Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் லோரென்ஸோ ரூயிஸ் ✠(St. Lorenzo Ruiz)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 22)
✠ புனிதர் லோரென்ஸோ ரூயிஸ் ✠(St. Lorenzo Ruiz)

 ✠
ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் மறைசாட்சியும், முதல் புனிதரும் :
(First Saint and Protomartyr of the Philippines)

பிறப்பு : கி.பி. 1600
பினோண்டோ, மணிலா, ஃபிலிப்பைன்ஸ்
(Binondo, Manila, Captaincy General of the Philippines)

இறப்பு : செப்டம்பர் 28, 1637 (வயது 3637)
நாகசாகி, ஹிசென் பிராந்தியம், டோகுகவா ஷோகுண்டே
(Nagasaki, Hizen Province, Tokugawa Shogunate)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)

முக்திபேறு பட்டம் : ஃபெப்ரவரி 18, 1981
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம் : அக்டோபர் 18, 1987
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம் :
பினோண்டோ ஆலயம், பினோண்டோ, மணிலா, ஃபிலிப்பைன்ஸ்
(Binondo Church, Binondo, Manila, Philippines)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 22

பாதுகாவல் :
ஃபிலிப்பைன்ஸ் நாடு, ஃபிலிப்பினோ மொழி பேசும் மக்கள், வெளிநாட்டு ஃபிலிப்பைன்ஸ் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பிரிக்கப்பட்ட ஏழை குடும்பங்கள், ஃ பிலிப்பைன்ஸ் இளைஞர்கள், சீன ஃபிலிப்பினோஸ், ஃபிலிப்பினோ பீட சிறுவர்கள், மணிலா உயர்மறைமாவட்டம்

புனிதர் லோரென்ஸோ ரூயிஸ், ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் வணக்கம் தெரிவிக்கப்படும் ஃபிலிப்பினோ (Filipino) புனிதரும், சீன-பிலிப்பினோ (Chinese-Filipino) ஆன இவர், ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் முதல் மறைசாட்சியும் ஆவார். ஜப்பானின் கடைசி நிலப்பிரபுத்துவ இராணுவ அரசாங்கத்தால் ஜப்பானிய கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலின்போது இவர் மறைசாட்சியாக மரித்தார்.

"மனிலாவிலுள்ள" (Manila) "பினோண்டோ" (Binondo) எனுமிடத்தில் பிறந்த இவரது தந்தை ஒரு "சீனர்" (Chinese) ஆவார். தாயார் ஒரு "ஃபிலிப்பினோ" (Filipino) ஆவார். கத்தோலிக்க பெற்றோருக்குப் பிறந்த இவர், தமது தந்தையிடம் சீன மொழியும், தாயாரிடமிருந்து "டகலோக்" (Tagalog) மொழியும் கற்றார்.

உள்ளூர் ஆலயத்தில் பீட சிறுவனாக (Altar boy) சேவை செய்த இவர், சில வருட காலம், டொமினிக்கன் (Dominican friars) துறவியரால் கல்வி கற்பிக்கப்பட்டார். இவர் மகா பரிசுத்த ஜெபமாலை மாநாட்டின் (Confraternity of the Most Holy Rosary) உறுப்பினரானார். "ரொசாரியோ" (Rosario) என்னும் ஃபிலிப்பினோ பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். இவர்களது குடும்பம், அமைதியான, ஆன்மீக மற்றும் அடக்கமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

உள்ளூர் ஆலயத்தில் எழுத்தாளராக பணியாற்றிய இவர், 1636ம் ஆண்டு, ஸ்பெயின் நாட்டினர் (Spaniards) ஒருவரை கொலை செய்துவிட்டதாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டார். லோரென்ஸோ, கப்பல் பயணத்திற்காக தயாராய் இருந்த டொமினிக்கன் துறவியர் மூவரிடம் பாதுகாப்பு வேண்டி இரைஞ்சினார். லோரென்ஸோவும் அவரது துணைவர்களும், டொமினிக்கன் துறவியரின் துணையுடன் 1636ம் ஆண்டு, ஜூன் மாதம் 10ம் தேதி, நூற்றுக்கணக்கான தீவுகளை தம்மகத்தே கொண்ட "ஒகினவா" (Okinawa) சென்றனர்.

லோரென்ஸோ ஜப்பான் சென்றடைந்த காலகட்டத்தில், "டோகுகவா ஷோகுனேட்" (Tokugawa Shogunate) இராணுவ அரசு நடந்துகொண்டிருந்தது. மறைப்பணியாளர்களனைவரும் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் எறியப்பட்டனர். இரண்டு வருடங்கள் கழித்து, அவர்கள் அனைவரும் ஜப்பான் நாட்டின் "க்யுஷு" (Kyushu) எனும் தீவிலுள்ள "நாகசாகி" (Nagasaki) பிராந்தியத்துக்கு மாற்றல் செய்து அனுப்பப்பட்டனர். அங்கே, அவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள் சொல்லி மாளாது.

1637ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி, லோரென்ஸோ மற்றும் அவரது துணைவர்கள் அனைவரும் "நிஷிஸாகா" (Nishizaka Hill) மலைக்கு இட்டுச் செல்லப்பட்டனர். அங்கே, அவர்கள் அனைவரும் ஆழ தோண்டப்பட்டிருந்த குழிகளுக்கு மேல் தலை கீழாக தொங்கவிடப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இவ்வகையான துன்புறுத்தல் மிகவும் வேதனை தருவதாக அமையும். இருப்பினும் கைதியின் இடது கை மாத்திரம் கட்டப்படாமல் விடப்பட்டிருக்கும். காரணம், வேதனை தாங்காத கிறிஸ்தவ கைதி, எந்நேரமும் தமது இடது கையை அசைத்து, தமது விசுவாசத்தை விட்டுவிடுவதாக தெரிவிக்கலாம். அப்படி தெரிவித்தால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தை விட்டுக்கொடுக்க தீர்க்கமாக மறுத்துவிட்ட லோரென்ஸோ, இரத்த இழப்பு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் சமுத்திரத்தில் தூக்கி எறியப்பட்டது.

ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான "மணிலாவுக்கு" (Manila) திருப்பி அனுப்பப்பட்ட இலத்தீன் மறைப்பணியாளர்களின்படி, ரூயிஸ் தமது மரண வேளையில் பின்வருமாறு அறிவித்தார்:

"நான் ஒரு கத்தோலிக்கன் மற்றும் முழு இருதயத்தோடும் கடவுளுக்காக மரணத்தை ஏற்றுக்கொள்கிறேன்; நான் ஆயிரம் வாழ்க்கைகளைப் பெற்றிருந்தாலும், அவை அனைத்தையும் நான் அவரிடத்தில் ஒப்புவிப்பேன்."

 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா