Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஜனுவாரியஸ் ✠(St. Januarius)
  Limage contient peut-tre : 1 personne  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 19)
✠ புனிதர் ஜனுவாரியஸ் ✠(St. Januarius)

 பெனவென்ட்டோ ஆயர் மற்றும் மறைசாட்சி :
(Bishop of Benevento and Martyr)

பிறப்பு : 3ம் நூற்றாண்டு
பெனவென்டோ அல்லது நேப்பிள்ஸ், கம்பானியா, ரோமப் பேரரசு
(Benevento or Naples, Campania, Roman Empire)

இறப்பு : கி.பி. 305
பொஸ்ஸுஒலி, கம்பானியா
(Pozzuoli, Campania)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலங்கள் :
நேப்பிள்ஸ் பேராலயம், இத்தாலி, அதிமதிப்பு மிக்க திருஇரத்த ஆலயம், லிட்டில் இத்தாலி, மன்ஹாட்டன், நியு யார்க் நகரம்
(Naples Cathedral, Italy and the Church of the Most Precious Blood, Little Italy, Manhattan, New York City.)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 19

பாதுகாவல் :
இரத்த வங்கிகள்; நேப்பிள்ஸ்; எரிமலை வெடிப்புகள்

புனிதர் ஜனுவாரியஸ், தமது பதினைந்தாவது வயதிலேயே தமது சொந்த ஊரின் பங்கான "பெனவென்டோ" (Benevento) நகரிலேயே குருத்துவம் பெற்றார். தமது இருபதாவது வயதிலேயே நேப்பிள்ஸ் நகரின் ஆயராக அருட்பொழிவு பெற்றவர் ஜனுவாரியுஸ். அப்போது, 'ஜூலியானா' மற்றும் 'புனித சோஸ்ஸியஸ்' (Juliana of Nicomedia and Saint Sossius) ஆகியோரின் நட்பைப் பெற்றார்.

இவரை மறைசாட்சி எனவும் புனிதர் எனவும் கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் ஏற்கின்றன. இவரின் வாழ்வைக் குறித்த சமகாலத்து குறிப்புகள் ஏதுமில்லை எனினும் பிற்காலத்தையக் குறிப்புகள் இவர் பேரரசன் "டயக்லேஷியன்" (Emperor Diocletian) துன்புறுத்துதலின்போது கொல்லப்பட்டார் என்பர்.

"டயக்லேஷியன்" (Emperor Diocletian) பேரரசனின் சுமார் ஒன்றரை வருடகால நீண்ட கிறிஸ்தவ துன்புறுத்தல்களின் போது, ஆயர் ஜனுவாரியஸ் கிறிஸ்தவர்களை மறைத்து வைத்து அவர்களைப் பாதுகாத்தார் என்பர். ஒருமுறை, தமது நண்பரான 'புனித சோஸ்ஸியஸ்' (Saint Sossius) அவர்களைக் காண சிறைச் சாலைக்கு சென்றிருந்த போது, துரதிர்ஷ்டவசமாக இவரும் கைது செய்யப்பட்டார். அங்கே, அவரும் அவரது சகாக்களும் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இவர் நேப்பிள்ஸ் நகரின் பாதுகாவலராவார். இவரின் குருதி என கத்தோலிக்கரால் நம்பப்படும் திண்மம் (திடப்பொருள்) நேப்பிள்ஸ் மறைமாவட்டப் பேராலயத்தில் ஒரு வெள்ளிப் பெட்டிக்குள் ஏறக்குறைய 12 செ.மீ. அகலமுடைய இரண்டு பளிங்குக் கண்ணாடிக் குப்பிகளுக்குள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வோரு ஆண்டும் மூன்று முறை, இது நீர்மமாக (திரவமாக) மாறும் காட்சியினைக்காண மக்கள் பலர் கூடுகின்றனர்.

 
 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா