✠ புனிதர் பெர்னார்ட் ✠(Bernard of
Clairvaux) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்
/
Sep
15) |
✠ புனிதர் கேதரின் ✠(St. Catherine of Genoa)
✠கைம்பெண் :
(Widow)
✠பிறப்பு : கி.பி. 1447
ஜெனோவா, இத்தாலி
(Genoa, Italy)
✠இறப்பு : செப்டம்பர் 15, 1510,
ஜெனோவா, இத்தாலி
(Genoa, Italy)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠அருளாளர் பட்டம் : கி.பி. 1675
திருத்தந்தை பத்தாம் கிளமென்ட்
(Pope Clement X)
✠புனிதர்பட்டம் : கி.பி. 1737
திருத்தந்தை 12ம் கிளமென்ட்
(Pope Clement XII)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர் 15
✠பாதுகாவல் :
மணப்பெண்கள், குழந்தையில்லா மக்கள், கடினமான் திருமணங்கள்,
தமது பக்திக்காக ஏளனம் செய்யப்படும் மக்கள், விசுவாசமின்மையால்
பாதிக்கப்பட்டோர், கைம்பெண்கள்
ஜெனோவா நகர் புனிதர் கேதரின் ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க
திருச்சபையின் புனிதரும் ஆன்ம பலம் கொண்டவருமாவார். இவரது
ஆன்மீக அனுபவங்களும் ஏழைகள் மற்றும் நோயுற்றோர் பால் அவர்
கொண்ட அன்பும், அவர்களுக்கு அவர் ஆற்றிய சேவைகளும் வெவ்வேறு
நூல்களில் காணப்படுகின்றன.
தமது வாழ்வின் பெரும்பான்மையான நாட்களை நோயுற்றோருக்கு சேவை
செய்வதிலேயே கழித்தவர். முக்கியமாக, 1497 - 1501 ஆண்டுகளில்
ஜெனோவா நகரில் ஏற்பட்ட கொள்ளை நோயான பிளேக் நகரையே
சூறையாடியபோது, இவர் அயராமல் நோயுற்றோருக்கு சேவையாற்றினார்.
உயர்குடியில் பிறந்த கேத்தரினின் பெற்றோர், இத்தாலிய
பிரபுகளின் குடும்பங்களைச் சேர்ந்த "ஜாகபோ ஃபியெஸ்ச்சி"
மற்றும் "ஃபிரான்சிஸ்கா தெ நெக்ரோ" (Jacopo Fieschi and
Francesca di Negro) ஆவர். கேதரின் தமது பெற்றோரின் ஐந்து
குழந்தைகளில் கடைக்குட்டியாக பிறந்தவர். இவரது பெற்றோர் இரண்டு
முன்னாள் திருத்தந்தையருடன் தொடர்புள்ளவர்களாவர். கேதரினுடைய
தந்தை "ஜாகபோ" பின்னாளில் "நேப்பிள்ஸ்" (Naples) மாநிலத்தின்
"வைசிராயாக" (Viceroy) பதவி வகித்தவர் ஆவார்.
அகுஸ்தீனிய அருட்சகோதரியான (Augustinian nun) தமது உடன்பிறந்த
சகோதரி "லிம்பானியாவால்" (Limbania) கவரப்பட்ட கேதரின், தனது
சிறுவயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று மிகவும் ஆசை கொண்டார்.
தமது பதின்மூன்று வயதில் கன்னிமடமொன்றில் சேர விரும்பி,
கன்னிமடத்தில் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால்,
இவரது இளம் வயதைக் காரணம் காட்டி இவரது விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர், கேதரின் மீண்டும் அதற்காக
முயற்சிக்கவில்லை.
கி.பி. 1463ம் ஆண்டு, இவரது தந்தை மரணமடைந்த பிறகு, தனது 16ம்
வயதில், தமது பெற்றோரின் விருப்பத்துக்கிணங்க, ஜெனோவா
பிரபுக்களில் ஒருவரான "கியூலியானோ அடோர்னோ" (Giuliano Adorno)
என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
வியாபார உலகில் பல்வேறு அனுபவங்களையும் மத்திய கிழக்கு
நாடுகளில் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவங்களையும் மொண்டிருந்த
"கியுலியானோ", தமது திருமணத்திர்கேன்றே ஜெனோவா
திரும்பியிருந்தார். உண்மையில், அவர்களது திருமணம் இரண்டு
குடும்பங்களுக்கும் இடையேயான சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும்
ஒரு சூழ்ச்சியானதாகும். அவர்களது திருமண வாழ்க்கை
துரதிருஷ்டவசமாக மாறியது. குழந்தைப் பேறு இல்லாமல் போனதுடன்,
கியுலியானோ விசுவாசமற்றவராக நிரூபிக்கப்பட்டார். இவர்களது
திருமணம் பரிதாபகரமானதாக மாறியது. வன்முறை மனமுடைய
"கியூலியானோ" சீர்கெட்ட, மற்றும் ஒரு ஊதாரியாக இருந்தார்.
அவர், தமது மனைவி கேத்தரினின் வாழ்வை துன்பகரமாக ஆக்கினார்.
இவரால் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் மிகவும்
துன்பப்பட்டார். விவரங்கள் மிகக் குறைவுதான் என்றாலும்,
கேதரின் தமது கணவருடன் அமைதியாக, ஆனால் துன்பமுடன் பத்து
ஆண்டுகளைக் கழித்தார். துன்பம் தாளாத கேதரின், இறைவன் தமக்கு
நோய்ப் படுக்கை தரவேண்டுமென மன்றாடினார். ஆனால், இவரது
மன்றாட்டு கேட்கப்படாமலேயே சென்றது.
குடும்ப வாழ்வில் இருக்கும்போதும் கூட இவரின் மனம் இறைவனையே
நாடிச் சென்றது. ஒருமுறை, கி.பி. 1474ம் ஆண்டு, மார்ச் மாதம்,
22ம் தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வாங்கும் வேளையில், இறைவன்
மீது கொண்ட தீவிர அன்பால் இறைவனின் திருக்காட்சியை முதன்
முறையாக காணப்பெற்றார். இதனால் மிக மகிழ்ச்சி அடைந்தார்
கேதரின். இதற்கிடையில் அவரின் கணவரும் தன் சொத்துக்கள்
அனைத்தையும் இழந்தார்.
கேதரினின் ஆன்மீக வாழ்வால் அவரின் கணவர் ஈர்க்கப்பட்டார்.
அவரும் இறைவனை நம்பி ஏற்றுக்கொண்டார். தானும் ஓர் துறவற
இல்லத்தில் சேர்ந்து தொண்டாற்ற எண்ணிய இவர், "பிரான்சிஸ்கன்
மூன்றாம் நிலை" (Franciscan tertiary) துறவற சபையில்
இணைந்தார். இதனால் கணவரிடமிருந்து பிரிந்து, நோயாளிகளை
கவனிக்கும் பொறுப்பை ஏற்ற கேதரின், யாதொரு துறவற சபையிலும்
இணையவில்லை. அதன்பின்னர், இருவரும் ஜெனோவாவின் "பம்மடோன்"
(Pammatone) எனும் நகரின் பெரிய மருத்துவமனை ஒன்றில் தங்கி
நோயாளிகளுக்கு சேவை புரிந்தனர். இறுதியில், கேதரின்
அம்மருத்துவமனையின் மேலாளராகவும் பொருளாளராகவும் ஆனார்.
அதன்பிறகு மீண்டும் மீண்டும் இறைவனின் தரிசனத்தை பெற்ற
கேதரின், பல ஆண்டுகள் உண்ணா நோன்பிருந்து, செபித்து, திவ்ய
நற்கருணை மட்டுமே உட்கொண்டு, உயிர் வாழ்ந்தார். வாழ்க்கை
மற்றும் மரணத்திற்கு இடையே பல நாட்கள் வேதனை அனுபவித்த கேதரின்
கி.பி. 1510ம் ஆண்டு, மரணமடைந்தார். |
|
|