✠ புனிதர் கய் ✠(St. Guy of Anderlecht) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep 12) |
✠ புனிதர் கய் ✠(St. Guy of Anderlecht)
✠ அன்டர்லேச்ட் நகரின் எளிய மனிதன் :
(The Poor Man of Anderlecht)
✠பிறப்பு : கி.பி. 950
✠இறப்பு : கி.பி. 1012
அன்டர்லேச்ட், பெல்ஜியம்
(Anderlecht, Belgium)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠பாதுகாவல் :
அன்டர்லேச்ட் நகர் (Anderlecht), பெல்ஜியம் (Belgium), வெறி
நாய்களுக்கு எதிராக, நாய்க்கடிக்கு எதிராக, மணமாகாத ஆடவர், வலிப்பு
நோயாளிகள், கொம்புகள் கொண்ட மிருகங்கள், கூலி வேலையாட்கள்,
வெளிப்புற கட்டிடங்களின் பாதுகாவல், தொழுவம், கொட்டகை, உழைக்கும்
குதிரைகள், தேவாலயங்களின் புனிதப் பாத்திரங்கள் மற்றும் அங்கிகள்
முதலானவைகளின் பொறுப்பாளர்.
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 12
"கைடோ" (Guido) என்றும், "கைடோன்" (Guidon) என்றும், "லகேன்
நகர வை" (Wye of Lken) என்றும் அழைக்கப்படும் புனிதர் "கய்",
ஒரு கிறிஸ்தவ புனிதர் ஆவார். இவர், பொதுவாக, "அன்டர்லேச்ட்
நகரின் எளிய மனிதன்" (Poor Man of Anderlecht) என்றும்
அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
ஏழைப் பெற்றோருக்குப் பிறந்த புனிதர் "கய்", "லகேன்" (Laken)
நகரிலுள்ள அன்னை மரியாளின் தெய்வ இல்லத்தின் புனிதப்
பாத்திரங்கள், அங்கிகள் முதலானவைகளின் பொறுப்பாளர் பணியை
ஏற்கும்வரை விவசாய வாழ்க்கையே வாழ்ந்தார். ஆலயத்தை பெருக்கிச்
சுத்தப்படுத்துதல், திருப்பலி பீடத்தை அலங்கரித்தல், திருப்பலி
பீடத்துக்கான துணிமணிகள் மற்றும் மத குருமார்களின் உடைகளைப்
பராமரித்தல், திருப்பலி பூஜை மற்றும் மாலை நேர செபங்களுக்காக
ஆலய மணியையடித்தல், ஆலயத்தில் செய்யப்படும் அலங்காரம் மற்றும்
பூக்கள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளை செய்துவந்தார்.
மேற்கண்ட ஆலய பணிகளை, ஒரு வணிக முயற்சியில் முதலீடு செய்ய
தூண்டப்படும்வரை செய்துவந்தார். ஒருமுறை, அவர் முதலீடு செய்த
சரக்குக் கப்பல் துறைமுகத்தில் மூழ்கியபோது, தமது
பேராசைக்காகவே தாம் தண்டிக்கப்பட்டதாக என்று "கய்" நம்பினார்.
நோன்பு மற்றும் பரிகார முயற்சியாக முதலில் ரோம் நகருக்கு
திருயாத்திரை சென்றார். பின்னர், "எருசலேம்" (Jerusalem)
நகரில் பிற திருயாத்திரிகர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்ற
சென்றார். அங்கிருந்து தமது சொந்த ஊருக்கு திரும்பும் வழியில்
கய் மரித்தார்.
புனிதர் கய், "அன்டர்லேச்ட்" நகர் (Anderlecht), பெல்ஜியம்
(Belgium), வெறி நாய்களுக்கு எதிராக, நாய்க்கடிக்கு எதிராக,
மணமாகாத ஆடவர், வலிப்பு நோயாளிகள், கொம்புகள் கொண்ட
மிருகங்கள், கூலி வேலையாட்கள், வெளிப்புற கட்டிடங்களின்
பாதுகாவல், தொழுவம், கொட்டகை, உழைக்கும் குதிரைகள்,
தேவாலயங்களின் புனிதப் பாத்திரங்கள், அங்கிகள் முதலானவைகளின்
பொறுப்பாளர் ஆகியவற்றின் பாதுகாவலர் ஆவார்.
இவரது கல்லறை, ஒரு குதிரை அதனை உதைத்தபோது காணப்பட்டது என்று
கூறப்படுகின்றது. 1914ம் ஆண்டு, முதல் உலகப் போர்
துவங்கும்வரை, "பிரபான்ட்" (Brabant) நகரின் குதிரை வண்டி
ஓட்டுனர்கள், "அன்டர்லேச்ட்" (Anderlecht) நகருக்கு
வருடாவருடம் திருயாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். |
|
|