✠ புனிதர் யூலோஜியஸ் ✠(St. Eulogius of
Alexandria) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep 13) |
✠ புனிதர் யூலோஜியஸ்
✠(St. Eulogius of Alexandria)
✠ஆயர், ஒப்புரவாளர் :
(Bishop and Confessor)
✠பிறப்பு : தெரியவில்லை
சிரியா (Syria)
✠இறப்பு : செப்டம்பர் 13, 608
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
13
புனிதர் யூலோஜியஸ், கி.பி. 580ம் ஆண்டு முதல் 608ம் ஆண்டுவரை
கிரேக்க தந்தையராக (Greek Patriarch) இருந்தவர் ஆவார். ரோமன்
கத்தோலிக்க திருச்சபையும், கிழக்கு மரபுவழி திருச்சபையும் இவரை
புனிதராக ஏற்கின்றன. இவரது நினைவுத் திருநாள், செப்டம்பர் மாதம்
13ம் தேதியாகும்.
அவர் பல கட்டங்களில் ஒரு வெற்றிகரமான மோனோபிஸிடிச (Monophysitism)
கொள்கைகளுக்கு ஆதரவான போராளியாக இருந்தார். இவர், திருத்தந்தை
பெரிய கிரகோரியின் (Pope Gregory the Great) நெருங்கிய நண்பராவார்.
திருத்தந்தையுடனான தொடர்பிலுமிருந்தார். அதன் காரணமாக, திருத்தந்தையின்
மரியாதை மற்றும் பாராட்டின் பல கவர்ச்சிகரமான வெளிப்பாடுகளையும்
பெற்றார்.
யூலோஜியஸ், ஆதி கிறிஸ்தவ கொள்கையான நோவாஷியன் (Novatians)
கொள்கைகளை மறுத்தார். அவருடைய மறைமாவட்டத்தில் இன்றளவும் இருக்கும்
பண்டைய மதத்தைச் சேர்ந்த சில சமுதாயங்கள், நெஸ்டோரியஸ்
(Nestorius), மற்றும் யூடிசஸ் (Eutyches) இருவருக்கும் எதிராக,
கிறிஸ்துவின் இரண்டு இயல்புகளின் ஹைப்போஸ்டேடிக் (hypostatic)
ஒற்றுமையை நிரூபித்தன. திருத்தந்தை பெரிய கிரகோரி, யூலோஜியஸ்
சத்தியத்தின் குரல் என்றும், அவர் வாழ்வது அவசியம் என்றும் அவரை
அங்கீகரித்தார் என்றும் கர்தினால் பாரோனியஸ் (Cardinal
Baronius) கூறுகிறார்.
அலெக்ஸாண்டிரியா திருச்சபையில், வாழ்வு மற்றும் இளமை வீரியத்தை
சுருக்கமாகக் கூறுவதற்கான சந்தர்ப்பத்தை அவர் மறுபடியும் உருவாக்கினார்.
"செவேரியன்ஸ்" (Severians), "தியோடோசியன்ஸ்" (Theodosians),
"கைனைட்ஸ்" (Cainites) மற்றும் "அசெபாலி" (Acephali) உள்ளிட்ட
பல்வேறு மோனோபிஸிடிச (Monophysites) கொள்கைகளின் வர்ணனைகள் மற்றும்
மேற்கண்ட பணிகளைத் தவிர்த்து, திருத்தந்தை முதலாம் லியோவைப்
(Pope Leo I) பாதுகாப்பதற்காக பதினொரு உரையாடல்களையும்,
நான்காம் போது ஆலோசனை சபையையும் (Council of Chalcedon),
கிறிஸ்துவின் ஜீவ சத்தியத்தை மறுதலித்த அக்நோடே (Agnoetae)
கொள்கைகளுக்கெதிராக அவர் எழுதி திருத்தந்தை பெரிய கிரகோரியிடம்
கையளித்திருந்த கையேடுகளையும் அவர் விட்டுவிட்டார். ஒரு மறையுரை
பிரசங்கம் மற்றும் ஒரு சில துண்டுகள் தவிர்த்து, யூலோஜியஸ் எழுதிய
அனைத்து எழுத்துக்களும் அழிந்துவிட்டன. |
|
|