Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் மட்டெர்னஸ் ✠(St. Maternus of Cologne)
  Aucun texte alternatif disponible.  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep 14)
✠ புனிதர் மட்டெர்னஸ் ✠(St. Maternus of Cologne)

 "டிரையர்" மற்றும் "கொலோன்" மறைமாவட்டங்களின் ஆயர் :
(Bishop of Trier and Cologne)

பிறப்பு : ----

இறப்பு : நான்காம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 14

"மட்டெர்னஸ்" (Maternus) என்றும், "இரண்டாம் மட்டெர்னஸ்" (Maternus II) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு கத்தோலிக்க புனிதராவார். இவர், "டிரையர்" (Trier) மறை மாவட்டத்தின் மூன்றாம் ஆயரும், "கொலோன்" (Cologne) மறை மாவட்டத்தின் முதலாம் ஆயருமாவார். "டோன்கெரென்" (Tongeren) மற்றும் "கொலோன்" (Cologne) மறைமாவட்டங்கள் இவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும்.

இவர், டிரையர் (Trier) மறைமாவட்டத்தின் முதலாம் ஆயரான புனிதர் "யூச்சரியஸ்" (Saint Eucharius) அவர்களை பின்பற்றியவர் ஆவார்.

ஒருமுறை, நமது முதலாம் திருத்தந்தை புனிதர் பேதுரு அவர்கள், புனித யூச்சரியஸ் அவர்களையும், அவருடன் "வலேரியஸ்" (Valerius) என்ற திருத்தொண்டரையும், துணைத் திருத்தொண்டரான மட்டெர்னசையும் "கௌல்" (Gaul) என்ற இடத்துக்கு மறை போதனை செய்வதற்காக அனுப்பினார். அவர்கள், கிழக்கு ஃபிரான்ஸின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பிராந்தியமான "அல்சாக்" (Alsace) எனும் பிராந்தியத்திலுள்ள "ரைன்" (Rhine) மற்றும் "எல்லேலும்" (Ellelum) ஆகிய இடங்களுக்கு வந்து சேர்ந்தபோது, மட்டெர்னஸ் இறந்து போனார். அவருடன் துணைக்கு சென்ற இருவரும் உடனடியாக திரும்பி, திருத்தந்தை பேதுரு அவர்களிடம் மரித்துப் போன மட்டெர்னசை உயிர்ப்பித்துத் தருமாறு மன்றாடினார்கள். புனிதர் பேதுரு அவர்களும், உடனடியாக தமது ஊழியர்களை புனிதர் யூச்சரியஸ் அவர்களுடன் அனுப்பி வைத்தார். நாற்பது நாட்கள் கல்லரையிலிருந்த மட்டெர்னஸ் உயிர்த்தெழுந்தார். பின்னர், பெரிய எண்ணிக்கையில் பிற இனத்தவர்கள் மனமாற்றம் செய்விக்கப்பட்டனர்.

"அல்சாக்" பிராந்தியங்களில் பல ஆலயங்களை நிறுவிய இம்மூவரும், அங்கிருந்து கிளம்பி, "டிரையர்" (Trier) சென்றனர். அங்கே, அதி வேகமாக மறை பரப்புப் பணிகள் நடந்தன. யூச்சரியஸ், அங்கேயே தமது மறைபரப்புப் பணிகளின் தலைமை இல்லத்தை அமைத்துக்கொண்டார்.

சுமார் இருபத்தைந்து வருடங்கள் ஆயராக பணியாற்றிய யூச்சரியஸ், டிசம்பர் மாதம் 8ம் தேதி மரித்துப்போனார். சுமார் பதினைந்து வருடங்கள் "வலேரியஸுக்கு" (Valerius) உதவியாக இருந்த மட்டெர்னஸ், அவரையும் தாண்டி "டிரையர்" மாகாணத்தின் ஆயராக பதவியேற்று சுமார் நாற்பது வருடங்கள் பணியாற்றினார். "வலேரியஸுக்கு" (Valerius) உதவியாக இருந்த காலத்திலேயே "கொலோன்" (Cologne" மற்றும் "டோன்கெரென்" (Tongeren) ஆகிய இரு மறைமாவட்டங்களைத் தோற்றுவித்தார்.

மட்டெர்னஸ், கொலோன் நகர் ஆயர்களில் மிகச் சிறந்த முதல் வரலாற்று ஆயர் என்ற பெருமையை பெற்றவர். 313ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் முதன்முதலில் பங்கெடுத்தவர். நற்செய்தியை பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினார். நற்செய்தியை நிலைநாட்ட பெரும்பாடுபட்டார். பல இன்னல்களை அடைந்தார். ரோமில், புனித பேதுருவிற்குப் பிறகு, நற்செய்தியை பரப்புவதில், அதிகம் ஆர்வம் காட்டியவர் இவர் என்று கூறப்படுகின்றது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா