம், மற்றும் ஜாதகத்தின் பயன்பாடு ஆகியன கற்றார். பின்னர் ரோம் சென்று குருத்துவம் பெற்றார். 667ம் ஆண்டில் திருத்தந்தை "விட்டாலியன்" (Pope Vitalian) அவர்களால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

பின்னர் 668ம் ஆண்டு ஆப்ரிக்கா நாட்டிலுள்ள பழங்குடி மக்களுக்கு பணியாற்ற பொறுப்பேற்றார். அப்போது ஆப்ரிக்காவை ஆண்டுவந்த கேண்டர்பரி மன்னனை எதிர்த்தார். 669ம் ஆண்டு மீண்டும் இங்கிலாந்து திரும்பி உயர் பதவி வகித்த மன்னன் இவருக்கு உதவினார். பின்னர் 673 மற்றும் 680ம் ஆண்டுகளில் இரண்டுமுறை ஆயர்களின் ஆலோசனை சபையை (Synod) கூட்டினார். இவர் இங்கிலாந்து நாட்டின் முதல் பேராயர் என்ற பெயர் பெற்றவர் ஆவார்

இருபத்திரண்டு வருடங்கள் பேராயராக பணியாற்றிய தியோடர், கி.பி. 690ம் ஆண்டு மரித்தார். அப்போது அவருக்கு வயது, 88 ஆகும். "காண்டர்பரி" (Canterbury) நகரிலுள்ள தூய பேதுரு (St. Peter's church) ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவ்வாலயம் தற்போது "தூய அகுஸ்தினார் துறவு மடம்" (St. Augustine's Abbey) என்றழைக்கப்படுகின்றது.

 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா