✠ புனிதர் மௌரிஸ் ✠(St. Maurice) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 22) |
✠ புனிதர் மௌரிஸ்
✠(St. Maurice)
✠மறைசாட்சி : (Martyr)
✠பிறப்பு : 3ம் நூற்றாண்டு,
தேபெஸ், எகிப்து
(Thebes, Egypt)
✠இறப்பு : கி.பி. 302
அகாவ்னும், ஸ்விட்ஸர்லாந்து
(Agaunum, Switzerland)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)
காப்ட்டிக் மரபுவழி திருச்சபை
(Coptic Orthodoxy)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠பாதுகாவல் :
அல்பைன் துருப்புக்கள் (Alpine troops), படைகள், கவசப்படைகள்,
பர்கண்டியர்கள் (Burgundians), கரோலிங்கியன் வம்சம் (Carolingian
dynasty), ஆஸ்திரியா, துணிமணிகள் சாயத் தொழிலாளர்கள், கீல்வாதம்,
மெரோவிஞ்ஜியன் வம்சம் (Merovingian dynasty), இத்தாலி, சுவிட்சர்லாந்து,
சார்டினியா (Sardinia), வீரர்கள், ஜெர்மனி, நெசவாளர்கள், தூய
ரோமானிய பேரரசர்கள்
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
22
புனிதர் மௌரிஸ், கி.பி. சுமார் 250ம் ஆண்டு, எகிப்தின் மிகப்
பழமையான தேபெஸ் (Thebes) நகரில் பிறந்தார். ரோம இராணுவப் படையில்
(Roman Army) ஒரு சாதாரண சிப்பாயாக சேர்ந்த இவர், படிப்படியாக
சுமார் 6600 படை வீரர்களைக் கொண்ட 'தேபன் லிஜியன்' (Theban
Legion) என்ற படைப் பிரிவின் தலைவராக பொறுப்பேற்றார்.
எகிப்து நாட்டில் முதன்முதலில் இராணுவப் படையை உருவாக்கிய இவர்,
தன் படைவீரர்களுடன் சேர்ந்து சிலுவைப் போரை புரிந்தார். இவரின்
படைவீரர்களை, தன் படைக்கு கொடையாக தருமாறு, எதிர்படையினர்
மௌரிஸிடம் கேட்டனர். அப்படி தந்தால் வெற்றியடைய செய்வோம் என்றும்
கூறினர். ஆனால் மௌரிஸ் இதனை ஏற்க மறுத்தார். இதனால் மீண்டும்
போர் மூண்டது. மௌரிசின் படையிலிருந்த படைவீரர்கள் சிலரின் செயல்களால்,
மௌரிஸ், அப்படையை விட்டு விலக வேண்டியதாயிற்று. இவர் அப்படையிலிருந்து
விலகிய பின் படைவீரர்கள் மிகக் கடினமான ஒழுங்குகளை கடைபிடிக்க
வற்புறுத்தப்பட்டார்கள். இதனை கடைபிடிக்க மறுத்ததால், பலம்
வாய்ந்த வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதன் பிறகு இராணுவவீரர்கள்
6000 பேர், மாக்சிமில்லியனுடன் (Maxmilian) சேர்ந்து, ஜெனிவா
என்ற ஏரியின் அருகே எதிரிகளுடன் போரிட்டனர். இப்போரில்
மீண்டும் பலர் இறந்தனர்.
இதனால் இராணுவத்தில் மிகக்குறைவான பலம் வாய்ந்த வீரர்களே இருந்தனர்.
இவற்றை கண்ட மௌரிஸ், மீண்டும் இராணுவத்தில் நுழைந்தார். இராணுவ
வீரர்களுக்கு சிறப்பான பயிற்சியை கொடுத்தார். வீரர்களை
மீண்டும் திடப்படுத்தி பலமூட்டினார். அத்துடன் அவர்களுக்கு
கிறிஸ்தவ நெறியை கற்பித்து நல்ல கிறிஸ்தவர்களாகவும் வாழ
வைத்தார். இந்நிலையில் எதிரிகள் மீண்டும் படையெடுத்து வந்து
மௌரிசையும் அவரின் படைவீரர்களையும் கொன்றார்கள்.
எகிப்தின் (Egypt) "தேபேஸ்" (Thebes) நகரிலிருந்த, முழுதும்
கிறிஸ்தவ வீரர்களாலான ரோமானிய படைப் பிரிவு, "கௌல்" (Gaul)
மாகாணத்திலுள்ள "பகவுடே" (Bagaudae) இன மக்களின் கிளர்ச்சியை
கட்டுப்படுத்துவதற்காக பேரரசன் மேக்சிமியனுக்கு (Emperor
Maximian) உதவுவதற்காக அழைக்கப்பட்டது. "மோன்ட் பிளாங்க்"
(Mont Blanc) எனப்படும் பனிமலைகளினூடே செல்லும் சுவிட்சர்லாந்தின்
மூன்றாம் பெரும் பாதையான "பெரிய செயின்ட் பெர்னார்ட் பாதையை"
(St Bernard Pass) அழித்தபடி செல்லுமாறு ரோமானிய கிறிஸ்தவ படைப்
பிரிவுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டிருந்தன. போருக்கு புறப்படுமுன்,
பாகனிய கடவுள்களுக்கு பலிகளை வழங்கவும், பேரரசருக்கு மரியாதை
செலுத்தவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மௌரிஸ், தமது வீரர்களின்
இராணுவ விசுவாசத்தை ரோமிற்கு உறுதியளித்திருந்தார். கடவுளுக்கான
சேவை, மற்ற எல்லாவற்றையும் மீறியதாக அவர் கூறினார். பொறுப்பற்ற
கொலைகளில் ஈடுபடுவது என்பது, கிறிஸ்தவ வீரர்களின் புத்திக்கு
எட்டாத செயல் என்று அவர் கூறினார்.
இருப்பினும், சில உள்ளூர் கிறிஸ்தவர்களை தொந்தரவு செய்ய
மாக்சிமியன் அவர்களுக்கு உத்தரவிட்டபோது, அவர்கள் அதற்கு கீழ்படிய
மறுத்துவிட்டார்கள். சித்திரவதை என அழைக்கப்படும் இராணுவ தண்டனைக்கு
உத்தரவிட்ட மேக்சிமியன், அந்த படைப் பிரிவின் ஒவ்வொரு பத்து வீரர்களில்
ஒருவரை கொல்ல உத்தரவிட்டான். மேலும் கட்டளைகள் தொடர்ந்து வந்தன,
ஆனால், மௌரிஸால் ஊக்கமளிக்கப்பட்ட சிப்பாய்கள் மறுத்துவிட்டனர்.
இதன்காரணமாக, இரண்டாவது இராணுவ தண்டனைக்கு உத்தரவிட்டனர். சக
கிறிஸ்தவ மக்களை படுகொலை செய்ய மறுத்த கிறிஸ்தவ படைப்பிரிவின்
மருதலிப்பானது மேக்சிமியனை ஆத்திரம் கொள்ள வைத்தது. படைப்பிரிவின்
மீதமுள்ள எல்லா சிப்பிகளையும் படுகொலை செய்ய உத்தரவிட்டான். இப்படுகொலைகள்
நடந்த ஸ்விட்சர்லாந்தின் (Switzerland) ஆகுனும் (Agaunum) என்றழைக்கப்பட்ட
இடமானது, செயின்ட் மௌரிஸ் (Saint-Maurice) என்றும்,
செயின்ட் மௌரிஸ் மடாலயம் (Abbey of St. Maurice) என்றும் அறியப்படுகிறது.
|
|
|