Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் எல்ஸீர் ✠(St. Elzéar of Sabran)
  Limage contient peut-tre : 1 personne, intérieur  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 27)
✠ புனிதர் எல்ஸீர் ✠(St. Elzéar of Sabran)
 
 ஃபிரான்சிஸ்கன் சபை துறவி :
(Tertiary of the Franciscan Order)

பிறப்பு : கி.பி. 1285
செயின்ட்-ஜீன்-டி-ராபியன்ஸ் கோட்டை, ப்ரோவென்ஸ், தெற்கு பிரான்சில் உள்ள கப்ரீரெஸ்-டி'ஐகிஸ்
(The Castle of Saint-Jean-de-Robians, Near Cabrires-d'Aigues in Provence, Southern France)

இறப்பு : செப்டம்பர் 27, 1323
பாரிஸ், பிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 27

புனிதர் எல்ஸீர், ஒரு ஃபிரான்சிஸ்கன் சபை துறவியும், ஆட்சியாளரும், தூதரும், இராணுவ தலைவருமாவார்.

கி.பி. 1285ம் ஆண்டு, தென்ஃபிரான்ஸின் (Southern France) "ப்ரோவென்ஸ்" (Provence) மாகாணத்தின் "செயின்ட்-ஜீன்-டி-ராபியன்ஸ் கோட்டையில்" (The Castle of Saint-Jean-de-Robians) பிறந்த எல்ஸீர், தமது இளமை காலத்தில், "மார்சேயில்" (Marseille) நகரிலுள்ள "புனிதர் விக்டர் மடாலயத்திலே" (Abbey of St. Victor), அதன் மடாதிபதியான (Abbot) தமது மாமன் வில்லியம் (William of Sabran) என்பவரது மேற்பார்வையின் கீழே, கிறிஸ்தவ விசுவாசத்திலும், அறிவியலிலும் முழுமையான பயிற்சி பெற்றார்.

அவர் பொருத்தமான வயதை எட்டியபோது, "நேபிள்ஸ் அரசன் இரண்டாம் சார்லசின்" (King Charles II of Naples) விருப்பத்தை ஏற்று, "டெல்ஃபின்" (Delphine of Glandves) எனும் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். (டெல்ஃபின், பின்னாளில் முக்திபேறு பட்டம் பெற்றவர் ஆவார்). சிறுமியாக, கன்னிமைக்காக சத்தியப் பிரமாணம் ஏற்றிருந்த டெல்ஃபின், தங்களது திருமண நாளின் இரவு, தன்னுடைய புதிய கணவரிடம், தாம் கன்னிமைக்காக தனிப்பட்ட உறுதிமொழியை ஏற்றிருந்ததாக அறிவுறுத்தினார். அப்போதிருந்த ஆன்மீக சட்டங்களின்படி, டெல்ஃபின் ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களை கைவிடச் செய்யும் உரிமைகள் தமக்கிருந்தும், எல்ஸீர், தமது மனைவி ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களுக்கு மதிப்பளித்து, அவர் கன்னியாகவே வாழ அனுமதிக்க முடிவு செய்தார். அத்துடன், தமது மனைவி ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களை உதாரணமாகக்கொண்டு, தாமும் கன்னிமைக்கான உறுதிமொழி ஏற்றார். இருவரும் இணைந்து, புனிதர் ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) சேர்ந்தனர்.

எல்ஸீர் மற்றும் டெல்ஃபின் இருவரும், சிற்றின்பங்களை ஒழித்த திருமண வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களது வாழ்க்கையில், செப நடைமுறைகளும், இல்லாதோர்க்கு உதவும் நல்லெண்ணங்களுமே மேலோங்கியிருந்தன. இருபது வயதான எல்ஸீர், "அன்சுயிஸ்" (Ansouis) நகரிலிருந்து, தென்கிழக்கு ஃபிரான்சிலுள்ள "புய்மேச்செல்" (Puimichel) நகருக்கு தமது மனைவியுடன் மிகுந்த தனிமையான வாழ்க்கை வாழச் சென்றார். அவருடைய ஊழியர்களை ஒழுக்க நெறிகளுக்கு உட்படுத்தினார். அது அவருடைய குடும்பத்தை கிறிஸ்தவ நன்னெறியின் முன்மாதிரியாக மாற்றியது.

கி.பி. 1309ம் ஆண்டு, தமது தந்தையின் மரணத்தின் பின்னர், அவர் இத்தாலியில்
தனது புதிய பாதையில் சென்றார். அங்கே அவர் தமது நாட்டினரின் நம்பிக்கை மற்றும் ஆதரவைப் பெற்றார். அவர்கள் நார்மன் (Norman) வெற்றியாளர்களை இழிவாகக் கருதினார்கள். 1312ம் ஆண்டு, நேபிள்ஸ் நாட்டின் அரசன் ராபர்ட்டின் (King Robert of Naples) படைத் தலைவராக ரோம் நகருக்கு அணிவகுத்துச் சென்றார். அந்த நகரிலிருந்து பேரரசர் "ஏழாம் ஹென்றியை" (Emperor Henry VII) வெளியேற்றுவதற்கு உதவி செய்ய அணிதிரண்டனர். போருக்குப் பிறகு புரோவென்ஸுக்கு (Provence) திரும்பிய அவர், மறுபடியும் தமது பக்தியான குடும்பத்தை அமைத்தார். அதில் கத்தோலிக்க விசுவாசத்தின் பக்தி மற்றும் விசுவாசமான நடைமுறைகள் அவரது வீட்டின் அனைத்து உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கப்பட்டது.

கி.பி. 1317ம் ஆண்டு, அரசன் ராபர்ட்டின் (King Robert) மகனான கோமகன் சார்லசின் (Duke Charles) ஆசிரியராகப் பொறுப்பேற்க எல்ஸீர் நேபிள்ஸுக்குச் சென்றார். பின்னர், சார்லஸ் சிசிலி இராச்சியத்தின் (Kingdom of Sicily) விகார் ஜெனரல் (Vicar General) ஆனபோது, எல்ஸீர் சார்லசின் கோட்டை ஆளுநராகப் (Castellan) பொறுப்பேற்றார். கி.பி. 1323ம் ஆண்டு, சார்லசின் திருமணத்திற்கு "வலோயிஸ் இல்லத்தின்" (House of Valois) உறுப்பினரான "மேரீயின்" (Marie of Valois) ஆதரவைப் பெறுவதற்காகவும், தார்மீக அல்லது அறிவார்ந்த அறிவுரைகளை வழங்குவதற்கான வீரமிக்க நல்லொழுக்கங்களாலான ஒரு உலக நீதிமன்றத்தை உருவாக்குவதற்காகவும் "ஃபிரான்ஸ் அரசனிடம்" (King of France) தூதராக அனுப்பப்பட்டார். அந்தப் பதவியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தாம் கொண்ட பணிகளை முடித்துவிட்ட நிலையில், அவர் மரித்துவிட்டார்.

அவரது ஆதிக்க எல்லைக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவரது உடல், "ஆப்ட்", வௌக்லுஸ்" (Apt, Vaucluse) நகரிலுள்ள "இளம் துறவியர் தேவாலயத்தில்" (Church of the Friars Minor), ஃபிரான்சிஸ்கன் சீருடையில் அடக்கம் செய்யப்பட்டது.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா