✠ புனிதர் ஜெரார்ட் ✠(St. Gerard of Csanad) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 24) |
✠ புனிதர் ஜெரார்ட் ✠(St.
Gerard of Csanad)
✠ துறவி/
ஆயர்/ மறைசாட்சி :
(Monk, Bishop and Martyr)
✠பிறப்பு : ஏப்ரல் 23, 977
வெனிஸ், வெனிஸ் குடியரசு
(Venice, Republic of Venice)
✠இறப்பு : செப்டம்பர் 24, 1046
பூடா, ஹங்கேரி அரசு
(Buda, Kingdom of Hungary)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠புனிதர்பட்டம் : கி.பி. 1083
திருத்தந்தை 7ம் கிரகோரி
(Pope Gregory VII)
✠பாதுகாவல் :
ஹங்கேரி, புடாபெஸ்ட் நாடு
(Hungary, Budapest)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
24
புனிதர் ஜெரார்ட், ஹங்கேரி அரசிலுள்ள (Kingdom of Hungary)
"கஸநாட்" (Csanád) எனும் மறைமாவட்டத்தின் முதல் ஆயர் ஆவார்.
இவருடைய தந்தையின் பெயரும் ஜெரார்ட் (Gerard) ஆகும். இவரது
தாயார் கேதரின் (Catherine) ஆவார். மூன்று வருட நீண்ட
காத்திருப்பின் பின்னர், இவர் புனிதர் ஜார்ஜ் (George)
அவர்களின் நினைவு நாளன்று (23 ஏப்ரல்) பிறந்ததால் இவரது
திருமுழுக்குப் பெயர் ஜார்ஜ் (George) என்றானது. ஒரு
திருப்பயணத்தின்போது மரணமடைந்த இவரது தந்தையின் நினைவாக இவரது
பெயர் ஜெரார்ட் என்று மாற்றப்பட்டது.
"ஜெரார்ட்" அல்லது "ஜெரார்ட் சாக்ரேடோ", கி.பி. 1030ம் ஆண்டு
முதல் தமது மரணம் வரை ஹங்கேரி அரசிலுள்ள "கசானாட்" (Csanad)
என்ற மறைமாவட்டத்தின் முதலாம் ஆயர் ஆவார். இவர், வெனிஷிய
உயர்குடியில் பிறந்தவர். ஐந்து வயதில் மிகவும் மோசமாக
நோய்வாய்ப்பட்ட இவர், "பெனெடிக்ட் சான் ஜியார்ஜியோ மடாலயம்"
(Benedictine San Giorgio Monastery) அனுப்பப்பட்டார். அங்கே
அவர் துறவியர்களுக்குரிய கல்வியை சிறப்புறக் கற்றார். அத்துடன்
இலக்கணம், இசை, தத்துவம் மற்றும் சட்டம் ஆகியவையையும் கற்றுத்
தேர்ந்தார்.
கி.பி. 1020ம் ஆண்டு, புனித பூமி செல்வதற்காக திருப்பயணம்
மேற்கொண்ட ஜெரார்ட் வெனிஸ் நகர் விட்டு கிளம்பினார். ஆனால்,
வழியில் "இஸ்ட்ரியா" (Istria) எனும் இடத்தில் நிலைகொண்ட
புயலால் அவர் பயணத்தை தொடர இயலாமல் போனது. அவர் ஹங்கேரி
அரசுக்கு செல்ல முடிவெடுத்தார். அங்கே, பெக்ஸ் மறைவாட்ட ஆயர்
(Bishop of Pécs) "மௌரஸ்" (Maurus) மற்றும் ஹங்கேரியின் அரசர்
முதலாம் ஸ்டீபன் (Stephen I of Hungary) ஆகியோர் அவரை
திருப்பயணம் தொடர வேண்டாமென சமாதானப்படுத்தினர். அத்துடன்,
அவரது மறை போதனை ஹங்கேரியர்களை மனம் மாற்ற தீவிரப்படுத்தும் என
நம்பினார்.
கி.பி. சுமார் 1030ம் ஆண்டு, அரசர் முதலாம் ஸ்டீபன், ஜெரார்டை
புதிதாக உருவாக்கப்பட்ட "கசானாட்" (Diocese of Csanád) மறை
மாவட்டத்திற்கு ஆயராக நியமித்தார். ஹங்கேரிய மொழி பேசத்
தெரிந்த "பெனடிக்டின்" துறவிகள் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு
மறைபோதனை செய்ய ஜெரார்டுக்கு உதவினர்.
வெனிஸ் நகர் ஆயர் ஹங்கேரி நாட்டு அரசருக்கு பலவிதங்களில்
உதவினார். அதனால் புனித ஜெரார்ட் வெனிஸ் நகர ஆயருக்கு
மறைமாவட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். பின்னர்
ஹங்கேரி நாட்டு அரசர் புனித ஸ்டீபனின் மகன் வெனிஸ் நகர்
பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, அவருக்கும், படிப்பிற்கு
தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். ஹங்கேரி நாட்டில்
கிறிஸ்தவம் வளர்வதற்கு அந்நாட்டு அரசர் புனித ஸ்டீபனிற்கும்
பெரும் உதவியாக இருந்தார்.
ஹங்கேரியின் அரசர் "முதலாம் ஸ்டீபன்" (Stephen I of Hungary),
1038ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 15ம் நாளன்று, மரணமடைந்தார்.
அவரது மரணத்தின் பின்னர், அவரது மருமகன் "பீட்டர் ஆர்சியேலொ"
(Peter Orseolo) முடி சூடிக்கொண்டார். ஆனால், மூன்று
வருடங்களின் பின்னர், 1041ல் பீட்டர் முடி துறந்தார். அவருக்கு
பின்னே ஆட்சிக்கு வந்த "சாமுவேல் அபா" (Samuel Aba), பல
பிரபுக்களை சுட்டுக்கொன்றான். ஒருமுறை, கசானாட் நகருக்கு
விஜயம் செய்த "சாமுவேல் அபா," தேவாலயத்தில் "உயிர்த்தெழுந்த
ஞாயிறன்று" (Resurrection) திருப்பலி நிகழ்த்திக்கொண்டிருந்த
ஆயர் ஜெரார்டிடம், தமது தலையில் கிரீடம் அணிவிக்க
உத்தரவிட்டார். ஆனால் அதற்கு ஜெரார்ட் பணியவில்லை. ஆனால்,
அரசனுடன் உடன் சென்றிருந்த பிற ஆயர்கள் அரசனின் ஆணைப்படி
அவனுக்கு முடிசூட்டினர். தமது பிரசங்கத்திற்காக வெளியே சென்ற
ஜெரார்ட், அரசன் பிறரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவன் என்றும்,
அவன் தலையில் உள்ளது கிரீடமல்ல, மாறாக அது "ஏமாற்றும் பட்டயம்"
என்று பிரசங்கித்தார்.
கி.பி. 1044ம் ஆண்டு, புனித ரோமப்பேரரசன் மூன்றாம் ஹென்றி
ஹங்கேரியின்மீது படையெடுத்து வந்து, போரிட்டு "சாமுவேல் அபா"வை
தோற்கடித்ததாகவும், "பீட்டர் ஆர்சியேலொ"வை மீண்டும் பதவியில்
அமர்த்தியதாகவும் சரித்திரம் கூறுகிறது. ஜெரார்ட் இறக்கும் வரை
வெனிஸ் மற்றும் ஹங்கேரி நாட்டு மக்களுக்காக பெரிதும் உழைத்து
மறைப்பணியை ஆற்றியுள்ளார்.
மறைசாட்சியாக ஜெரார்ட் மரித்ததற்கான வெவ்வேறு காரணங்கள்
கூறப்படுகின்றன. அவற்றிலொன்று, அவர், கல்லெறிந்து, ஈட்டியால்
குத்தப்பட்டு, அவரது உடல் "தன்யூப்" நதியின் ஒரு குன்றில்
இருந்து எறியப்பட்டதாக கூறுகிறது. மற்றொன்று, அவர் ஒரு இரு
சக்கர வண்டியில் கட்டி இருத்தப்பட்டு "புதா" (Buda) என்ற மலை
உச்சியிலிருந்து தள்ளி உருட்டப்பட்டதாகவும், பின்னரும் அவர்
உயிருடன் இருந்ததால் சாகும்வரை அடித்தே கொல்லப்பட்டதாகவும்
கூறுகிறது.
இவரது மரணத்தின் பின்னர், அம்மலையானது "கெல்லர்ட் ஹில்"
(Gellert Hill) என்று பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.
|
|
|