✠ புனிதர் தெக்லா ✠(St. Thecla) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 23) |
✠ புனிதர் தெக்லா ✠(St. Thecla)
✠ கன்னியர்/ மறைசாட்சி :
(Virgin and Martyr)
✠பிறப்பு : கி.பி. 30
கொன்யா, துருக்கி (லிகவோனியா)
(Konya, Turkey (Lycaonia)
✠இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
எபிஸ்கோபல் திருச்சபை
(The Episcopal Church)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 23
புனிதர் தெக்லா, ஆதி கிறிஸ்தவ திருச்சபையின் புனிதரும்,
திருத்தூதர் பவுலை பின்பற்றிய சீடரும் ஆவார். அவரது வாழ்நாளின்
ஆரம்ப பதிவு, "பவுல் மற்றும் தெக்லாவின் பழமையான ஐயத்திற்கிடமான
சட்டங்களில்" (Ancient Apocryphal Acts of Paul and Thecla) இருந்து
வருகிறது.
புனிதர் இசிடோர் (St. Isidore of Pelusium) இவரை முதல் பெண் மறைசாட்சியாகவும்
திருத்தூதர்களின் நூற்றாண்டின் மிக அழகான ஆபரணங்களில் ஒன்றாகவும்
கருதினார். இவருக்கு சமூக தத்துவம் மற்றும் இலக்கியம் ஆகியவற்றில்
நல்ல அறிவு இருந்ததாக, "புனிதர் மெத்தோடியஸ" (St. Methodius
of Olympus) "கன்னியரின் பெருவிருந்து" எனும் நூலில்
குறிப்பிடுகிறார். வலிமை மற்றும் சொற்பொழிவுகளில் சிறந்த இவர்,
தம்மை இனிமையாக வெளிப்படுத்துபவராகவும் மெத்தோடியஸ்
குறிப்பிடுகிறார். திருத்தூதர் புனிதர் பவுலால் கிறிஸ்தவத்திற்கு
மனம்மாற்றப்பட்ட இவர், நமது மதத்தில் அறிவார்ந்தவராக ஆனார்.
தமது விசுவாசத்திற்கான பல்வேறு போராட்டங்களில் இயேசு
கிறிஸ்துவின்பால் அவர் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தினார்.
பவுல் இதனை பாராட்டினார்.
புனிதர் அகஸ்டின் (St. Augustine), புனிதர் எபிஃபனியஸ் (St.
Epiphanius), மற்றும் புனிதர் அம்புரோஸ் (St. Ambrose) ஆகியோரின்
கூற்றின்படி, அவர் கி.பி. 34ம் ஆண்டில் திருத்தூதர் பவுலால் "இக்கோனியம்"
(Iconium) (இன்றைய தென் மத்திய துருக்கியில் - South Central
Turkey) கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாற்றப்பட்டார். புனிதர் பவுலின்
தூய்மை பற்றின பிரசங்கங்களால் கவரப்பட்ட தெக்லா, தாம் வாழ்நாள்
முழுதும் கன்னியாகவே வாழ தீர்மானித்திருந்தார். தெக்லா, தமது
உறவினர்களிடமிருந்தும், மண உறுதி செய்யப்பட்ட ஆணிடமிருந்தும்
மிகப்பெரிய பயங்கரமான அழுத்தங்களை அவர் அனுபவித்தார். ஆனால்
மென்மையான வார்த்தைகளாலோ, அல்லது அச்சுறுத்தல்களாலோ அவரது
முடிவிலிருந்து அவரை நகர்த்த முடியவில்லை. தமக்கு நெருக்கமாக
இருந்தவர்கள் உண்மையில், சாத்தானின் தீய செயல்களாக செயல்படுவதை
உணர்ந்த புனிதர் தெக்லா, அவர்களை கத்தோலிக்க எதிரிகளாக கருதி
ஒதுக்கினார். ஆயினும்கூட, அவர்களுடைய வற்புறுத்தல்கள் அவருக்கு
உண்மையான துன்புறுத்தலாக அமைந்தது.
கிறிஸ்தவர் என்ற காரணத்துக்காகவே அவரது தாயார் அதிகார வர்க்கத்தினரால்
கண்டிக்கப்பட்டார். புனிதர் தெக்லா கூறிய மரக்குற்றிகளில் கட்டப்பட்டு
எரியூட்ட தயார் செய்யப்பட்டார். ஆனால் அவர்கள் அவரைத் தொட்டதுமே
வானினிற்று கொட்டிய மழையால் தீ அணைக்கப்பட்டது. இதன்காரணமாக தடுமாற்றமடைந்த
ஆளுநர், இக்கோனியத்தை (Iconium) விட்டு வெளியேறுமாறு அவருக்கு
உத்தரவிட்டு, அவரை விடுவித்தார்.
தெக்லா, சிரியாவிலிருந்த (Syria) அந்தியோக்கியாவுக்குச் (Antioch)
சென்றார். அங்கே, ஒரு ஆர்வலர் தமக்கு தந்த வசதிகளை அவர் மறுத்துவிட்ட
காரணத்தால், அந்த ஆர்வலர் அவரை மறுத்து ஒதுக்கினார். அரங்கிலிருந்த
மிருகங்களுக்கு அவரை இரையாக வழங்கப்பட்டபோது, மிருகங்கள் அவரை
தொடாமல் அவரது காலடியில் கிடந்தன. அவரைக் கொல்ல எடுக்கப்பட்ட
மற்ற முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, தெக்லா மீண்டும் விடுதலை
செய்யப்பட்டார். தமது மீதமிருந்த வாழ்க்கையை, உலக நடவடிக்கைகளிலிருந்து
விலக்கிக்கொண்ட துறவியாக செலவிட்டார். அங்கேயே மரித்த அவர்,
சிரியாவில் (Syria) அடக்கம் செய்யப்பட்டார்.
முதல் கிறிஸ்தவ ரோம பேரரசர்களின் கீழ், ஒரு பேராலயம் அவரது கல்லறையில்
கட்டப்பட்டு, எண்ணற்ற புனித யாத்ரீகர்களின் தளமாக அது மாறியது.
மிலன் கதீட்ரல் (Cathedral of Milan) புனிதர் தெக்லாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நல்மரணம் வேண்டி, பலர் அவரிடம் ஜெபிக்கிறார்கள்.
|
|
|