Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் கிளவுட் ✠(St. Cloud)
   
நினைவுத் திருநாள் : (செப்டம்பர் / Sep 07)
✠ புனிதர் கிளவுட் ✠(St. Cloud)
 மடாதிபதி/ ஒப்புரவாளர் :
(Abbot and Confessor)

பிறப்பு : கி.பி. 522
வெசைலஸ், ஃபிரான்சு
(Versailles, France)

இறப்பு : கி.பி. 560
நோஜென்ட்-சுர்-செய்ன், ஃபிரான்ஸ்
(Nogent-sur-Seine, France)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

முக்கிய திருத்தலம் :
தூய கிளவுட் தேவாலயம், ஃபிரான்ஸ்
(Saint-Cloud, France)

பாதுகாவல் :
மின்னசோட்டா மற்றும் தூய கிளவுட் மறைமாவட்டம்
உடலில் தோன்றும் ஒருவித கட்டிகளுக்கெதிராக (Carbuncles)
ஆணி தயாரிப்போர்

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 7

புனிதர் கிளவுட், ஒரு சிறந்த ஒப்புரவாளரும், துறவியும், மடாதிபதியுமாவார்.

இவரது தந்தை, "ஓர்லியன்ஸ்" (Orlans) நாட்டு அரசர் "க்ளோடோமெர்" (King Chlodomer) ஆவார். தாயாரின் பெயர், "குன்தெயுக்" (Guntheuc) ஆகும். இவர், பாரிஸ் நகரில் தமது பாட்டியார் புனிதர் "க்லோட்டில்ட்" (Saint Clotilde) அவர்களால் வளர்க்கப்பட்டார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இவர்களது மாமன் "முதலாம் க்லோட்டேய்ர்" (Clotaire I) இவர்கள் மூவரையும் அரசியல் படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டி காத்திருந்தார்.

ஒன்பது மற்றும் பத்தே வயதான இவரின் சகோதரர்களான "தியோடொல்ட்" (Theodoald) மற்றும் "குந்தர்" (Gunther) இருவரும் மாமனின் சதிக்கு இரையாகி இறந்தனர். ஆனால், கிளவுட் மாமனின் சதியிலிருந்து தப்பி, ஃபிரான்ஸின் பண்டைய தென்கிழக்கு பிராந்தியமான "ப்ரோவேன்ஸ்" (Provence) சென்றார்.

அரியணை சுகத்தை வெறுத்த கிளவுட், புனிதர் "செவெரினஸ்" (Saint Severinus of Noricum) என்பவரின் சீடராகவும் தபசியாகவும் சிரத்தையுடன் கற்றார். இவருடைய சிகிச்சை முறை மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக அநேகர் இவரை நாடி வந்தனர். பின்னர் பாரிஸ் நகர் திரும்பிய கிளவுடை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

பெரும்பாலான மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பாரிஸ் நகர ஆயர் "யூசிபியஸ்" (Bishop Eusebius of Paris) 551ம் ஆண்டு, கிளவுடை கத்தோலிக்க குருவாக அருட்பொழிவு செய்தார். அதன்பிறகு இவர் சில காலம் திருச்சபைக்கு சேவை செய்தார்.

இவர், "வெர்செய்ல்ஸ்" (Versailles) பிராந்தியத்தில், "செய்ன்" (Seine) நதிக்கரையோரம், "நோவிஜென்டம்" (Novigentum) எனும் கிராமத்தில் ஒரு துறவு மடத்தினை கட்டினார். தமது அரச சொத்துக்கள் அனைத்தையும் விற்று, நாட்டிலிருந்த ஏழைகளுக்கு பகிர்ந்தளித்தார். தமது அண்டை நாட்டிற்கும் உதவி செய்தார். பலரின் வாழ்வில் ஒளியேற்றிய கிளவுட், ஒன்றுமில்லாதவராய் இறைவனை மட்டுமே சொத்தாகக் கொண்டார். பின்னர் இறைவனை இதயத்தில் ஏற்றவராய் தனது 38வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா