✠ புனிதர் புல்ச்செரியா ✠(St. Pulcheria) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 10) |
✠ புனிதர் புல்ச்செரியா ✠(St. Pulcheria)
✠ கிழக்கு ரோமப் பேரரசின் பேரரசி :
(Empress of the Eastern Roman Empire)
✠பிறப்பு : ஜனவரி 19, 398 அல்லது 399
கான்ஸ்டன்டினோபிள்
(Constantinople)
✠இறப்பு : ஜூலை 453
அனேகமாக கான்ஸ்டான்டினோபிள்
(Probably Constantinople)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 10
புனிதர் ஏலியா புல்ச்செரியா, கிழக்கு ரோமப் பேரரசரான (Eastern
Roman Emperor) தமது இளைய சகோதரர் இரண்டாம் தியோடோசியஸின்
(Theodosius II) சிறுவயது ஆட்சி காலத்தில், பைசண்டைன் பேரரசின்
(Byzantine Empire) ஆட்சிப் பிரதிநிதியாக (Regent)
இருந்தவரும், கிழக்கு ரோமப் பேரரசின் பேரரசர் மார்சியனை
(Marcian) திருமணம் செய்ததன் மூலம் அப்பேரரசின்
பேரரசியுமாவார்.
பைசண்டைன் பேரரசர் (Byzantine Emperor)
ஆர்கேடியஸ் (Arcadius), மற்றும் பேரரசி
ஏலியா யூடோக்ஸியா (Empress Aelia
Eudoxia) ஆகியோரின் மூத்த மகளான இவர், கி.பி. 415ம் ஆண்டு,
தமது பதினைந்தாம் வயதில், தமது இளைய சகோதரரான இரண்டாம்
தியோடோசியஸின் பாதுகாவலராக ஆட்சிப் பொறுப்பை
எடுத்துக்கொண்டார். மேலும்
அகஸ்டா பேரரசி (Augusta - Empress) என்று பறைசாற்றினார். தமது சகோதரர் ஆட்சியின்போது
அரசியல் சக்தியை மாற்றிக்கொண்டிருந்தாலும், புல்ச்செரியா
குறிப்பிடத்தக்கவராக இருந்தார். கி.பி. 450ம் ஆண்டு, ஜூலை
மாதம், 26ம் நாளன்று, தமது சகோதரர் இரண்டாம் தியோடோசியஸ்
மரித்ததும், கிழக்கு ரோமப் பேரரசர் மார்சியனை (Marcian)
திருமணம் செய்ததன் மூலம் அப்பேரரசின் பேரரசியானார். அதே
சமயத்தில், கன்னித்தன்மைக்கான தமது சத்திய பிரமாணத்தை
மீறாமலும் இருந்தார். மூன்று வருடங்கள் கழித்து, கி.பி. 453ம்
ஆண்டு, அவர் மரித்தார்.
புல்ச்செரியா, திருச்சபை வரலாற்றில் மிக முக்கியமான எபேசஸ் மகாசபை (The Council of Ephesus) மற்றும் சால்செடன் மகாசபைí
(The Council of Chalcedon) ஆகிய இரண்டு கிறிஸ்தவ ஆலோசன
மகாசபைகளை நடத்த வழிகாட்டியதன் மூலம் கிறிஸ்தவ திருச்சபை
மற்றும் அதன் இறையியல் வளர்ச்சியில் பெரிதும் செல்வாக்கு
கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு
மரபுவழி திருச்சபையும் இவரை புனிதராக ஏற்கின்றன. |
|
|