Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் பாப்னுஷியஸ் ✠(St. Paphnutius of Thebes)
  Limage contient peut-tre : 1 personne, plein air  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 11)
✠ புனிதர் பாப்னுஷியஸ் ✠(St. Paphnutius of Thebes)

 ஒப்புரவாளர், ஆயர் :
(Confessor and Bishop)

பிறப்பு : ---

இறப்பு : கி. பி. நான்காம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
கிரேக்க கத்தோலிக்க திருச்சபை
(Greek Catholic Church)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 11

புனித பாப்னுஷியஸ், எகிப்திய துறவியும் புனிதருமான பெரிய அந்தோனியாரின் சீடர்களில் ஒருவராவார். இவர் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் "மேல் தெபைட்" (Upper Thebaid) மாநிலத்திலுள்ள ஒரு நகரின் ஆயராகவும் பணி புரிந்தார். 325ல் நடந்த "நிசேயாவின்" (Nicaea) "முதல் ஆலோசனைக் கூட்டத்தின்" (First Council) நிரந்தர உறுப்பினராக அடையாளம் காணப்பட்டவர் ஆவார். இக்கூட்டத்தில், "ஐம்பத்தேழாம் ரோமப் பேரரசர்" (57th Emperor of the Roman Empire) "பெரிய கான்ஸ்டாண்டின்" (Constantine the Great) அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

பல ஆண்டுகள் பாலைவனத்தில் வாழ்ந்தார். பிறகு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். தன் மறைமாநில மக்கள் பாவமன்னிப்பு பெற வேண்டுமென்று விரும்பினார். இதன் வழியாக அமைதியை நிலை நாட்ட எண்ணினார். அதற்காக பெரிதும் உழைத்து, தம் மந்தையை மனம் திருப்பினார். பின்னர் தம் மக்களை நல்ல கிறிஸ்தவர்களாக உருவாக்கினார்.. பல பாவமன்னிப்பு வழிபாடுகள் நிகழ்த்தி, மக்களின் மனதை முழுவதுமாக இறைவன்பால் திருப்பினார்.

சில பண்டைய சரித்திர ஆசிரியர்களின் கூற்றின்படி, மதகுருக்களுக்கான பிரத்தியேகமான "முதல் உலகக் கவுன்சிலின்" (First Ecumenical Council) விவாதத்தில் ஒரு பகுதியாக, அவர் ஒரு பிரபலமான, சில தீர்க்கமான முடிவுகளை எடுத்துக்கொண்டார்.

தமது கிறிஸ்தவ நம்பிக்கைகளுக்காக இவர் "பேரரசன் மேக்சிமினஸ்" (Emperor Maximinus) என்பவரால் பலவிதமாக துன்புறுத்தப்பட்டார். அரசனுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை செய்ய ஆயர் மறுத்துவிட்ட காரணத்திற்காகவும், கிறிஸ்துவின்மீது கொண்ட விசுவாசத்திற்காகவும் கோபங்கொண்டு, ஆயரின் வலது கண்ணை பிடுங்கி எரிந்தான். அவரது இடது முழங்காலை சிதைத்தான். அவரை சுரங்கங்களில் தள்ள உத்தரவிட்டான்.

புனித பாப்னுஷியஸ் நோய்வாய்ப்பட்டு உடல்நலம் குன்றி இறந்ததாக வரலாற்றுச் சுவடுகள் கூறுகின்றன.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா