✠ புனிதர் ஆல்பர்ட் ✠(St. Albert Avogadro) |
|
|
|
நினைவுத் திருநாள் :
(செப்டம்பர்/
Sep 25) |
✠ புனிதர் ஆல்பர்ட் ✠(St.
Albert Avogadro)
✠ஆயர் : (Bishop)
✠பிறப்பு : கி.பி. 1149
குவால்டியெரி, இத்தாலி
(Gualtieri, Italy)
✠இறப்பு : செப்டம்பர் 14, 1214
அக்ரெ, எருசலேம் அரசு
(Acre, Kingdom of Jerusalem)
✠ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
✠நினைவுத் திருநாள் : செப்டம்பர்
25
கத்தோலிக்க நியதிகளின் வழக்குரைஞரான ஆல்பர்ட், கி.பி. 1204 முதல்
தமது மரணம் வரை எருசலேமின் முதுபெரும் இலத்தீன் தலைவராக பணியாற்றினார்.
இத்தாலி நாட்டின் "குவால்டியெரி" (Gualtieri) எனுமிடத்தின் ஓர்
உன்னத குடும்பத்தில் பிறந்த இவர், சட்டமும் இறையியலும் பயின்றார்.
திருச்சிலுவை (Holy Cross) சபையில் குருவானார். கி.பி. 1184ம்
ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள போப்பியோ (Bobbio) என்ற மறை மாவட்டத்திற்கு
ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கி.பி. 1205ம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்தவ மக்களின்
பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக
அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அரசரின் கீழ்
அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். கி.பி. 1187ம் ஆண்டு, பேரரசரிடமிருந்து
அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார். அன்றிலிருந்து
எருசலேம் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்ந்தனர்.
சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கைகளில் அகப்பட்டனர்.
ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து
சுதந்திரத்துடன் அமைதியாக வாழ வழிவகுத்தார்.
தூய ரோம பேரரசர் "பிரடெரிக் பப்பரோஸ்ஸா" (Holy Roman Emperor
Frederick Barbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார்.
அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும்
திருத்தந்தை "மூன்றாம் கிளமெண்ட்டிற்கும்" (Pope Clement III)
இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப்
புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக
மாற்றினார்.
ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ (Akko) என்ற இடத்திற்கு
மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது.
அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார். துறவிகள் தனித்தனி குகைகளிலும்,
செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார்.
கி.பி. 1209ம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார்.
அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து
செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து
வாழ வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க
துறவிகளை தூண்டினார்.
கி.பி. 1254ம் ஆண்டு திருத்தந்தை 4ம் இன்னொசெண்ட் அவர்கள், இவர்
எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ,
அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில்
நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள
அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக
சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே
கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து வெளியேறியபின் புனித
திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.
|
|
|