Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

இயேசுவின் வழியினிலே

 

✠ புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன் ✠(St. Andrew Kim Taegon)
  Limage contient peut-tre : 1 personne, debout, chapeau et ciel  
நினைவுத் திருநாள் : (செப்டம்பர்/ Sep 20)
✠ புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன் ✠(St. Andrew Kim Taegon)

 கொரியா நாட்டின் பாதுகாவல் புனிதர் :
(Patron Saint of Korea)

பிறப்பு : ஆகஸ்ட் 21, 1821
சொல்மோ, டான்க்ஜின், கொரியா
(Solmoe, Dangjin, Korea)

இறப்பு : செப்டம்பர் 16, 1846 (வயது 25)
ஹேன் நதி, ஹேன்சியோங், ஜோசியோன்
(தற்போது சியோல், தென் கொரியா)
(Han River, Hanseong, Joseon)
(Now Seoul, South Korea)

ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் திருச்சபை
(Anglican Church)

அருளாளர் பட்டம் : கி.பி. 1925

புனிதர் பட்டம் : மே 6, 1984
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்
(Pope John Paul II)

முக்கிய திருத்தலம் :
ச்சோல்டுசான் (மறைசாட்சியின் மலை),
சியோல், தென் கொரியா
(Chŏltusan (Martyr's Mount), Seoul, South Korea)

நினைவுத் திருநாள் : செப்டம்பர் 20

பாதுகாவல் : கொரிய மத குருமார்கள் (Korean Clergy)

புனிதர் ஆண்ட்ரூ கிம் டேகொன், கொரிய நாட்டில் பிறந்த முதல் கத்தோலிக்க குருவும், கொரிய நாட்டின் பாதுகாவலரும் ஆவார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கொரியாவில் கத்தோலிக்கம் மெதுவாக வேர் விட ஆரம்பித்திருந்தது.

புனிதர் ஆண்ட்ரூ கிம், "யங்க்பன்" (Yangban) என்பவருக்கு பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கிறிஸ்தவர்களாக மனம் மாறியவர்கள். அக்காலத்தில், கிறிஸ்தவம் சம்பந்தமாக பேசுவதுகூட தடை செய்யப்பட்டிருந்தது. கிறிஸ்தவ நடவடிக்கைகள் காரணமாக புனிதரின் தந்தை துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.

பதினைந்து வயதில் திருமுழுக்கு பெற்ற கிம், போர்ச்சுகீசிய காலனியிலுள்ள (Portuguese colony) பள்ளியில் கல்வி கற்றார். அவர் புனிதராக பட்டமளிக்கப்பட்ட 'லோலோம்போய்', 'பொகவு', 'புலாக்கன்', 'பிலிப்பைன்ஸ்' (Lolomboy, Bocaue, Bulacan, Philippines) ஆகிய இடங்களிலும் கல்வி கற்றார்.

சுமார் ஒன்பது வருடங்களின் பின்னர், 1844ம் ஆண்டு, அவர் "ஷங்காய்" (Shanghai) நகரில் ஒரு ஃபிரென்ச் ஆயர் (French bishop) "ஜீன்-ஜோசப்" (Jean-Joseph-Jean-Baptiste Ferrol) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், அவர் மத போதனை செய்வதற்காகவும் நற்செய்தி அறிவிக்கவும் கொரியா திரும்பினார்.

'ஜோசியன்' (Joseon Dynasty) வம்ச காலத்தில் கிறிஸ்தவம் நசுக்கப்பட்டது. எண்ணற்ற கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டு மற்றும் மரண தண்டனை அளிக்கப்பட்டனர். கத்தோலிக்கர்கள் தமது விசுவாசத்தை இரகசியமாக கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.

இந்நேரத்தில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட பல்லாயிரம் கிறிஸ்தவர்களில் புனிதர் ஆண்ட்ரூ கிம்மும் ஒருவர். 1846ல், தமது 25ஆம் வயதில் ஆண்ட்ரூ கிம் 'சியோல்' (Seoul) நகரருகேயுள்ள "ஹான் நதியில்" (Han River) கோரமாக துன்புறுத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.


 

 
 

துன்பங்கள் தோன்றிடும் வேளையிலே நீ துணை தந்து காத்திட வேண்டுமம்மா