✠ புனிதர் பஸிஃபிகஸ் ✠(St. Pacificus of San
Severino) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 24) |
✠ புனிதர் பஸிஃபிகஸ்
✠(St. Pacificus of San Severino)
✠குரு :(Priest)
✠பிறப்பு : மார்ச் 1, 1653
சான் செவரினோ, மேக்கராடா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(San Severino, Macerata, Papal States)
✠இறப்பு : செப்டம்பர் 24, 1721 (வயது
68)
சான் செவரினோ, மேக்கராடா, திருத்தந்தையர் மாநிலங்கள்
(San Severino, Macerata, Papal States)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்திபேறு பட்டம் : ஆகஸ்ட் 4,
1786
திருத்தந்தை ஆறாம் பயஸ்
(Pope Pius VI)
✠புனிதர் பட்டம் : மே 26, 1839
திருத்தந்தை பதினாறாம் கிரகோரி
(Pope Gregory XVI)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
24
புனிதர் பஸிஃபிகஸ், ஒரு இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க
திருச்சபையின் குரு ஆவார். இவர், தாம் நிகழ்த்திய அற்புதங்களின்பேரில்
பிரபலமானவர்.
"கார்லோ அன்டோனியோ டிவைனி" (Carlo Antonio Divini) எனும் இயற்பெயர்
கொண்ட இவர், 1653ம் ஆண்டு, மார்ச் மாதம், முதலாம் தேதியன்று,
"சான் செவரினோ" எனுமிடத்தில் பிறந்தார். "அன்டோனியோ மரியா
டிவைனி" (Antonio Maria Divini) இவரது தந்தை ஆவார். இவரது
தாயாரின் பெயர், "மரியேஞ்சலா புரூனி" (Mariangela Bruni) ஆகும்.
மூன்று வயதான இவர் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெற்றதும், இவருடைய
பெற்றோர் மரித்துப் போயினர். கி.பி. 1670ம் ஆண்டும், டிசம்பர்
மாதம் வரை, இவர் மிகுந்த கஷ்டங்கள் அனுபவித்தார். பின்னர்,
"மார்ச் அன்கோனா" (March of Ancona) நகரிலுள்ள சீர்திருத்தப்பட்ட
ஃபிரான்சிஸ்கன் சபையில் இணைந்து அதன் சீருடைகளைப் பெற்றார்.
மிகுந்த கஷ்டங்களினூடே படித்த இவர், கி.பி. 1678ம் ஆண்டு, ஜூன்
மாதம், 4ம் தேதியன்று, குருத்துவ அருட்பொழிவு பெற்றார். 1680ம்
ஆண்டு முதல், 1683ம் ஆண்டு வரையான காலத்தில், தமது சபையின்
புதிய உறுப்பினர்களுக்கு தத்துவ பாடம் கற்பிக்கும் பேராசிரியர்
பணியாற்றினார். இதைத் தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு
ஒரு மிஷனரியாக சுற்றியிருந்த பகுதிகளில் மறைபணிபுரிந்தார். ஆனால்,
அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நடை தடுமாற்றம் (Lameness),
செவிட்டுத் தன்மை (Deafness) மற்றும் கண்பார்வைக் குறைபாடு (Blindness)
போன்றவற்றினால் அவரால் தொடர்ந்து மறைப் பணியாற்ற இயலாமல் போனது.
பின்னர் அவர், அவர் தியான வாழ்க்கையை தொடங்கினார். அவரது
வாழ்நாள் முழுவதும் ஆழ்ந்த உடல் வேதனைகள் தொடர்ந்தாலும், அவர்
கடவுளிடம் மட்டுமே ஆறுதலையும் நிவாரணத்தையும்
தேடிக்கொண்டிருந்தார். அதிசயமான இயற்கை சக்திகள் மற்றும் உழைக்கும்
அற்புதங்களின் பரிசுகள் அவருக்கு கடவுளால் வழங்கப்பட்டிருந்தன.
அவர், ஒரு தேவதூதனின் பொறுமையுடன் நோய்களின் வேதனைகளைத்
தாங்கிக் கொண்டு, பல அற்புதங்களைச் செய்தார். மென்மேலும் கடவுளால்
ஆசீர்வதிக்கப்பட்டார்.
இவர் ஒரு நிலையான நோயாளியாக இருந்தபோதிலும், கி.பி. 1692ம் ஆண்டு
முதல் 1693ம் ஆண்டுவரை, "சான் சவரினோ" (San Severino) நகரிலுள்ள
"சான்ட மரியா டெல் கிரேஸி" கான்வென்ட்டில் (Convent of Santa
Maria delle Grazie) பாதுகாவலர் பதவியை வகித்தார். பின்னர், அங்கேயே
கி.பி. 1721ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 24ம் நாளன்று, மரித்தார்.
|
|
|