✠ புனிதர் நோட்புர்கா ✠(St. Notburga) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep 13) |
✠ புனிதர் நோட்புர்கா ✠(St. Notburga)
✠ பணியாட்கள் மற்றும் விவசாயிகளின் பாதுகாவலர் :
(Patron Saint of Servants and Peasants)
✠பிறப்பு : கி.பி. 1265
✠இறப்பு : செப்டம்பர் 13, 1313
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠முக்கிய திருத்தலம் :
ஈபென் அருகிலுள்ள தூய ரூபெர்ட்
(St. Rupert near Eben)
✠நினைவுத் திருவிழா : செப்டம்பர் 13
✠பாதுகாவல் : பணியாட்கள் மற்றும் விவசாயிகள்
புனிதர் நோட்புர்கா, மேற்கு ஆஸ்திரியாவிலுள்ள (Western
Austria) "டைரோல்" (Tyrol) மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க
புனிதர் ஆவார். "ரட்டேன்பர்க் நகர நோட்புர்கா" (Notburga of
Rattenberg) அல்லது "ஈபென் நகர நோட்புர்கா" (Notburga of Eben)
ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படும் இவர், பணியாட்கள் மற்றும்
விவசாயிகளின் பாதுகாவல் புனிதராவார்.
ரேட்டன்பேர்க்கின் பிரபுவான ஹென்றியின் (Count Henry of
Rattenberg) வீட்டில் சமையல் பணி செய்துவந்த இவர், அங்கே
மீதமாகும் உணவு வகைகளை ஏழை எளியவர்க்கு தருவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். ஆனால் அவளுடைய எஜமானியான ஓட்லியா, மீதமுள்ள
எந்த உணவையும் பன்றிகளுக்கு தரும்படி கட்டளையிட்டார். தமது
பணியைத் தொடர, நோர்புர்கா தனது சில உணவுகளை, குறிப்பாக
வெள்ளிக்கிழமைகளில் சேமிக்க ஆரம்பித்தார். அதனை ஏழைகளுக்கு
எடுத்துச் சென்று கொடுத்தார்.
இவரது வரலாற்று ஆசிரியரின் கூற்றின்படி, ஒருநாள் இவரது எஜமானன்
இவர் கொண்டுசெல்லும் பொருட்களை காண்பிக்க சொன்னார். இவர்
திறந்து காட்டியதும், அங்கே திராட்சை ரசம் (Wine) மற்றும்
புளிக்காடிக்குப் (Vinegar) பதிலாக குப்பை இருந்தது.
நோட்புர்காவின் நடவடிக்கைகள் காரணமாக, ஒட்டிலியா அவரை பணி
நீக்கம் செய்தார். ஆனால் விரைவில் ஆபத்தான நோயில் விழுந்தார்.
ஒரு தாதியாக அவருக்கு சேவை செய்த நோட்புர்கா, அவரை
நல்மரணத்திற்கு ஆயத்தம் செய்தார்.
அதன்பிறகு, "ஈபென் அம் அச்சென்சீ" (Eben am Achensee) எனும்
நகரிலுள்ள ஒரு விவசாயியிடம் பணி செய்த நோட்புர்கா, ஞாயிற்றுக்
கிழமைகளிலும், பண்டிகை தினங்களிலும் அதற்கு முன்தினம் மாலை
வேளைகளில் மட்டும் ஆலயத்துக்குச் செல்ல
அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் மாலை வேளை, அவரது எஜமானன்,
அவரை வயல் வேலைகளில் தொடர்ந்து வேலை செய்யும்படி
வற்புறுத்தினார். வேதனையுற்ற அவர், தமது அரிவாளை உயரே எரிந்து,
"எனக்கும் உமக்கும் இடையேயுள்ள பிரச்சினையை என்னுடைய இந்த
அரிவாள் நியாயந்தீர்க்கும்" என்று சொன்னார். உடனே, அவரது அந்த
அரிவாள், அந்தரத்தில் அப்படியே நின்றது.
இதற்கிடையில், இவருடைய முன்னாள் எஜமானனான பிரபு ஹென்றி,
பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தார். இவற்றிற்கெல்லாம்
காரணம், தாம் நோட்புர்காவை வேலையிலிருந்து நீக்கியதேயாகும்
என்று நம்பினார். ஆகவே, அவர் நோட்புர்காவை மீண்டும்
பணியமர்த்தினார். தமது மரணம் வரை அங்கேயே பணியாற்றிய
நோட்புர்கா, தமது மரணத்தின் சற்று முன்பு தமது எஜமானனிடம்,
தாம் மரித்ததும், தமது சடலத்தை இரண்டு எருதுகள் பூட்டிய ஒரு
மாட்டுவண்டியில் வைத்து, எருதுகள் எங்கே வண்டியை இழுத்துச்
சென்று நிற்கின்றனவோ, அங்கேயே தம்மை அடக்கம் செய்யுமாறு
வேண்டினார். அதுபோலவே அவர் மரித்ததும் அவரது சடலத்தை எருதுகள்
பூட்டிய ஒரு மாட்டுவண்டியில் வைத்து விட்டனர். எருதுகள்
வண்டியை "ஈபென்" (Eben) நகரிலுள்ள "தூய ரூபெர்ட்" (St. Rupert)
சிற்றாலயத்துக்கு இழுத்துச் சென்று நின்றன. நோட்புர்கா அங்கேயே
அடக்கம் செய்யப்பட்டார். |
|
|