Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் முதலாம் கிரகோரி ✠(St. Gregory I)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 03)
✠ புனிதர் முதலாம் கிரகோரி ✠(St. Gregory I)

64வது திருத்தந்தை/ மறைவல்லுனர் :
(64th Pope/ Doctor of the Church)

பிறப்பு : கி.பி. 540
ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு
(Rome, Byzantine Empire)

இறப்பு : மார்ச் 12, 604 (அகவை 64)
ரோம் நகரம், பைசன்டைன் பேரரசு
(Rome, Byzantine Empire)

ஏற்கும் சமயம் :
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
லூதரனியம்
(Lutheranism)

நினைவுத் திருவிழா : செப்டம்பர் 3

பாதுகாவல் :
இசையமைப்பாளர்கள், பாடகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்

திருத்தந்தை முதலாம் கிரகோரி, பொதுவாக புனிதர் பெரிய கிரகோரி (Saint Gregory the Great) என்று அழைக்கப்படுகிறார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 590ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 3ம் தேதி முதல் தமது மரணம் வரை ஆட்சியில் இருந்தவர் ஆவார். இவர், தமக்கு முன்பிருந்த திருத்தந்தையர்களைக் காட்டிலும் தமது இலக்கிய படைப்புகளுக்காக மிகவும் அறியப்படுகின்றார். ரோம் நகரில், பேகன் இன மக்களை பெரிய அளவில் கிறிஸ்தவ மதத்திற்கு மனமாற்றம் செய்ய தூண்டும் பணியில் புகழ் பெற்றவர் ஆவார்.

இவர் கிறிஸ்தவ வழிபாட்டினை சீரமைத்து ஒழுங்கு படுத்தியதால் நடுக்காலம் முழுவதும் இவர் கிறிஸ்தவ வழிபாட்டின் தந்தை என அழைக்கப்பட்டார்.

இவரே துறவற மடங்களில் வாழ்ந்த அனுபவமுடைய முதல் திருத்தந்தை ஆவார். இவர் மறைவல்லுநராகவும் (Doctor of the Church), இலத்தீன் தந்தையர்களுல் (Latin Fathers) ஒருவராகவும் கருதப்படுகின்றார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் மற்றும் சில லூதரனிய திருச்சபைகளில் இவர் புனிதர் என ஏற்கப்படுகின்றார். இவர் இறந்த உடனேயே மக்களின் பலத்த ஆதரவால் புனிதர் பட்டம் பெற்றார்.

எதிர் சீர்திருத்தத் திருச்சபையினைச் (Protestant reformer) சேர்ந்த "ஜான் கேல்வின்" (John Calvin) இவரைப் பற்றிக் கூறும்போது, இவரே கடைசியாக இருந்த நல்ல திருத்தந்தை எனக்கூறுகின்றார்.

இவரது சரியான பிறந்த தேதி தெரியவில்லையெனினும், இவர் பிறந்த வருடம் 540 என அறியப்படுகிறது. இவரது பெற்றோர் இவருக்கு "கிரகோரியஸ்" (Gregorius) என பெயரிட்டனர். திருச்சபைக்கு நெருங்கிய தொடர்புகலுள்ள "பேட்ரிஷியன்" (Patrician) குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை "கோர்டியானஸ்" (Gordianus) "அதிகார சபை அங்கத்தினராகவும்" (Senator) பின்னர், ரோம் நகரின் நிர்வாக அலுவலராகவும் (Prefect) இருந்துள்ளார். கிரகோரியின் தாயார் "சில்வியா" (Silvia) ஆவார்.

கல்வியில் சிறந்த கிரகோரி, இலக்கணம், அணியிலக்கணம், அறிவியல், சட்டம், சரித்திரம், கணிதம், சங்கீதம் ஆகியவற்றில் சிறப்பான தேர்வு கண்டிருந்தார்.

கிரகோரியின் தந்தையின் மரணத்தின் பின்னர், இவர் தமது குடும்ப இல்லத்தை துறவற மடமாக மாற்றி, அதனை அப்போஸ்தலர் புனிதர் ஆண்ட்ரூசுக்கு (Apostle Saint Andrew ) அர்ப்பணித்தார். (கிரகோரியின் மரணத்தின் பின்னர், அது "புனித கிரகோரி மேக்னோ அல் செலியோ" (San Gregorio Magno al Celio) என்று மறு அர்ப்பணம் செய்யப்பட்டது.)

கிரகோரி கோப குணம் கொண்டவர் என்றும் குற்றங்களையும் பாவங்களையும் எப்போதுமே மன்னிக்கும் குணமற்றவர் என்றும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு, ஒருமுறை மரணப் படுக்கையிலிருந்த துறவி ஒருவர், தாம் முன்னர் ஒருமுறை, மூன்று தங்கத் துண்டுகளை திருடிய குற்றத்துக்காக பாவமன்னிப்பு வேண்டினார். கிரகோரியோ, அந்த துறவியை நண்பர்களற்று தன்னந்தனியாக மரிக்கும் நிலைக்கு தள்ளினார். அவரது உடலையும், தங்கக் காசுகளையும் ஒரு உரக்குவியலில் எரியச் சொன்னார். உன் தங்கக் காசுகளை நீயே உன் நரகத்துக்கு கொண்டுபோ என்றார். பாவத்துக்கான தண்டனைகள், ஒரு மனிதனின் மரணப்படுக்கையிலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என கிரகோரி நம்பினார். இவ்வளவு செய்த கிரகோரி, அந்த துறவியின் மரணத்தின் பின்னர், இறுதித் தீர்ப்பில் உதவுவதற்காக, அவருக்காக 30 திருப்பலிகளை நிறைவேற்றினார்.

கிரகோரி, துறவு வாழ்க்கையில் ஆழ்ந்த மதிப்பு வைத்திருந்தார். ஒரு துறவி, இறைவனின் பார்வையை தீவிரமாக தேடிச் செல்பவராக இருக்கவேண்டும் என நினைத்தார்.

கி.பி. 604ம் ஆண்டு, மார்ச் மாதம், 12ம் தேதி மரித்த திருத்தந்தை முதலாம் கிரகோரி, தூய பேதுருவின் பேராலயத்தில் (St. Peter's Basilica) அடக்கம் செய்யப்பட்டார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா