Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜெரோம் ✠(St. Jerome)
  Limage contient peut-tre : une personne ou plus et personnes assises  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep - 30)
✠ புனிதர் ஜெரோம் ✠(St. Jerome)

துறவி, மறைவல்லுநர் :
(Hermit and Doctor of the Church)

பிறப்பு : கி.பி. சுமார் 347ம் ஆண்டு
ஸ்ட்ரிடோன் (Stridon)

இறப்பு : கி.பி. 420ம் ஆண்டு
பெத்லகேம் (Bethlehem)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodoxy)

முக்கிய திருத்தலங்கள் :
தூய மரியாள் பேராலய திருத்தலம், ரோம், இத்தாலி
(Basilica of Saint Mary Major, Rome, Italy)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 30

சித்தரிக்கப்படும் வகை :
சிங்கம், கர்தினால், சிலுவை, மனித மண்டையோடு, ஊதுகொம்பு, ஆந்தை, நூல் மற்றும் எழுது பொருட்கள்

பாதுகாவல் :
தொல்பொருளியல்; ஆவணக் காப்பாளர்கள்; விவிலிய அறிஞர்கள்; நூலகர்கள்; நூலகங்கள்; பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள்; மாணவர்கள்; மொழிபெயர்ப்பாளர்கள்

குறிப்பிடத்தகுந்த படைப்புகள் :
வுல்காத்தா (Vulgate) - இலத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பு

புனிதர் ஜெரோம், ஒரு கிறிஸ்தவ குருவும், ஒப்புரவாளரும், இறையியலாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர் ஆவார். திருவிவிலியத்தின் பெரும்பான்மைப் பகுதிகளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததிலும், நற்செய்திகளைப் பற்றின இவர் எழுதின கருத்துக்களிலும் இவர் பரவலாக அறியப்படுகின்றார். இவரது இலத்தீன் மொழிபெயர்ப்பு, "வுல்காத்தா" (Vulgate) என்று அறியப்படுகின்றது. அவரது எழுத்துக்களின் பட்டியல் மிகவும் விரிவானது ஆகும். ரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கன் ஒன்றியம், மற்றும் லூதரனியம், ஆகிய திருச்சபைகள் இப்புனிதரை திருச்சபையின் மறைவல்லுனராக அங்கீகரித்துள்ளன. அன்னாரது நினைவுத் திருநாள் செப்டம்பர் மாதம் 30ம் நாள் ஆகும்.

ரோமப் பேரரசின் பிராந்திய நாடுகளான "டல்மேஷியா" (Dalmatia) மற்றும் "பன்னோனியா" (Pannonia" ஆகியவற்றின் எல்லைப் பகுதியான "எம்மோனா" (Emona) எனும் இடத்தின் அருகிலுள்ள "ஸ்ட்ரிடோன்" (Stridon) எனும் கிராமத்தில், நான்காம் நூற்றாண்டின் மத்தியில் பிறந்த இவரது இயற்பெயர், "யூசிபஸ் ஸோஃப்ரோனியஸ் ஹியேரோநிமஸ்" (Eusebius Sophronius Hieronymus) ஆகும். இவரது தாய்மொழி, "லிரியன் டயலேக்ட்" (Illyrian dialect) ஆகும். கி.பி. 360366 வரை அவர் திருமுழுக்கு பெறவில்லை என அறியப்படுகிறது.

சொல்லாட்சி மற்றும் தத்துவ ஆய்வுகளைக் கற்க ரோம் சென்ற ஜெரோம், அங்கே இலக்கண ஆசிரியர் "ஏலியஸ் டொநேடஸ்" (Aelius Donatus) என்பவரிடம் கற்றார். பின்னர், அங்கேயே இலத்தீன் மற்றும் சில கிரேக்க மொழிகளையும் கற்றார். ரோம் நகரில் கற்ற பின்னர், இன்னும் அதிகம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நாடுகளுக்குச் சென்றார். இலத்தின், கிரேக்கம், எபிரேயம் ஆகிய மொழிகளில் புலமை அடைந்தார்.

378 அல்லது 379ம் ஆண்டு "அந்தியோக்கியா" (Antioch) திரும்பிய ஜெரோம், தமது 39வது வயதில் "ஆயர் பௌலினஸ்" (Bishop Paulinus) என்பவரிடம் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அதன்பின்னர், "கான்ஸ்டண்டிநோபில்" (Archbishop of Constantinople) பேராயரான புனிதர் "கிரகோரியிடம்" (Gregory of Nazianzus) மறைநூல்களை ஆய்வு செய்வதற்காகவும் கற்பதற்காகவும் "கான்ஸ்டண்டிநோபில்" சென்றார். அங்கே இரண்டு வருட கற்றலின் பின்னர் ரோம் திரும்பிய இவர், திருத்தந்தை "முதலாம் டமாஸ்கஸ்" (Pope Damasus I) மற்றும் முன்னணி கிறிஸ்தவர்களின் செயலாளராக பணியாற்றினார்.

ரோமில் பல முக்கிய பணிகள் இவருக்கு தரப்பட்டன. அவர் புதிய ஏற்பாட்டின் கிரேக்க கையெழுத்துப்பிரதிகளை அடிப்படையாகக் கொண்ட லத்தீன் பைபிளின் திருத்தங்களை மேற்கொண்டார். ரோம் நகரில் பயன்படுத்தப்பட்டு வந்த "சங்கீதங்கள்" (திருப்பாடல்கள்) அடங்கிய "துதிப்பாடல்" (Psalter) புத்தகத்தை, ஒரு கிரேக்க பதிப்பான "எபிரேய விவிலியம்" (Hebrew Bible) அல்லது பழைய ஏற்பாடு எனப்படும் "செப்டுவாஜின்ட்" (Septuagint) அடிப்படையில் புதுப்பித்தார். லத்தீன் வுல்கேட் பைபிளைப் பற்றி நிறைய விஷயங்களை மொழிபெயர்க்க பல வருடங்கள் எடுத்துக்கொண்டதை அவர் உணரவில்லை என்றாலும், அது அவருடைய மிக முக்கியமான வாழ்நாள் சாதனையாக அமைந்தது.

385ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், தமது சகோதரரான "பௌலினியன்" (Paulinian) மற்றும் பௌலா" மற்றும் "யூஸ்டோசியம்" (Paula and Eustochium) மற்றும் நண்பர்கள் புடைசூழ ரோம் நகரை விட்டு "அந்தியோக்கியா" திரும்பினார். அவர்கள் தமது வாழ்க்கையை புனித பூமியில் முடித்துக்கொள்ள தீர்மானித்திருந்தனர். 385ம் ஆண்டின் குளிர்காலத்தில் ஜெரோம் அவர்களது ஆன்மீக ஆலோசகராக செயல்பட்டார். அந்தியோகியாவின் ஆயரான "பவுலினசுடன்" (Bishop Paulinus) இணைந்த இவர்கள், ஜெருசலேம், பெத்லகேம், கலிலேயா ஆகிய புனித இடங்களுக்குச் சென்றனர். பின்னர் எகிதுக்குச் சென்றனர்.

பெத்லகேமுக்கு அருகில் 420ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30ம் தேதி மரித்த ஜெரோம், முதலில் பெத்லகேம் நகரில் அடக்கம் செய்யப்பட்டாலும், பின்னர் இவரது திருப்பண்டங்கள், ரோம் நகருக்கு எடுத்து வரப்பட்டு, தூய மரியாள் பேராலய திருத்தலத்தில் (Santa Maria Maggiore) அடக்கம் செய்யப்பட்டது.
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா